நேர்த்தியான கட்ட டங்களுக்கு இங்கிலாந்து எப்படி ஒரு உதாரண நாடோ? அதே போன்று சில சமயம் கிறுக்குத்தனமான கட்டடங்களையும் அவர்கள் உருவாக்குவதுண்டு. ஆனால் அந்த கிறுக்குத்தனம் கூட ரசிக்கும் படியாக இருக்கும். தலை கீழாக கட்டடம், பை வடிவில் கட்டிடம், உடைந்த நிலையில் கட்டிடம் என பல வடிவங்களில் அவர்கள் யோசிப்பதுண்டு. இப்போது மேற்கு லண்டனில் ஒரு ஹோட்டல் கட்டடத்தில் வெளிப்புறச் சுவரில் பெரிய விரிசல் விழுந்தால் எப்படி இருக்குமோ? அது போன்ற ஒரு வடிவமைப்பை செய்திருக்கிறார் சின்னெக் என்கிற கட்டிடப் பொறியாளர்.
இந்த கோனலான விரிசலை ஏற்படுத்துவதற்கு அவருக்கு 4000 பிளாக்குகள், 10 டன் ஸ்டீலும் 14 மாதங்களும் தேவைப்படுகின்றன. சுமார் 20மீ வரை இந்த கட்டிட விரிசல் நீண்டிருக்கிறது. 20 அங்குலம் தடிமனில் இந்த செயற்கை கட்டட விரிசல் அமைக்கப்பட்டுள்ளது.
ஏங்க இப்படி ஒரு டிசைன்? என்றால்,சும்மா தமாஷ் என்கிறார் சின்னெக் இதற்கு அடுத்து என்ன மாதிரியான கட்டடம் வடிவமைக்கப் போகிறீர்கள் என்றால், மெழுகுவர்த்தி வடிவில் சர்ச் ஒன்றை நிர்மானிக்கப் போகிறேன் என்று சொல்லி அசத்துகிறார் சின்னெக்.
உச்சியில் திரியில் உண்மையிலேயே பற்றி எரியும்படிச் செய்வாரோ? என்னமோ?
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067841
|