தரமான மெட்டல் ரூஃபிங் பொருட்களுக்கு என்றென்றும் ஹிந்துஸ்தான்...

24 ஜனவரி 2024   05:30 AM 19 பிப்ரவரி 2019   12:03 PM


தரமான ரூஃபிங் மற்றும் அதன் துணைப் பொருட்களின் தேவை இன்றைய கட்டுமானத்துறையில் பெரிய அளவு இருக்கிறது. அதிலும் தரமான கூரைப் பொருட்களே மக்களின் விருப்பமாகவும் உள்ளது. இத்துறையில் பல்லாண்டு அனுபவம் பெற்ற ஹிந்துஸ்தான் ஹார்டுவேர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர், திரு. டி. நடராஜன், ய.சி., அவர்களிடம் பேசிய போது.

நீங்கள் இப்போது எந்த வகையான மெட்டல் ரூஃபிங் ஷீட்டுகளை தயாரிக்கிறீர்கள்?

‘‘நாங்கள் கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டத்தின்  JSW COLOURON+ பொருட் களின் அதிகாரப்பூர்வ விநியோகஸ் தர்களாக கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். JSW COLOURON+  தற்போதைய சந்தையில் மக்களால் பெரிதும் கவரப்பட்டு, அதன் தரத்தினால் மிகுந்த வரவேற்பைப் பெற்று ள்ளது. நாங்கள் எங்கள் தயாரிப்பு  யூனிட்டை கோவையில் நிறுவி கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 70 அதிகாரப் பூர்வமான டீலர்கள் மூலமாக விநியோகித்து வருகிறோம்’’.

எந்த வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தயாரிப்பு உகந்தது?

‘‘தொழிற்சாலை, ஸ்பின்னிங் மில்கள், கோழிப் பண்ணை, விளையாட்டுக் கூடம், பள்ளி கல்லூரிகள், திருமண மண்டபம், கார் பார்க்கிங் மற்றும் வீடுகளுக்கும் எங்கள் ரூஃபிங்  ஷீட்டுகள் பல வண்ணங்களில் அலங்கரிக்க ஏற்றதாகும்’’.

மற்ற நிறுவனம் தயாரிக்கும் Uட்டுகளுக்கும் உங்கள் ஷீட்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?

‘‘எங்கள் நிறுவன Uட்டுகளில் உள்ள வண்ணத்திற்கு மட்டும் 10 வருட உத்திரவாதத்தை அளித்திருக்கிறோம். இடையில் ஏதேனும் தொழில்நுட்பத் தயாரிப்பு குறைகள் இருந்தால் நாங்கள் அதனை இலவசமாக மாற்றித் தந்து விடுவோம். ஷீட்டுகளின்  தடிமன் மற்றும் கோட்டிங் அளவு ஆகியவை ஷீட்டின் பின்னால் அழிக்க முடியாத மையினால் (Non Erasable Marking) அச்சடிக்கப்பட்டிருக்கும். மேலும் ஷீட்டுகளின் மேற்புறம் பாதுகாப்பு கோட்டிங் (Guard Film)  இருப்பதால் உங்கள் இடம் சென்று கூரையில் ஏற்றும் வரை எந்தவிதமான வண்ண சேதாரமின்றி எடுத்து செல்லலாம். மேற்கூறிய அனைத்தும் மற்ற நிறுவன ஷீட்டுகளில் நீங்கள் எதிர்பார்க்க முடியாது’’.

உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புத் திறன் எவ்வளவு?

‘‘எங்கள் நிறுவனத்தில் உள்ள அதிநவீன இயந்திரங்கள் மூலம் ஒரு மாதத்திற்கு சுமார் 20 லட்சம் சதுர அடி வரை தயாரிக்க முடியும். இதனால் நுகர்வோர் தேவை அறிந்து சரியான நேரத்தில் எங்களால் கொடுத்துவிட முடியும்.மேலும் எந்நேரமும் சுமார் 12 வண்ணங்களில் 600 டன்களுக்கு மேல் ஸ்டாக் வைத்திருப்பதால் நுகர்வோர்களின் தேவை எவ்வளவாக இருந்தாலும் குறித்த நேரத்தில் தர இயலும்’’.

உங்கள் ரூஃபிங் ஷீட்டுகளில் துணைப் பொருட்கள் என்னென்ன தரமுடியும்?

‘‘எங்கள் ஷீட்டுகளுக்குத் தேவையாக ரிட்ஜ் ஷீட்டுகள், கோம்பை ஷீட்டுகள், தோனி ஷீட்டுகள், ஸ்குருக்கள், பாலிகார்பனேட் ஷீட்டுகள், Roof Vent  மற்றும் வெப்ப காப்பு ஷீட்டுகள் (Roof Insulation Sheet) அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும்’’.

உங்களது வெற்றிகரமான வணிகத்தின் ரகசியம்?

‘‘தரமான பொருள், சரியான எடை, அளவு, நியாயமான விலை மற்றும் குறித்த நேர டெலிவரி இவை எல்லாவற்றையும் விட விற்பனைக்குப் பின் சேவை (After Sales Service) மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, இதுவே எங்கள் நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம்’’ என்றார் திரு.  நடராஜன். 

வணிகத் தொடர்புக்கு :  

ஹிந்துஸ்தான் ஹார்ட்வேர்ஸ், 
ஹிலி.356, பட்டேல் ரோட், 
கோவை - 641 009. 

கோவை : 0422 - 4500500 (30  Lines)

கைபேசி : 98946 93111, 93848 25422, 25423, 25424, 75399 71222. 
மின்னஞ்சல் :  info@hindustanhardwares.in , 
W: www.hindustanhardwares.in

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067911