மலேசியா மணலும்! மணல் மாஃபியாக்களும்! அரசு யார் பேச்சைக் கேட்கிறது? யாருக்கு வேலை செய்கிறது?

24 ஜனவரி 2024   05:30 AM 02 பிப்ரவரி 2019   04:25 PM


நமது தமிழகத்தில் இது போல ஒரு தீர்ப்பு வருவது என்பது அதிசயம்தான். தீர்ப்பைக் கேட்ட பலருக்கும் முதலில் நம்புவதா? வேண்டாமா ? எனப் புரியவில்லை. ‘‘இனி தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மணல் குவாரிகளை மூடிவிட்டு, இறக்குமதி மணல் அல்லது மலேசியா மணலைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்”. என்கிற தீர்ப்பு ஆறுகளின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது. கிரானைட் குவாரிகளையும் படிப்படியாக மூட வேண்டுமென்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது!

தமிழகத்திற்குள் நடக்கும் சமூகவிரோத செயல்கள், கருப்புப் பணம், ரவுடியிசம், அரசியல் பேரம் போன்ற பலவற்றிலும் புகுந்து விளையாடுவது முறையற்று வரும் மணல் பணம்தான்.

காலம் கடந்த தீர்ப்பு :
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் மணல் குவாரிகள் அமைத்து, தமிழக அரசு மணல் எடுத்து விற்பனை செய்கிறது. இதில் பெருமளவு முறைகேடு நடப்பதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக
ஆழத்திற்கு மணல் எடுப்பதாகவும் ஐகோர்ட்டில் அதிகளவு வழக்குகள் தாக்கலாகியுள்ளன. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு, நிலத்தடி நீர் பாதிப்பு, விவசாய பாதிப்புகளுக்கு விதிகளை மீஷீ மணல் எடுப்பதுதான் காரணம் எனவும் பல தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர்.இதனைத் தொடர்ந்து காலம் கடந்து இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

பல இடங்களில் மணல் குவாரிகள் மூடப்பட்டதால் தமிழகத்தில் மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு லோடு மணல் உச்சபட்சமாக ரூ.40d60 ஆயிரம் வரை விற்பனையயானது. இதனால், புதிதாக 70 மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு முயல, அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த விவகாரம் ஏன் இப்போது பெரிய பிரச்சனையானது?

கேரளா உள்ளிட்ட இந்தியாவின் மற்ற 
மாநிலங்கள் தங்கள் தேவைக்காக மணலை, 
மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. தமிழகத்திலும் மணலுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து மலேசிய மணலை இறக்குமதி செய்து வர்த்தகம் செய்ய இறங்கியது புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் எம்.ஆர்.எம். ராமையா எண்டர்பிரைசஸ் லிமிடெட் 
நிறுவனம்.. 53,334 மெட்ரிக் டன் மணல் 
கடந்த அக்டோபர் 14 ஆம்தேதி இறக்குமதியானது. 
இந்த மலேசியா மணல் சந்தையில் புகுந்தால் என்ன ஆகும்? மணல் விலை வீழ்ச்சியடையும்.அப்புறம் தாங்கள் எப்படி கல்லா கட்டுவது? அப்புறம் இதே போல் எல்லோரும் மலேசியா, வியட்நாம் என அயல் நாடுகளிலிருந்து விலை குறைவான மணலை இறக்குமதி செய்ய ஆரம்பித்துவிட்டால் நம்மோட நிலை என்னாவது?

உடனே அதற்கு தடை விதித்தார்கள் அரசு அதிகாரிகள். கப்பலிலிருந்து இறக்குமதியான மலேசிய மணல் துறைமுகத்திலேயே அடை காக்கப்பட்டது. நியாயமாக இது போன்ற மாற்று முயற்சிகளை செய்ய முன் வருவோர்களை பாராட்டத்தானே வேண்டும்? அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு ‘கனிம வள நாயகன்’ என பட்டம் கொடுத்து பாராட்டி கௌரவிக்க வேண்டும் தானே? ஆனால், தமிழக அரசு அப்படி செய்யவில்லை. மாறாக அவரது கன்னி முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது. (தமிழகத்தில் தான் இது முதல் முயற்சி, ஆந்திரா கேரளாவில் ரொம்ப வருடங்களாக இறக்குமதி மணலில்தான் கட்டுமானங்கள் கட்டப்படுகின்றன்..)
மணல் மாஃபியாக்கள் மலேசிய மணலை தமிழகத்திற்குள் வர விடாமல் திரைமறைவு வேலை செய்து, கலெக்டர்கள் மூலம் மலேசிய மணலுக்கு சிக்கலை ஏற்படுத்தினார்கள்.

