கட்டுமானத்துறையின் புதிய ஒளி!

24 ஜனவரி 2024   05:30 AM 04 பிப்ரவரி 2019   12:52 PM


கட்டுமானப் பணிகளின்போது வெளிச்சம் என்பது மிக முக்கியமானது. அஸ்திவாரப் பணிகள் போன்ற முதற்கட்டப் பணிகளுக்கு வேண்டுமானால் வெளிச்சம் இரண்டாம்பட்சமாக இருக்கலாம். ஆனால், அதற்கடுத்தடுத்த கட்டுமானப் பணிகளுக்கும் சரி, இரவு நேரப் பணிகளுக்கும் சரி, இன்டிரியர் போன்ற பணிகளுக்கும் சரி வெளிச்சம் அத்தியாவசியத் தேவையாகிவிடும். 

பொதுவாக, கட்டிடங்களின் தளங்களை அமைக்கும்போது சென்ட்ரிங், ஸ்கஃப்போல்டிங் போன்ற பணிகளுக்கும், கான்கிரீட் நிரப்பும் பணிகளுக்கும் உகந்த நேரமாகக் கருதப்படுவது அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களாகும். இந்த நேரங்களில் சூரிய வெளிச்சம் குறைவாகவே இருக்கும். கட்டிடப் பணிகளுக்கு மட்டுமன்றி, நடைபாதை அமைத்தல், காம்பவுண்ட்  சுவர் அமைத்தல் போன்ற பணிகள் எல்லாம் இரவு நேரங்களில் மேற்கொள்ளும்போது அதற்குரிய வெளிச்சத்தை அமைத்துக் கொள்ளுதல் என்பது கான்ட்ராக்டர்களுக்கும், பொறியாளர்களுக்கும் மிகப் பெரிய சவாலாகும். 

இதற்கென உயரமான கொம்புகளிலோ, பில்லர்களிலோ 1000 வாட்ஸ் சோடியம் வேபர் பல்புகளைப் பொருத்தி பயன்படுத்துவர். இவற்றை அடிக்கடி இடம் மாற்றுவதும் ஒரு வேலையாக இருக்கும். இது எல்லாவற்றையும் விட கடினமான வேலை ஒன்று இருக்கிறது. அதுதான் மின்சார கேபிளை பொருத்துவது. இந்த மின்சார கேபிளுக்கு மின் இணைப்பு கிடைப்பதும் ஓர் கடினமான விஷயம். 
ஆக, இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் விடிவாக வந்திருப்பதுதான் மொபைல் லைட்டிங் டவர்கள் அல்லது போர்டபிள் லைட்டிங் டவர்கள்.

வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்வது, பூச்சு வேலைகள், இன்டிரியர் வேலைகள் நடைபெறும் சிறிய அறைகளுக்கும் கொண்டு செல்வது, எளிதாக தூக்கக்கூடிய கனத்தில் இருப்பது, இலகுவாக நகர்த்துவதற்கு ஏதுவாக சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பது ஆகிய எல்லா சிறப்பம்சங்களும் கொண்டிருப்பதுதான் இந்த மொபைல் லைட்டிங் டவர்கள். மேலும், பல்புகளை உயரமாக கட்டுவதற்கு இடம் எங்கே என்றுகூட தேடத் தேவையில்லை. இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் நீட்டி மடக்கக் கூடிய டவர்கள் மூலம் 7, 8 மாடிகள் வரை வெளிச்சத்தைத் தரைதளத்திலிருந்தே கூட நம்மால் பாய்ச்ச முடியும். வெளிச்சம் இல்லாததால் வேலை நின்று போய்விட்டது என இனி யாருமே சொல்லமுடியாத அeவிற்கு இருக்கிறது மொபைல் லைட்டிங் டவர்களின் வேலை.   

சந்தையில் மொபைல் லைட்டிங் டவர் தயாரிப்பில் பல சர்வதேச நிறுவனங்கள் இருந்தாலும், கனடாவைச் சேர்ந்த டெல்டா லைட், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டெக்லைட் ஆகியன புகழ் பெற்றவை. இவற்றுள் இந்தியாவைச் சேர்ந்த அஸ்கா குழுமத்தின் இன்டியா லைட் டவர் நிறுவனத்தின் பொபைல் லைட்டிங் டவர் தயாரிப்புகளும் குறிப்பிடத்தக்கவையாகும்.

புது தில்லியில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் நாடு முழுதும் சிறிய பெரிய கட்டு
மான நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளுக்கு உறுதுணையானவை.
மொபைல் லைட் டவர், (MOBILE LIGHT TOWER),  மினி  மொபைல் லைட் டவர்,(MINI MOBILE LIGHT TOWER), ட்ரை பாட் லைட்டிங் டவர்,( TRIPOD LIGHTING TOWER), பலூன் லைட் டவர், (INFLATABLE LIGHT TOWER), என பலவகையில் லைட்டிங் டவர்களை இந்நிறுவனம் தயாரித்து சந்தைக்கு அளிக்கிறது.

இந்நிறுவனத்தின் ASKA PORTABLE LIGHT TOWER LT- Series  மாடல் கனரக போர்டபிள் லைட் டவர்கள் பெரிய கட்டுமான தளங்களிலும், நெடுஞ்சாலைப் பணிகளிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன.  இந்தப் பிரிவிலேயே, LT-9-4000 Y / LT 9-4 LED Y  மற்றும்  LT-9-1600 M / LT 9-4000 M என இரு வெவ்வேறு மாடல்கள் தயாரிக்கப்படுகின்றன..

முழுக்க முழுக்க டீசல் எரிபொருளால இயங்கக்கூடிய இந்த லைட் டவர்களில், LT-9-4000 Y / LT 9-4 LED Y  மாடல் 170 லிட்டர் கொள்ளவுள்ள எரிபொருள் டேங்குடன் 125 மணி நேரம் வரை தடையில்லாமல் இயங்கக்கூடியதாகும். 75 டிபி அலவிலேயே இதன் இரைச்சல் சத்தம் இருக்கும்.  இதுவே, LT-9-1600 M / LT 9-4000 M  என்றால் 100 லிட்டர் எரிபொருள் டாங்குடன் 55 மணி நேரம் இயங்ககூடியதாகும். 30 அடி (9.14 மீ.) உயரமுடைய இந்த ஒளிவெள்ள டவர்கள் 4000 வாட்ஸ் ஒளியை 7 ஏக்கர் பரப்பeவிற்குத் தரவல்லது.

இது போல எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லாத ரீ சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி டைப் லைட்டிங் டவர்களும் (Mini Mobile Light Tower (MMLT)) இவர்களிடத்தில் விற்பனைக்கு உண்டு. 2.3 மீ உயரமுடையை இந்த மாடல் ஒரு தடவை சார்ஜ்  செய்தால் 10 மணி நேரம் வேலை செய்யும். இவை தவிர பலூன் டைப் பேட்டரி லைட்டிங் டவர்களும் இவர்களிடத்தில் உண்டு.

தனிவீடு கட்டுபவர்களுக்கும், கான்ட்ராக்டர்கள், சிறு பில்டர்கள், மெகா பில்டர்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்கும் புத்தொளியைத் தர வல்ல போர்ட்டபிள் லைட்டிங் டவர் பற்றி மேலும் அறிய :
அஸ்கா குழுமம், இண்டியா மொபல்லைட் டவர்
R 482, நியூ ராஜேந்திர நகர், 
கங்காராம் மருத்துவமனை சதுக்கம், 
சங்கர் சாலை, 
புதுதில்லி- 110060
போன்: 9821067342 / 9899787072
E-mail: mlt@askgroup.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067889