கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டால் என்ன செய்வது?

24 ஜனவரி 2024   05:30 AM 12 ஜனவரி 2019   12:49 PM


புதிதாக வீடு வாங்கும்போது பல்வேறு விஷயங்களை கவனிக்கிறோம். கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலம் எத்தகையது? உரிய திட்ட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா? நல்ல தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என எல்லா விஷயங்களையும் பார்த்து வாங்குகிறோம். இப்படி வாங்கிய வீட்டை தொடர்ந்து பராமரிப்பதில் பலரும் உரிய கவனம் செலுத்துவதில்லை. அப்படியே பராமரித்து வருபவர்களும், கட்டிடத்தில் ஏதாவது பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு, அதில் அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய சூழல் வந்தால், அத்துடன் சோர்ந்து விடுகின்றனர். அதன் பின், கட்டிட பராமரிப்பில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை.

விரிசல்கள்
புதிதாக வாங்கிய வீட்டில், குடியேறிய சில ஆண்டுகளில் அதன் சுவர்கள், மேற்கூரைகள் போன்றவற்றில் ஏதாவது விரிசல் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் மன உளைச்சலை சொல்லி மாளாது. அந்த விரிசலுக்கான காரணம் தெரியாமல் ஏற்படும் குழப்பமே பலருக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இத்தகைய விரிசல்கள் ஏற்படும்போது, அதற்கான காரணத்தை ஆய்வு செய்ய உரிய கவனம் செலுத்த வேண்டும். அதே வேளையில், விரிசலை சரி செய்வதற்கான வழிமுறையையும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஆலோசனைகள்
பொதுவாக கட்டுமான பணியின்போது தயாரிக்கப்படும் கலவையில் மணல், சிமெண்ட், தண்ணீர் ஆகியவற்றின் அளவு சரியான விகிதங்களில் இல்லை என்றால், அதை பயன்படுத்தி கட்டப்படும் சுவற்றிலும், தளத்திலும் விரிசல் ஏற்படும். இத்தகைய விரிசல்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் மூன்று அங்குலம் வரை கான்கிரீட்டை பெயர்த்து எடுத்துவிட்டு, ‘கிராப்ட் பில்லர்’ என்ற ரசாயனத்தை சிமெண்டுடன் கலந்து பூசினால் விரிசல்கள் சரியாகிவிடும்.

தளங்களில் இத்தகைய விரிசல் ஏற்பட்டால், அதன் கீழே தாங்கு கட்டைகளை அமைத்து, விரிசல் பகுதியில் ரசாயன கலவையை பீய்ச்சி அடித்தாலும் பிரச்சினை சரியாகும்.

பல இடங்களில் சன்ஷேட்களில் தண்ணீர் தேங்குவதாலும், கட்டுமானங்களின் உள்பக்க வழியாக செல்லும் தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதும், விரிசலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே, இவற்றை முறையாக பராமரித்தால், விரிசல்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067830