கட்டுமானத்தில் மண் பொறியியல்

24 ஜனவரி 2024   05:30 AM 02 பிப்ரவரி 2019   05:32 PM


ஒரு கட்டுமானம் எழுப்பப்படும்போது மணல், ஜல்லி, சிமெண்ட், கம்பி என பல கட்டுமான் கூறுகள் பற்றி பேசுவோம்.. ஆனால் இதற்கெல்லாம் ஒரு அடிப்படை இருக்கிறது.. அது தான் மண்...ஒரு கட்டுமானத்தின் வலிமை அங்கு நிறுவப்படும் மண்ணின் தாங்குதுறன் மீது தான் கட்டமைக்கபப்டுகிறது..

மண் பொறியியலின் பயன்பாடுகள் மண்ணின் பலதரப்பட்ட விசைகளின் பொருத்து மாறுபடுகிறது.  
மண்ணின் விசைகளை விட மண்ணின் பொறியியல் அதிகமான பயன்பாடு கொண்டது.  எல்லாவித பொறியியல் பிரச்சனைகளும் அதனின் தீர்வுகளும் மண் பொறியியலைச் சார்ந்துள்ளது.  இவைகள் களத்தின் சோதனையின் முறை, அஸ்திவாரத்தின் கட்டமைப்பு, வடிவமைப்பின் பயன்பாடு மண்ணைத் தாங்கும் கட்டிடங்கள் மற்றும் மண்ணைச் சார்ந்த கட்டிடங்கள் ஆகியவைகளை பொறுத்துள்ளது.

கட்டுமானத்தில் மண் பொறியியலின் பல தரப்பட்ட பயன்பாடுகள்.
பொதுத்துறை பொறியியல் களத்தில் பல தரப்பட்ட செயல்பாட்டில் மண் பொறியியல் மிகவும் உயர்வான உத்தியாக நிரூபித்திருக்கிறது.  இது எந்தெந்த களத்திற்கு பயன்பாடு உள்ளது என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. மண் பொறியியல் அஸ்திவாரத்திற்கு
2. மண் பொறியியல் தாங்கும் கட்டிடங்களுக்கு
3. மண் பொறியியல் மண் சரிவின் ஸ்திரத்திற்கு..,
4. மண் பொறியியல் பேவ்மெண்டின் வடிவமைப்பிற்கு
5. மண் பொறியியல் பூமிக்கடியிலுள்ள கட்டிடங்களுக்கு
6. மற்றும் பலவித பயன்பாடுகளுக்கு


அஸ்திவாரத்தில் மண் பொறியியல்
எல்லாவிதமான சிவில் துறை கட்டுமானங்கள் மண்மீதோ அல்லது அதற்கடியிலோ தாங்கப்படுகின்றன.  இது எல்லாவித கட்டிடங் களுக்கும் பொருந்தும்.  
அவைகளாவன: கட்டிடங்கள், பாலங்கள், அணைகள் முதலான.  அஸ்திவாரம் கட்டுமானங்களின் மீது சுமத்தப்படும் பளுக்களை மண் மீது மிக நேர்த்தியாக அபாயமின்றி கொண்டு செல்வதற்கு கட்டப்படுகிறது.


அஸ்திவாரம் கட்டப்பட்டு பளுவானது மேலே உள்ள மண்ணின் படுகை மீது கொண்டு செல்லும் அமைப்பிற்கு ஹாலோ பவுண்டேrன் என்பர்.  பளுவானது மிக ஆழமான பகுதிக்கு கொண்டு செல்லப்படுகையில், அதனை ஆழமான அஸ்திவாரம் என்பர்.  மிக பிரபல்யமான ஆழமான பவுண்டேrனுக்கு பைல்பவுண்டேrன் என அழைப்பர்.  பவுண்டேrன் இன்ஜினியரிங் மண் பொறியியல் மிக முக்கியமான பகுதியாகும்.

