முதலில், சுவர்களில் பதிகற்கள் அமைப்பது தேவையா?
கட்டுமானப் பணியில் செலவு குறைப்புக்கான பல்வேறு நடைமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இருந்தாலும், இங்கிலாந்தை சேர்ந்த லூரி பார்க்கர் கூறிய வழிமுறைகள் மட்டுமே உலக அளவில் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் கட்டுமானப்பணியில், சுவர்களைஅமைப்பதைக் காட்டிலும், அதன் இரு புறத்திலும் பூச்சு வேலை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் கான்கிரீட்டுக்கு அதிக செலவாகிறது. இதற்கு ஒரு படி மேலாக, சுவர்கள் இன்னும் அழகாக தெரிவதற்காக பதிகற்கள் அமைக்கப்படுகின்றன. விரும்பிய வண்ணங்களில், வடிவமைப்புகளில் அமைக்கலாம் என்பதால் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இன்னும் சில இடங்களில் சுவர்களில் இத்தகைய கற்களைப் பதிப்பதால், அறையின் வெப்ப நிலை கட்டுப்படுத்தப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.
உலக புகழ் பெற்ற லூரி பார்க்கர் வழிமுறையின்படி பார்த்தால், செங்கல்லை பயன்படுத்தி கட்டப்படும் சுவர்களை வெளிப்புறங்களில் கான்கிரீட்டைப் பயன்படுத்தி பூசுவது தேவையற்றது என்று கூறப்படுகிறது. மேலும், கட்டுமானப் பணியில் செலவை அதிகரிக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.இவ்வாறு சுவர்களைப் பூசாமல் விடுவதால், மழைக்காலங்களில் வெளிப்புறம் நிலவும் குளிர்ச்சி உள்ளே செல்லாது. இதே போன்று கோடை காலத்தில் வெப்பமும் உள்ளே வராது.
ஆனால், பதிகற்களை அமைத்தால், அவை வெளியில் நிலவும் வெப்பத்தையும், குளிரையும் அறைக்குள் கடத்தும். வழக்கத்தை விட அதிக செலவு செய்து இத்தகைய சூழலை அனுபவிப்பது தேவையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் விளையாடினாலோ, எதிர் பாராமல் ஏதாவது பொருள் பலமாக இடித்தாலோ பதிகற்கள் உடைந்துவிடும். இதனால், அந்த இடம் மட்டும் ஒரு மாதிரி காட்சி அளிக்கும். இது அறையின் அழகை கெடுக்கும்.
இத்தகைய சமயங்களில் அதே வகை பதிகற்கள் கிடைப்பது சிக்கலாகும் என்பதால் இது வேண்டாம் மேல்தள வீடுகளில் பதிகற்கள் உடைய காரணம் தனி வீடுகள் என்பது மறைந்து, எங்கு பார்த்தாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்கும்போது பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதன்படி, எல்லா விஷயங்களையும் கவனித்து வாங்கினாலும், குடியேறி சில ஆண்டுகள் கழித்தே பிரச்சினைகள் வெளியில் தெரியவரும்.
பிரச்னை
அடுக்குமாடி குடியிருப்புகளில் மேல் தeத்தில் ஏற்படும் நீர்க்கசிவுதான் முக்கிய பிரச்சினையாக பலராலும் பார்க்கப்படுகிறது. இதே அளவுக்கு இன்னொரு பிரச்சினையும் ஏற்படுகிறது. ஆனால், பலரும் பிரச்சினையின் உண்மையான காரணத்தை பார்க்காமல் தற்காலிக தீர்வையே நாடுகின்றனர் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்கும்போது தரைகளில் பதிகற்கள் அமைத்து தரப்படுகின்றன. இதில் பில்டர் தனது பட்ஜெட்டுக்கு உட்பட்டு ஒரு வகையை தேர்வு செய்வார். ஆனால், உங்களுக்கு பிடித்த வகை பதிகற்கள் வேண்டும் என்றால் அதற்கு ஆகும் கூடுதல் செலவை நீங்களே ஏற்க வேண்டும். இது பொதுவான நடைமுறைதான்.
இதில், பில்டர் தேர்ந்தெடுத்ததோ, நீங்கள் தேர்ந்தெடுத்ததோ எப்படியோ ஒரு வகையை முடிவு செய்து பதிகற்கள் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுவிடுகிறது. அந்த வீட்டில் நீங்கள் குடியேறி சில ஆண்டுகளில் திடீரென வீட்டில் எங்காவது ஒரு பகுதியில் பதிகற்கள் உடையும். ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பு கொண்ட பதிகற்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஓரிரு பதிகற்கள் மட்டும் உடைந்தால், அது அந்த அறையின் ஒட்டு மொத்த அழகையும் பாழாக்கிவிடும்.
காரணம் என்ன?
இவ்வாறு பதிகற்கள் உடைவதற்கான காரணங்கள் குறித்து: பொதுவாக இவ்வாறு பதிகற்கள் உடைந்தால், அந்த இடத்தை சுத்தப்படுத்தி, அதே வடிவமைப்பிலோ அல்லது அதே வண்ணத்திலோ பதிகற்களை வாங்கி பதித்து விடுவதே பலருக்கு பழக்கமாக உள்ளது.
