உலகின் பல நாடுகளில் ஜல்லிக்கு மாற்றாக இருக்கும் லேகா களிமண் உருண்டைகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. நமது நாட்டில் இது புது அறிமுகமாக இருந்தாலும் மெதுவாக பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.
கான்கிரீட் கட்டுமானங்களில் இருக்கக் கூடிய பொதுவான பிரச்சினை டெட்லோடு என்று சொல்லப் படும் பயன்பாடு குறைந்த பகுதிகள் ஆகும். அந்த அமைப்புகளின் எடையை குறைக்க கட்டுமானத்துறை நிபுணர்கள் புதிய நுட்பங்களையும் அவ்வப்போது கடைப்பிடித்து வருகின்றனர். இந்த லேகா களிமண் உருண்டைகள் ஆயிரக்காணக்கான டிகிரி வெப்ப நிலையில் களிமண்ணை சூடாக்கி உருக்கிய பின்பு பல்வேறு அளவுகளுள்ள சிறுசிறு உருண்டைகளாக தயார் செய்யப்படுகின்றன. இலகுரக கான்கிரீட் கட்டுமானங்கள் அமைப்பதற்கு உகந்த வகையில் இவை எடை குறைந்த தன்மையுடையவை.
மேலும், குளிர் மற்றும் வெப்பத்தை தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால் பல நாடுகளில் கட்டுமான வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அஸ்திவாரத்திற்குள் வரக்கூடிய கான்கிரீட் அமைப்புகளுக்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் தண்ணீரால் வரக்கூடிய அரிப்புக்ள் தடுக்கப்படுவதோடு, கட்டிடத்தின் எடையை எளிதாக தாங்கும் தன்மை உடையதாகவும் இருக்கும். வெப்பத்தையும், குளிரையும் கடத்தாத தன்மை உடையதால் தரைத்தளம் அமைப்பதற்கு பயன்படுத்தினால் தட்பவெப்ப நிலை வேறுபாடுகள் தடுக்கப் படும். சிமெண்ட்டின் தரத்தை உயர்த்தும் என்ஹான்ஸர்கள் எனப்படும் ஊக்கி களோடு இந்த லேகா களிமண் உருண்டை களையும் கலந்து பயன் படுத்தலாம். அதன் காரணமாக கட்டுமானங்கள் எடை குறைந்த தன்மையும், பளுதாங்கும் தன்மையும் கொண்டதாக இருக்கும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067916
|