கண்ணாடி இழை கதவுகள் வாங்க ஆசையா?

24 ஜனவரி 2024   05:30 AM 04 பிப்ரவரி 2019   12:16 PM


வீடு கட்டுவதில் பல்வேறு நிலைகளில் கதவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக, கதவு என்பது ஒரு கட்டிடத்தின் உள்ளே செல்லும் வழியை பயன்படுத்துவதை முறைப்படுத்துவதற்கான ஒரு அமைப்பாக வரையறுக்கப்படுகிறது. கட்டிடத்திற்குள் தேவையற்ற வெளி நபர்களும், விலங்குகள் போன்றவை செல்வதை தடுப்பது மட்டுமன்றி, வெளிப்புற வெப்பம், குளிர் போன்றவை உள்ளே வருவதையும் தடுக்க உதவுகிறது.

பழங்காலம் தொட்டு மனிதர்கள் பல்வேறு வகையான கதவுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் சில ஆண்டுகள் முன்புவரை மரங்களும், உலோகங்களும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் அண்மைக்காலமாக, பிளாஸ்டிக், பி.வி.சி. போன்றவையும் கதவுகள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக, தற்போது கண்ணாடி இழை கதவுகள் கட்டுமானத்துறையில் பிரபலமாகி வருகிறது.
செலவு
மரத்தால் ஆன கதவுகள் ஒரு கன அடிக்கு ரூ.2500 வரையும், இரும்பு கதவுகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.55 வரையும் செலவாகும். இத்தகைய சூழலில், குறைந்த விலையில் தரமாக கிடைக்கிறது என்பதால் கண்ணாடி இழை கதவுகளுக்கு முக்கியத்துவம் கூடுகிறது.

கண்ணாடி இழைகளையும், பிளாஸ்டிக் கலந்து தயாரிக்கப்படுவதால் இவை கண்ணாடி இழை கதவுகள் என வழங்கப்படுகின்றன. மரக்கதவுகளின் விலையில் பாதிக்கும் குறைவாகவே இதற்கு செலவாகும். இதிலும் தரம், வகை, தடிமன் அடிப்படையில் வெவ்வேறு விலைகளில் கதவுகள் கிடைக்கின்றன.

இதோடு மட்டுமல்லாது, விரும்பிய வடிவமைப்புகளில் இக்கதவுகளைத் தயாரிக்கலாம். தோற்றத்தில் அசல் மரக்கதவுகளைப் போன்று இவை இருக்கும். 100 சதவீத வாட்டர் புரூஃப் தன்மையுடன் இவை இருப்பதால், மரம், இரும்பு கதவுகள் அளவுக்கு இதற்கு பராமரிப்பு செலவு இருக்காது.
பாதுகாப்பு
மேலும், அனைத்துவித கால நிலைகளையும் சமாளித்து தாங்கும் வகையில் இந்த கதவுகள் அமைந்துள்ளன.
வீட்டில் குளியலறை, கழிவறை, படுக்கையறை, சமையலறை, உணவு அருந்தும் அறை என அனைத்து அறைகளிலும் இந்தக் கதவுகளை அமைக்கலாம். ஆனால், நீங்கள் வாங்கும் கண்ணாடி இழை கதவு எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை ஆகியவற்றை சரி பார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம் போலிகளை வாங்கி ஏமாறாமல் இருக்கலாம் 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067875