சென்னை பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாலத்தைக் கடினமான சூழ்நிலைகளின் நடுவே கட்டி முடித்தது பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான அரசு. ஆனால், சில தொழிற்நுட்ப பிரச்சனைகள் காரணமாக குறித்த நேரத்தில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடியவில்லை. “இன்னும் மூன்று மாத காலத்தில் தேர்தல் வரப்போகிறது. பாலத்தைக் கட்டி முடித்து விட்டால், காங்கிரஸ் ஆட்சிக்கு நல்லபேர் கிடைக்கும்’ எனச் சொன்னார்கள் உடனிருந்தவர்கள். “எந்த மக்கள் பணியும் நாட்டை வளர்க்கத்தான் அன்றி, கட்சியை வளர்க்க இல்லை’ எனச் சொன்னதோடு ,“இப்பொழுது இருக்கும் கடுமையான நிதி நெருக்கடியில் நான் இந்த பாலக்கட்டுமானத்தின் பக்கம் கவனம் செலுத்தினால், அது காமராஜ் தேர்தலுக்காக வேலை செய்கிறார்’ என மக்கள் நினைத்து விடக்கூடும். எனவே, தேர்தலுக்குப் பின் இந்தப் பணியை பார்த்துக் கொள்ளலாம்’ என்றார் காமராஜர்.
95 சதவீத பணிகள் முடிந்த அந்தப் பாலத்தின் பணிகளை, அடுத்து வந்த ஆட்சியாளர்கள் நிறைவு செய்து புகழ்மாலையை சூடிக் கொண்டார்கள் என்பது வேறு விrயம். காமராஜர் இது போன்ற விடுபட்ட பணிகள் குஷீத்த வழிகாட்டுதலை அடுத்து வரும் ஆட்சியாளர்களுக்கு எடுத்துரைப்பதில் வழிகாட்டியாக இருந்தாரே தவிர, எப்போதும் கல்வெட்டுகளில் தன் பெயர் பொறிக்க விரும்பியதே இல்லை.
ஆனால், இப்போதைய தலைவர்கள் ஆட்சி முடியும் தருவாயில் தான் திட்டங்களையே அறிவிக்கிறார்கள். அதாவது “அடுத்த முறையும் எங்களுக்கே வாக்களித்தால், இந்தத் திட்டங்களை முடிப்போம்’ என்கிற மக்கள் மீதான நெருக்குதல் அது. (ஆனால், அடுத்த முறையும் அவர்கள் செய்யப் போவதில்லை என்பதை நாம் அறிவோம்).
சென்ற மாதம், மதுரை தோப்பூரில் 202 ஏக்கரில் 1300 கோடி செலவில் எய்ம்ஸ் என்னும் உயர்தர மருத்துவமனை அமைப்பதற்கு மோடி அடிக்கல் நாட்டி விட்டு போயிருக்கிறார். அதாவது தமிழக மக்கள் மீது மத்திய அரசின் கருணைப்பார்வை வீசப்படுகிறதாம். ஆட்சி முடியும் தருவாயிலாவது இவர்களுக்கு தமிழக மக்கள் மீது கருணை வழிகிறது என்பது பாராட்டப்பட வேண்டியதுதான். என்றாலும், இதற்கு முன் அறிவிக்கப்பட்ட நாடு முழுதுவதுமான 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை என்ன?
1. ஒப்புதல் அளிக்கப்பட்ட 13 மருத்துவமனைகளில் ஜம்மு, காஷ்மீர், பிஹார், தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் வரவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு இதுவரை எந்தப் பணமும் ஒதுக்கப்படவில்லை. இங்கு எய்ம்ஸ் மருத்துவ மனைகள் எப்போது துவங்கப்படும்? என்பதற்கு எவ்வித கால வரையரையும் வகுக்கப்படவில்லை.
இதற்கு முன் ஸ்மார்ட் சிட்டி என பரபரப்பு அறிவிப்பு விட்டு மக்களை உற்சாகப்படுத்திய மத்திய அரசு அதற்காக இதுவரை ஒரு செங்கல்லை கூட சூளையில் வேக வைக்கவில்லை என்பது தான் உண்மை. இது அறிவிப்புகளைச் சொல்லியே ஆசை காட்டி ஆட்சியைப் பிடிக்கும் தந்திரம் என்பதை மக்கள் அறிவார்கள். ஆட்சியாளர்கள் மக்களைவிட தந்திரம் மிகுந்தவர்களாக இருக்கலாம். ஆனால், மக்களுக்கு தந்திரமெல்லாம் தெரியாது, எந்திரம் தான் தெரியும். ஓட்டு எந்திரம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067897
|