அரசு தரப்பு ‘மலேசிய மணல் தமிழகத்திற்குள் கொண்டு வர அனுமதி வாங்க
வில்லை, முறையான ஆவணம் இல்லை’ என முதலில் தெரிவித்தார்கள்.. எப்படி ஒரு நிறுவனம் முறையான ஆவணம் இன்றி ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கொண்டுவரமுடியும்?
அதே போல் முறையான அனுமதி இல்லை என்பதும் காதில் பூச்சுற்றும் வேலை. இருந்தாலும், இது போன்ற ஒரு மாற்று மணலை இரு தனி நபர் நிறுவனம் கொண்டு வருகிறது என்றால், அதற்கு விரைந்து அனுமதி வழங்குவதை விட வேறு என்ன வேலை இரு அரசுக்கு இருக்க முடியும்?

இதெல்லாம் பரவாயில்லை. இதை மீறி ஒரு குண்டை தமிழக அரசு வக்கீல் தரப்பு போட்டது.. ‘இந்த மலேசிய மணல் தரமற்றது. இது கழிவு மணல், இதைக் கொண்டு கட்டுமானங்கள் கட்டினால் ஆபத்து என வாதிட்டார். கட்டுமானங்களுக்கு ஆபத்து என்றால் பதறுகிற அளவிற்கு அவ்வளவு நலல்வர்களா நீங்கள்? அது உண்மையயனில் தரமற்ற மவுலிவாக்கக் கட்டம் கட்டிக் கொண்டிருந்த போது எங்குச் சென்றீர்கள்? 
இப்போதும் ஆந்திரா மாகாண கலப்பட மணல் ஊடுருவதை வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருக்கிறீகள். அடையாறு கழிவு மண்ணில் வீடு கட்டிக்கொண்டிருக்கிற கட்டுமானங்களை நீங்கள் எப்போதாவது கணக்கெடுத்துண்டா? 
ஆற்றுமணலின் தரம் குறித்து அவ்வளவு கவலைப்படும் நீங்கள் 3 யூனிட் மணலை ரூ 2100 க்கு அரசிடமிருந்து வாங்கி , ரூ. 60 ஆயிரத்திற்கு பொதுமக்களுக்கு, பில்டர்களுக்கு விற்பதையும் வேடிக்கை தானே பார்த்துக் கொண் டிருக்கிறீர்கள்? 
சரி இறக்குமதி மணலை தரமற்ற மணல் என்கிறீர்களே! அதை பரிசோதித்தது யார்? மணலில் தர வரையறை என்ன? அக்டோபர் 14 ஆம் தேதி வந்து இறங்கிய மணலின் தரத்தை சோதிக்க உங்களுக்கு ஒன்றரை மாதமா கனம் அரசு தரப்பு வக்கீல் அவர்களே! பல கோடி ரூபாய் செலவழித்து போயும் போயும் கழிவு மணலை யாரவது வாங்கி கப்பலில் இறக்குமதி செய்வார்களா?

