கோவை கட்டுமானத்துறை வளர்ச்சியில் எங்கள் பங்கு..!

24 ஜனவரி 2024   05:30 AM 09 பிப்ரவரி 2019   12:40 PM


கோவை கட்டுமானப் பொறியாளர் சங்கம் 2007 ல்  சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொறி.கே. ராகவன் அவர்களின் முயற்சியால் 26 பேரைக் கொண்டு துவங்கப்பட்டது. இந்த 12 ஆண்டு காலத்தில் இச்சங்கத்தின் செயல்பாடுகளால் கவரப்பட்டு, சங்கத்தில் இணைவதன் மூலம் பல  பயன்கள் இருப்பதை உணர்ந்து மாதந்தோறும்  பல புதிய பொறியாளர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்து இன்று 975 உறுப்பினர்களைக் கொண்டு கோவை கட்டுமானப் பொறியாளர் சங்கம் வளர்ந்து நிற்கிறது.  

திரு. ராகவன் சங்கத்தைப் பற்றிக் கூறும் போது,  ‘‘ஈரோடு, சேலம் போன்ற ஊரில் உள்ள பொறியாளர்கள் கோவையில் ஒரு கட்டுமானச் சங்கத்தை துவங்கலாமே என என்னை வலியுறுத்த 2007 ல் இந்தச் சங்கத்தை பொறியாளர் நண்பர்களுடன் சிலருடன் சேர்ந்து துவங்கினேன். இந்தச் சங்கத்தைத் துவங்கும் போது இது இவ்வளவு வலிமையான சங்கமாக உருவாகும் என நினைக்கவில்லை. உறுப்பினர்களின் ஈடுபாடும் அனைத்து தலைவர்களின் அயராத உழைப்பும் தான் கோவை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தை இத்தனை பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது இன்று கோவை கட்டு
மானத்துறையில் எங்கள் சங்கத்தின் பங்கு கணிசமானது’’ எனக் குறிப்பிடுகிறார்.

சங்கத்தின் சமூக செயல்பாடுகள் குறித்து தலைவர் பொறி.வீ.மூ.மோகன்ராஜ் கூறும்போது, ‘‘சங்க உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் தொழிற்நுட்ப கருத்தரங்கு நடத்தி வருகிறோம். அடிக்கடி சந்திப்புக்கூட்டம் வைத்து தொழில் தொடர்பான பிரச்சனைகள்  ,சிக்கல்களை விவாதிக்கிறோம். அவர்களின் உடல்நலம் மேம்பாட்டிற்கு பலவித விளை யாட்டு நிகழ்வுகளை நடத்துகிறோம். சங்க உறுப்பினர்கள் இடையே சிறந்த பொறியாளர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, கொடுத்து அவர்கள் பணியை ஊக்குவிக்கிறோம். உறுப்பினர்களுக்கு மெடிக்கல் கேம்ப், யஹல்த் செக்கப் வசதி செய்து தருகிறோம்.

எங்கள் சங்கத்தில் குரூப் பர்சேஸ்ஸிங் கான்செப்ட் உறுப்பினர்களுக்கு மிகவும் பயன்படக் கூடியது. அதாவது சிமெண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் சங்கத்தின் மூலமாக சந்தை விலையை விட குறைவாக கொள்முதல் செய்கிறோம். இதனால் உறுப்பினர்களும் பொதுமக்களும் மிகவும் பயனடைகிறார்கள்.

 இது போக கட்டுமானத் தொழிலாளர்களின் அறிவுச் சார்த் திறனை மேம்படுத்த பயிற்சி மையங்கள் நடத்துகிறோம். மேலும் சிவில் பொறியியல் பயிலும் பல கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையே சிவில் பொறியியல் தொடர்பான வினா விடை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வை ஊட்டுகிறோம். கல்லூரி மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு சென்று பார்வையிட்டு அதன் மூலம் அவர்தம் பொறியியல்அறிவை அதிகரிக்க நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் ’’என்கிறார் பெருமிதத்துடன்.

கோவை பொறியாளர்கள் சங்கத்தில் இணைய  தொடர்புக்கு : 98422 84477 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067921