மண்ணை பக்கவாட்டில் தாங்கும் கட்டுமானங்கள்மண்ணைப் போதுமான அளவில் பரத்த முடியாத பட்சத்தில் மண்ணை மேலே குவிய வேண்டியது அவசியமாகிறது.  ஆகவே, இவ்வாறு மண்ணை மேலே சரியாக அனைத்து கட்டப்படும் கட்டுமானங்களுக்கு ரீடெய்னிங் ஸ்ட்ரக்சர்ஸ் என அழைப்பர்.  மண்ணை பலவித படிகளாக அனைத்து தாங்குவதற்கு ரீடெய்னிங் ஸ்ட்ரக்ஸர் தேவைப்படுகிறது.  இவ்வாறு தாங்கும் கட்டுமானங்கள் நெகிழவுடைய கட்டுமானங்களாகவோ அல்லது Uட் பைல்களாகவோ இருக்கலாம்.

சரிவின் ஸ்திரதன்மைமண்ணை அதிக அளவு குவிக்கும் போது அது படுக்கை வாகையில் இல்லாத போது அதனால் உண்டாகும் சரிவு மண்ணின் பளுவின் பாரம் கீழே நோக்கி தள்ளுகிறது.  இதனால் சரிவானது கீழ்நோக்கி சரிய ஏதுவாகிறது. இது ஒரு ஸ்திரதன்மையை உருவாக்குகிறது.

இந்த சரிவானது மனிதனால் உருவாக்கப் படலாம் அல்லது வானம் தோண்டுவதால் இருக்கலாம் அல்லது மண் சரிவு, வெள்ளம் ஆகியவைகளால் உருவானதாக இருக்கலாம்.
பூமிக்கடியில் கட்டப்படும் கட்டுமானங்கள்பல்வேறு கட்டிடங்கள் பூமிக்கடியில் கட்டப்படும்போது அதனை சுற்றிஎல்லா பக்கங்களிலும் மண்ணின் விசையால் தாக்கப்படுகிறது ஆகவே இவ்வாறான கட்டுமானங்கள் வருங்காலத்தில் உருவாகும் இந்த மண் விசைக்கு வடிவமைக்க வேண்டியது மிக அவசியம்.  டனல், ஷாப்ட், கான்டுபூட் ஆகியன சில பூமிக்கடியில் கட்டப்படும் கட்டிடங்களாகும்.

பேவ்மெண்ட் வடிவமைப்பில் மண் பொறியியல் பேவ்மெண்ட்கள் மண்ணின் மீது கட்டப்படுகின்றன.  பேவ்மெண்ட்டின் படுகைகள் பலதரப்பட்ட கற்கள் மற்றும் பிடுமென்படுகைகளால் அமைக்கப்படுகிறது.  இவ்வாறான படுகைகள் வழவழப்பான மேற்பரப்பு உள்ளவாறு வடிவமைக்கப்படுகிறது.  பேவ்மெண்டின் அடிபாகத்திலுள்ள மண்படுகை மண்ணின் மீது உருவாகும் பளுவினை எதிர் கொள்ளுமளவிற்க்கு மற்றும் சுற்றுசூழல் மாறுபாட்டிற்கு உகந்தவாறு இருக்க வேண்டும்.

மண் அணையில் மண் பொறியியல்
நீரை தேக்கி வைக்க அணை கட்டப்படுகிறது.  ஆகவே அணை உடையும் போது பெருத்த சேதம் உண்டாகிறது.  பெரு வெள்ளம் ஏற்படுகிறது.  எனவே, அணை கட்டும்போது மிக்க கவனமும் நல்ல வடிவமைப்பும் மற்றும் மிக உயரிய கட்டுமான முறையும் தேவைப்படுகிறது.  இது மண் பொறியியலின் மிகச் சீரிய அணுகுமுறையை தேவை இருப்பதை உணர்த்துகிறது.

ஆகவே, கட்டுமானப் பொறியயலில் மண் பொறியியல் மிக்க பங்கு வகிக்கிறது.  இதனை சீரிய நோக்கத்துடன் செய்து முடிக்க வேண்டியது அவசியம்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067876