ஆக இந்த சப்பைக்கட்டுகள் எல்லாம் மலேசிய
மணலை உள்ளே கொண்டு வரப்படாமல் இருக்கச் செய்யும் முயற்சியேயன்றி வேறென்ன? இதெல்லாம் போர்க்கால அடிப்படையில் இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்காமல் ஒரு பக்கம் நீதி மன்றத்தோடு மல்லுக்கட்டி இன்னொரு பக்கம் ஆர்.கே நகர் தொகுதியில் மையம் கொண்டிருந்தது தமிழக ஆட்சி அதிகார மையங்கள். ஆக நீங்கள் ஆற்றுமணலின் தட்டுப்பாட்டை தீர்க்க மாட்டீர்கள்.. 50 ஆயிரம், 60 ஆயிரம் ரூபாய் போகிற மணலின் விலையையும் கட்டுப்படுத்த மாட்டீர்கள், செயற்கை மணல் உற்பத்தியையும் அதிகரிக்க மாட்டீர்கள்..மாற்று மணலைக் கண்டறிந்தும் சொல்ல மாட்டீர்கள். யாராவது அயல் நாட்டிலிருந்து மணலை இறக்குமதி செய்தால் அதையும் நாட்டுக்குள் உள்ளே விட மாட்டீர்கள்..அப்படியயனில் எதற்கு அரசாங்கம்..? ஆட்சி? பேசாமல் அந்த மணல் மாஃபியாக்களையே நாடாள விடலாமே...

உலகமயமாக்கலுக்கு பிறகு தான் மணல் கொள்ளை அதிகமானது. ஆனாலும், அண்டை 
மாநிலங்கள் விழித்துக் கொண்டு ஆறுகளில் மணல் எடுப்பதை தடைசெய்தது. ஆனால், தமிழகத்தில் தான் அரசின் துணையுடனே அரசுக்கு சொந்த
மான குவாரிகள் மூலமே மிகப்பெரிய மணல் கொள்ளை நடந்து வருகிறது. திமுக, அதிமுக என ஆட்சிகள் மாஷீனாலும் மணல்கொள்ளை என்பது தொடர்கதையாக இருக்கிறது.
இதுவரை கொடுக்கப்பட்ட எந்த தீர்ப்புகளையும் 
மாநில அரசுகள் மதித்ததே இல்லை. ஏனென்றால், மணல்மூலம் தான் இவர்கள் அரசியலே நடக்கிறது. இங்கு, அள்ளப்படும் மணலில் 70 சதவீதம் மணல் வெளிமாநிலங்களுக்கு அரசின் துணை யுடனே கடத்தப்படுகிறது.

கேரளாவில் 1994-ஆம் ஆண்டுமுதல் மணல் அள்ள தடை உள்ளது. அங்கு இடுக்கி போன்ற மிகப்பெரிய அணைகளையே எம். சாண்ட் மூலம் தான் கட்டியுள்ளார். இந்தியா முழுவதும் பல்வேறு 
மாநிலங்களில் கட்டுமானப்பணிகள் எம்.சாண்ட் மற்றும் வெளிநாட்டு மணல் மூலம் தான் நடக்கிறது. இவை ஆற்று மணலை விடவும் விலை குறைவு. எம். சாண்ட் எடுக்கப்படுவதிலும் சுற்றுசூழல் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது அதானல், அதனை முறைப்படுத்தி சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கடுமையான சட்டங்கள் இயற்றி எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒரு குவாரியில் கூட முறைப்படி மணல் அள்ளப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தினமும் 90 ஆயிரம் லோடு மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 10 இலட்சம் கோடி ரூபாய். ஒரு இஞ்ச் மணல் உருவாக 50 ஆண்டுகள் ஆகும். தமிழகத்தில் உள்ள 33 நதிகளிலும் 130 ஆண்டுகள் அள்ளவேண்டிய மணலை 30 ஆண்டுகளில் அள்ளிவிட்டனர் அதனால், இன்னும் 30 ஆண்டுகள் எந்த ஆற்றிலும் மணல் அள்ளக்கூடாது. அப்போது தான் பழைய சூழல் 
திரும்பும். நமது நதிகளையும் கனிமங்களையும் தின்று விட்டு, ஏப்பம் விட்டு ஒரு பெருங்கூட்டமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?ஒரு மாற்று மணலையே இறக்குமதி செய்து பயன்படுத்த விடாமல் அரசு ஆதர பெற்ற மணல் மாஃபியாக்கள் எதிர்க்கிறார்கள் என்றால் இந்த 
மண்ணில் மாற்று அரசியல் எங்ஙனம் உருவாகும்? யோசியுங்கள்.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு...8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067843