ஆனால், இவ்வாறு பதிகற்கள் உடைந்தால், அதற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து, அதை சரி செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ் வீட்டின் மேல் கூரையே, மேல் வீட்டின் தரையாக அமைகிறது. இவ்வாறு மேற்கூரை அமைக்கும்போது, தரமான கம்பிகளையும், தரமான கான்கிரீட்டையும் உரிய முறையில் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கிறேன் என்று அவசர அவசரமாக பணிகளைமேற்
கொள்ளும்போது, இதில் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்eது. இப்படி குறைபாட்டுடன் அமைக்கப்படும் மேல்தeத்தில், கம்பிகளில் ஏற்படும் மாறுபாடுகள் கான்கிரீட்டை விரிவடையச் செய்யும். இந்த மாற்றத்தால் ஏற்படும் அழுத்தம் காரணமாக அதன் மேல் அமைக்கப்பட்டிருக்கும் பதிகற்கள் உடையும்.
எனவே, உங்கள் வீட்டில் பதிகற்கள் உடைந்தால், அதை மேலோட்டமாக அணுகாமல், கான்கிரீட் தளத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
சுவர்கள் அமைப்பதில் அழகியலுக்கு முக்கியத்துவம் தேவையா?
மனிதன் முறையாக திட்டமிட்டு, தனக்கான உறைவிடத்தை ஏற்படுத்தும்போது, சுவர்களின் வரலாறு துவங்குகிறது. ஆனால், சுவர்களின் முக்கியத்துவம் இப்போது பலருக்கும் பெரிதாக தெரிவதில்லை. இதனால், அதன் கட்டுமானத்தில் கவனம் குறைந்து வருகிறது.
கட்டுமானங்களில் சுவர்கள் பல்வேறு செயற்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்படுகின்றன. கூரைகள், மேல் தளங்களின் சுமையை தாங்குவதுடன், அவற்றை சமநிலையில் நிறுவுவதற்கான முக்கிய தடமாகவும் சுவர்கள் செயல்படுகின்றன. ஆனால், பல சமயங்களில் சுவர்கள் தன் மீதான சுமையின் தாக்கத்தை தரை பகுதிக்கு கடத்துவதாகவே அமைந்துள்ளன.
வீட்டிற்கு வெளிப்புற எல்லையை வரையறுப்பதுடன் நில்லாமல், உள்ளே பல்வேறு செயற்பாடுகளுக்கான பிரிவுகளையும், அவற்றுக்கான எல்லையையும் காட்டுவதாக சுவர்கள் அமைந்துள்eன. இந்த பிரிப்புகளே அறைகள் என்று கூறப்படுகின்றன.
பாதுகாப்பு
வெயில், மழை, குளிர் போன்ற காலநிலை மாற்றங்களின்போது, அதன் தாக்கம் வீட்டிற்குள் வராமல் தடுப்பதுடன், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றால் ஏற்படும் ஆபத்தையும் சுவர்கள்தான் தடுக்கின்றன.
இவ்வாறு அவை நிறைவு செய்ய வேண்டிய தேவைகளைப் பொறுத்து, அவற்றைக் கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள் மற்றும் வடிவமைப்புகள் வேறுபடுகின்றன. சுமை தாங்குமாறு வடிமைக்கப்படும் சுவர்கள் செங்கற்கள், கான்கிரீட் கற்கள், வலுவூட்டப்பட்ட கான்கிரீட் போன்றவற்றை பயன்படுத்திக் கட்டப்படுகின்றன.
பாதுகாப்புத் தேவைகளுக்கும் இத்தகைய சுவர்களே பெரிதும் விரும்பப்படுகின்றன. உள்ளக வெப்பக் கட்டுப்பாடு, எரிசக்தி மூலங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் போன்ற விrயங்களுக்கும் சுவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இடுபொருள்கள்
ஆரம்பத்தில் கற்களையும், மண்ணையும் தனித்தனியே பயன்படுத்தி சுவர்கள் கட்டப் பட்டன. அதன் பின், இவற்றை ஒன்றாக கலந்தும் பயன்படுத்தப்பட்டன. இதற்கு அடுத்த கட்டமாக, செங்கற்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதிலும், இப்போது வந்த மாற்றங்கள் காரணமாக கான்கிரீட், களிமண் பிளாக்குகளை பயன்படுத்தி சுவர்கள் கட்டப்படுகின்றன. தற்போதைய நவீனயுகத்தில், கான்கிரீட்டை பயன்படுத்தி ரெடிமேடாகவே தளங்கள் தயாரிக்கப்பட்டு அவை சுவர்களாக பயன்படுத்துவதும் நடைமுறைக்கு வந்துவிட்டது.
அழகியல்...
இதில் கட்டுமானத்துறையின் பல்வேறு கூறுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக சுவர்கள் அமைப்பதிலும், பாதுகாப்புக்கான முக்கியத்துவம் குறைந்து அழகியல் கூறுகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆசையாய் கட்டி முடித்த சுவர்களில், சில ஆண்டுகளிலேயே விரிசல்களும், நீர்க்கசிவுகளும் ஏற்படுகின்றன.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067880
|