எரி சாம்பல் கற்கள் காங்கிரீட் கெட்டிக் கட்டுகள் கொண்டு கட்டப்பட்ட வீடுகளினுள் உள் வெப்பம் கூடுதலாக இருக்குமா?

24 ஜனவரி 2024   05:30 AM 04 பிப்ரவரி 2019   11:13 AM


இப்படியாக - வாய்வழியாக - தவறான பரப்புரை செய்யப்படுகிறது கட்டுமானத்துறையில் பழையனவற்றிலிருந்து மாற விரும்பாத - புதியனவற்றைக் கடைபிடிக்க மறுக்கிற, கற்றுக்கொள்வதையே நிறுத்தி விட்ட சில கட்டுநர்களும் கட்டுமான மேற்பார்வையாளர்களும் - குறிப்பாகக் கட்டட மேஸ்திரிகளும் தான் இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான கருத்தியலை (அல்லது அவர்களின் மூட நம்பிக்கையை) விதைக்கிறார்கள்.

அதைக்கேட்கும் சில பயனாளர்கள் (அப்படி என்றால்) எங்கள் கட்டடங்களில் எரிசாம்பல் செங்கற்களையோ காங்கிரீட் கட்டுகளையோ பயன்படுத்தக்கூடாது என்று தடுக்கிறார்கள்.

 

எரி சாம்பல் கற்கள் (Flyash Bricks) & / காங்கிரீட் கட்டுகள் (Precast solid concrete Blocks) - சாதாரண செங்கற்களைவிட எடை மிகுந்தவை (அதாவது கெட்டித்தன்மை Density & Stiffness கூடுதலானவை). எனவே வெளிவெப்பம் இதனுள்ளே கடந்து போக நேரம் மிகுதியாகிறது. அல்லது இவற்றின் வெப்பம் கடத்தும் திறன் குறைவானது என்பதைச் சோதனை முடிவுகள் தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.
எனவே எரிசாம்பல் கற்கள் / கெட்டிக் காங்கிரீட் கட்டுகள் கொண்டு கட்டப்பட்ட வீடுகளினுள் உள்வெப்பம் கூடுதலாக இருக்கும் என்பது தவறான மனப்பிரமை, உண்மையில்லாத புரிதல்;

 

இக்கருத்தியலுக்கு எவ்வித அறிவியல் / பொறியியல் ஆதாரமும் அடிப்படையும் கிடையாது. மாறாக இவைகொண்டு கட்டப்பட்ட வீடுகளில் உள்வெப்பம் - செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டவையோடு ஒப்பிடும் போது - குறைவாகவே இருக்கும் என்பது தான் உண்மை.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067884