ஒரு கட்டுமானம் என்பது கட்டிடப் பணிகள், பேப்ரிகேஷன் பணிகள் மற்றும் இன்டீரியர் பணிகள் இந்த மூன்றும் குறைவின்றி நடந்து முடிந்தால் தான் முழுமையைப் பெறும்.
கோவையைச் சேர்ந்த ஜே வி குரூப் ஆப் கம்பெனிஸ், கட்டுமானங்களை உருவாக்குவதோடு இல்லத்திற்கு ஏற்ற ஃபேப்ரிகேrன் பணிகள், இன்டீரியர் பணிகள் ஆகியவற்றையும் வாடிக்கை யாளர்களுக்கு செய்து தருகிறது.
கோவை ஜே வி குழுமத்தின்நிர்வாக இயக்குநர் திரு. லிங்க ராஜ் அவர்களிடம் நிறுவனத்தின்செயல்பாடுகள் பற்றி கேட்ட போது.,
‘‘ஜே வி குழுமம் என்பது ஜேவி ப்ரோமோட்டர்ஸ், ஜேவி பேப்ஸ், மற்றும் ஐடியாக் இன்டீரியர் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கி யதாகும். இதன் மூலம் நாங்கள் ஒரு கட்டிடத்தின் அனைத்து விதமான பணிகளையும் வாடிக்கை யாளர்களுக்கு முழுமையாகச் செய்து தருகிறோம்’’ என கூறினார்.
வாடிக்கையாளருக்கு தேவையின் அடிப்படையில் வீடு கட்டித் தரும் போது நீங்கள் செய்யக் கூடிய பணிகள் என்ன?
‘‘வாடிக்கையாளருக்கு அவர்க ளது பட்ஜெட்டில் அடங்கும் படியான நல்ல லொகேrனில் அருமையான சுற்றுச்சூழலோடு வில்லங்கம் இல்லாத மனையை தேடி தருகிறோம். அடுத்ததாக வீடு கட்ட, வீட்டுக் கடனைப் பெறுறுற்வதற்கான ஆலோசனை களைத் தருகிறோம். அடுத்து நிலம் பதிவுச் செய்வதற்கும், அப்ரூவல் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்கிறோம். வாடிக்கையாளர்கள் விரும்பும்படி அவர்களது பட்ஜெட்டுக்கு ஏற்றாற் போல பிளான் & எலிவேrனை டிசைன் செய்து தருகிறோம். அதன் பிறகு நல்ல தரத்துடன் வாடிக்கையாளரின் கனவு இல்லங்கள், உருவாகும்படி தரத்தை கண்காணிக்கிறோம். அதன் பிறகு காம்பவுண்ட், நுழைவு வாயில், கதவு, ஜன்னல்கள், படிகட்டு, பால்கனிகள், போன்ற இடங்களில் தேவைக் கேற்றாற்போல் கிரில் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபேப்ரிகேrன் பணிகளைச் செய்து தருகிறோம்.
அதன் பிறகு இறுதியாக வாடிக்கையாளர்கள் மனம் விரும்பும்படி ஹால், பெட்ரூம், குழந்தைகள் அறை, பூஜை அறை போன்றவற்றிற்கு பட்ஜெட்க்கு ஏற்றாற் போல இன்டீரியர் பணிகளை செய்து தருகிறோம். பட்ஜெட் மற்றும் லக்ஸரி வீடுகளை கட்டித் தந்து வாடிக்கையாளரின் கனவை நிஜமாக்குவதே
ஜே வி குழுமத்தின் தலையாய நோக்கம்’’.
ஜே வி குழுமத்தின் மூலம் ஒரு வாடிக்கையாளர் வீட்டை கட்டும் போது அவருக்கு உண்டாகும் பலன்கள் என்ன?
‘‘பொதுவாக, ஒரு வாடிக்கையாளர் வீடு கட்டும் போது நிலத்தை தேர்வு செய்வது, பதிவு செய்வது, அனுமதி பெறுவது போன்ற பணிகள் காரணமாக அவருக்கு அலைச்சல் மற்றும் டென்rன் அதிகமாகும். இவற்றையயல்லாம் நாங்களே பார்த்துக் கொள்வதால் டென்rன் குறைவதோடு, அவர்களின் நேரம் வீணாவது தவிர்க்கப்படுகிறது. தாமாகவே வீடு கட்டுவதை விட ஜே.வி குழுமம் மூலம் வீடு கட்டும்போது கட்டுமானச் செலவு பெரிதும் குறைகிறது.
அது மட்டுமில்லாமல், எங்களது கண்ணைக் கவரும் அசத்தலான ஆர்கிடெக்ட் பிளான்களில் அவர்களின் கனவு இல்லங்கள் மிளிர்கின்றன’’.
IDEAC நிறுவனத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்..
‘‘2013ல் மூன்று கார்பெண்டர்கள் உதவியுடன் ஐடியாக் இன்டீரியர் நிறுவனத்தை துவங்கினோம். அதுதான் ஜேவி குழுமத்தின் முதற்படி. கூடவே நல்ல தரத்தில் வீட்டு கட்டுமானங்களையும் உருவாக்கத் துவங்கினோம். இந்த நாலரைஆண்டுகாலத்தில் ஐடியாக் நிறுவனம் பல்வேறு இன்டிரியர் பணிகளை நிறைவு செய்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று நல்ல முறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
காசாபிளாங்கா, அட்ராய்ட், எல்சியம் ப்ராப்பர்டீஸ், வைட் ஹவுஸ், டிவிஎச், பிளாட்டினா, இக்லொ கன்ஸ்ட்ரக்rன், செந்தில் கன்ஸ்ட்ரக்ஷன், காசா கிராண்டே, ஸ்ரீவஸ்தா, அனன்யா யrல்டர்ஸ். போன்ற பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு இன்டீரியர் பணிகளைச் செய்து தந்திருக்கிறோம். அது
மட்டுமன்றி, கோவை கொடிசியா அருகே உள்ளா செட்டிநாட் பில்டர்ஸின் புராஜக்டின் அனைத்து ஃபிளாட்டுகளுக்கும் இன்டீரியர் பணிகளை செய்து தர ஒப்பந்தமாகி இருக்கிறோம்.
மேலும், பல்வேறு நிறுவனங்கள் மூலமாக எங்களுக்கு கோவையில் பல பிளாட்டுகளுக்கு இன்டீரியர் செய்து தரும் பணிகளை ஏற்று இருக்கிறோம்” என்றார் டாக்டர். லிங்கராஜ் பெருமிதத்துடன்.
ஜேவி குழுமத்தின் சேவைகளைப் பெற :
எண்: 37, வி.ஜி. காம்ப்ளக்ஸ், வெள்ளப் பணாய்க்கன் புதூர்,
(சரவணம்பட்டியிலிருந்து துடியலூர் ரோடு),
சரவணம்பட்டி, கோவை- 641035,
கிளைகள் - (திருப்பூர் மற்றும் ஈரோடு)
போன்: 84893 44123/ 9655144123,
இ மெயில்: lingus.sai@gmail.com
W- jvgroupofcompanies.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067917
|