குடிநீர் அல்லது கழிவு நீர் செல்லும் நீளமான சிமெண்ட் குழாய்களை பூமிக்கடியில் பதிப்பதற்காக சாலை ஓரத்தில் அடுக்கி வைத்திருப்பதை நாம் எங்காவது பயணத்தின் போது பார்த்திருப்போம்.
பொதுப்பணித்துறையில் இதைப் பதிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் கால தாமதம் என்பது நடைபாதை வாசிகளுக்கும் வீடற்ற ஏழைகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். ஏனெனில் அந்த இடைப்பட்ட காலத்தில் மண்ணில் பதிக்கப்படும் வரை அந்த குழாய்க்குள் குடும்பம் நடத்தும் ஏழைகள் நம் நாட்டில் ஏராளம்.
இது போன்ற வீடற்ற ஏழைகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கிறார்கள். உலகின் பணக்காரர் களுக்கான சொர்க்கபுரி உலகத்திற்கான உல்லாச விடுதி என்றழைக்கப்படும் ஹாங்காங்கில் கூட வீடற்ற ஏழைகள் நிறைய பேர் இருக்கின்றனர்.
சென்னை, திடீர் நகரில் பல தலைமுறைகள் வசித்து வந்த ஏழைக் குடும்பங்களை வேரோடு பிடுங்கி சென்னைக்கு தொலைவே தூக்கி அடித்தது போல் அங்கு ஏழைகளை அப்புறப்படுத்த ஹாங்காங் மாநகராட்சி நிர்வாகம் நினைக்க வில்லை. தினக்கூலி, துப்புரவாளர்கள், சாலைப் பணியாளர்கள் என பன்முகத் தன்மை கொண்ட அந்த ஏழை மக்கள் நகரத்திற்கு எப்போதும் தேவை என்று எண்ணிய ஹாங்காங் நிர்வாகம் அவர்களை அங்கேயே குடியமர்த்த, அதே சமயம் நகரின் அழகு கெடாமல் வசிக்க என்ன வழி? என்று யோசித்தது.
ஹாங்காங் ஆர்க்கிடெக்ட் நிறுவனம் ஜேம்ஸ் லா சைபர்டெக்சர் என்கிற நிறுவனம் மிக எளிமையான, காசு சிக்கனமான அதே சமயம் கண்களை உறுத்தாமல் நகரின் அழகை கெடுக்காமல் ஒரு குடியிருப்பு ஐடியாவை டிசைன் செய்து காட்டியிருக்கிறது.
அதாவது தண்ணீர் பைப் லைன் கொண்டே 3 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கான வீட்டை அது டிசைன் செய்துள்ளது. இரு பெரிய கட்டடங்களின் இடையே கூட இதைப் பொருத்த முடியும். 10 அடி நீளமும் 7 அடி விட்டமும் உடைய இந்த பைப்களை இரண்டாக இணைத்தால் 20 அடி நீளம் 7 அடி உயரம் கொண்ட ஒரு வீடு கிடைத்து விடுகிறது. இதன் ஒரு புறம் இரும்பு ஆங்கிள் பொருத்தி கண்ணாடியை பிக்ஸ் செய்து விட்டால் அழகுக்கு அழகு, வெளிச்சமும் தாராளம். இன்னொரு பக்கத்தை வாசலாக்கி விட்டால் வீடு ரெடி.
உள்ளே சோஃபா கம் பெட், நாற்காலி எல்லாம் போட்டுவிட்டால் ஹால் கம் பெட்ரூம் ரெடியாகிவிடுகிறது. ஒரு சிமெண்ட் குழாய்க்குள் தான் இருக்கிறோம் என்ற எண்ணமே வராமல் நல்ல இன்ட்டிரியர் ஒர்க் செய்யப்பட்டு ஒப்படைக்கப்படுகிறது. மொத்தமே 80 சதுர அடி புழங்கும் இடம் கொண்ட இந்த குழாய் வீட்டில் ஓரம் கழிவறை, கிச்சன் கூட உண்டு.
இது போன்ற குறுகலான வீட்டிற்குள்ளே பயன்படுத்த ஏதுவான மல்டி பர்போஸ் பர்னிச்சர்களை போட்டுவிட்டால் 80 சதுர அடி பரப்பு கூட 160 ச.அடி பரப்பாக தோன்றும். இடம் இன்னும் அதிகம் தேவை என்றால் இரு குழாய்களுக்குப் பதிலாக 4 குழாய்களாக நீளமாய் பொருத்திக் கொள்ள வேண்டியது தான்.
ஒரே இடத்தில் 50 இடங்கள் கூட அமைக்க முடியும் என்கிறார்கள்.
இரண்டாவது அடுக்கிலிருந்து அடுத்தடுத்து அடுக்கில் உள்ள வீடுகளுக்குச் செல்ல தனி இரும்பு ஏணிப் படிகள் பொருத்தப்படுகின்றன. அதிகபட்சம் 4 அடுக்குகள் வரை அமைப்பது பாதுகாப்பானது எனச் சொல்லும் இதன் வடிவமைப்பு நிறுவனம், ஒரு வேளை இடமாற்றம் தேவைப்பட்டால் அலேக்காக வீட்டைத் தூக்கி வைத்து லாரியில் கொண்டு செல்லலாம் என்கிறது. இந்த டிசைன் நகராட்சியின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
இது ஓகே ஆகிவிட்டால், தனியார் நிறுவனத்தின் இந்த டியூப் ஹவுஸ் புராஜெக்ட்டை கையில் எடுத்து தயாரிக்க உள்ளன. ஒரு வீட்டை அமைக்க ஃபுல் பர்னி´ங் செலவோடு 15 ஆயிரம் டாலர்கள் ஆகும் என கணக்கிடப் பட்டுள்ளது. அதே சமயம் இவ்வீட்டைமாதம் 416 டாலருக்கு வாடகை விட்ட முடியும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றன. ஏழைகளுக்கு அடுக்கு மாடி கட்டித்தர யோசிக்கும் அரசு நிர்வாகங்கள் அதன் அதிகாரிகள் இது போன்ற குழாய் வீடுகள் எந்த அளவுக்கு நம்மூருக்கு சாத்தியமாகும்? என யோசிக்கலாமே!.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067878
|