டி.எம்.டி இரும்பு கம்பிகள் பயன்பாடுகள் என்ன?

24 ஜனவரி 2024   05:30 AM 12 ஜனவரி 2019   11:55 AM


இன்றைய கட்டுமான உலகில் கான்கிரீட்டும், டி.எம்.டி இரும்பு கம்பிகளும் தவிர்க்க முடியாத பரிமாற்றாஙகள் ஆகும்.50 -ஆண்டுகளுக்கு முன்பாக கற்கரை கட்டுமானங்களில் உறுதியூட்ட மைல்டு ஸ்டீல் (Mild Steel Rebars) கம்பிகளை பயன்படுத்தி வந்தோம். இவற்றின் தாங்கு திறன் குறைவு. எனவே 1967- க்குப்பின் தாங்கு திறன் மிகுதியான குளிர் முறுக்கு கம்பிகளை (Cold Twisted Deformed bars CTD) பெரும்பாலும் பயன்படுத்தி வந்தோம். இந்த CTD கம்பிகளில் நிறைய குறைபாடுகள் உள்ளன. ஒருமையான வடிவமைப்பு எடையளவு - தாங்கு திறன் முதலியன கிடையாது.

 

குளிர் முறுக்கினால் இக்கம்பிகளின் மேற்பரப்பில் திருகு விசையின் காரணமாக நிறைய சிறுசிறு விரிசல்கள் (Micro Cracks) விழுந்து எளிதில் வளைக்க முடியாது. அழுத்தி வளைத்தால் முறியும் தன்மை உள்ளவை. பற்ற வைத்தலும் (Welding) வாய்ப்பாக இல்லை. எனவே ,CTD எனப்படும் முறுக்கு கம்பிகளை உறுதியூட்டிகளாக பயன்படுத்தாமலிருப்பது நல்லது. இதற்குப் பதிலாக மேலே குறிப்பிட்ட குறைபாடுகள் இல்லாத (TMT Thermo mechanically treated bars or Q & T Quenching & Tempering) என்றழைக்கப்படும் எஃகு கம்பிகளையே பயன்படுத்த வேண்டும்.

 

ஐ.எஸ் (IS) 456-2000 எனப்படும் தர ஏட்டில் தெரிவித்துள்ளவாறு கட்டப்படும் கட்டடங்கள் எவ்வித குறைபாடுமின்றி குறைந்தது 100 ஆண்டுகள் நீடித்து நின்று உறுதியுடன் உழைத்திட வேண்டும். குளிர் முறுக்கு கம்பிகளை (CTD Bar) கற்காரை கட்டு
மானங்களில் பயன்படுத்தும் போது விரைவில் துருப்பிடித்து - வலிமை இழந்து கட்டுமானங்களின் வாழ்நாளை பெரிதும் குறைக்கின்றன. இதனை தவிர்க்கும் வகையில் தான் டி.எம்.டி ரீ பார்ஸ் அல்லது க்யூ அண்ட் டி ரீ பார்ஸ் (Q & T Rebars - Quenching & Tempering Rebars) எனப்படும் புதிய எஃகுக் கம்பிகளை பயன்படுத்திட வேண்டுமென பரிந்துரைக்கப்படுகிறது.


கட்டடங்களின் உள் அலங்காரத்திற்கும், மேற் பூச்சுக்கும் மூடலுக்கும் (Exterior Cladding) நாம் கொடுக்கும் கவனிப்பும், அக்கறையும், கட்டட மூலாதாரமான கற்காரை தரத்திற்கும் தரமான எஃகு உறுதியூட்டிகளுக்கும் நாம் தரவில்லை என்பதனை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது.
Fe 415 என்ற தரத்திற்கு மேற்பட்ட Fe 500 தரமுடைய எஃகுக் கம்பிகளை பயன்படுத்தினால் இன்றைய விலையளவில் 20 சதவீதம் சேமிப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இத்தகைய டி.எம்.டி கம்பிகளில் மேம்பட்ட தன்மைகள் கீழே தரப்பட்டுள்ளது.

 

1. இதில் குறைந்த அளவு கரிமம் (Carbon) உள்ளது. எனவே, இவை கூடுதலான வளையும் தன்மையும் (முறியாமல்) பற்றவைக்கும் தன்மையும் (Weldability) உடையவை.

2. இவை கூடுதலான மேலான விடுதகைவு (Yield Stress) நீள் விசை (Tensile Stress) மற்றும் 15-18 சதவீதம் நீளும் தன்மையும் (Elongation) கொண்டவை.

3. எளிதாக வளையும் தன்மையுடையதாக இருப்பதால் (Inner Core with ferrite-peralite) எஃகு கம்பிகளை வளைப்பதற்கு குறைக்க அளவு சக்தியே போதுமானது.

4. உயர் வெப்ப நிலைகளில் (500 டிகிரி செல்சியஸ் மிலி 900 டிகிரி செல்சியஸ்) இக்கம்பிகளின் வலிமை பெரும்பாலும் குறைவதில்லை.

5. இவை வெப்பநிலை முறையில் பதப்படுத்தப்படுவதால் வெளிப்புற மேற்பரப்புப் பகுதி நுண்மையான மணிகளாக இருப்பதால் எளிதில் துருப்பிடிப்பதில்லை. இவைகட்கு மிகுதியாக துரு எதிர்ப்புத் தன்மை உள்ளன.

6. இக்கம்பிகள் Fe 415 வலிமைக்கு மேலாக Fe 500 மற்றும் Fe 550 வலிமைகளில் (500 / 550N/Mm2) கிடைக்கின்றது. எனவே 15 முதல் 20 சதவீதம் வரை சேமிப்பு கிடைத்துள்ளது.

7. உறுதியூட்டப்பட்ட கற்காரை கட்டுமானங்கள் காற்று மற்றும் சூறாவளி விசை மற்றும் விசைகட்கு உட்படும் கற்காரை உறுப்புகளில் மாறுபடும் தகைவுகள் (Reverse Stresses) ஏற்பட்டு நுண்ணிய விரிசல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இத்தகைய டி.எம்.டி கம்பிகள் வளைந்து நெளிந்து கொடுக்கும் தன்மை உள்ளவையாக இருப்பதால் ஏற்படும் சேதங்களைக் குறைத்திட இயலுகிறது. எனவேதான், உறுதி பெற கற்காரை கட்டுமானங்களில் Fe 500 கிரேடு கம்பிகளை பயன்படுத்த படவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.வெளி மார்க்கெட்டில் நல்ல தரமான டி.எம்.டி கம்பிகள் 150 சர்டிபிகேட்டுடன் கிடைக்கின்றது. அதனை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

 

டி.எம்.டி கம்பிகளை உபயோகிப்பதில் உள்ள நன்மைகள்கான்கிரீட்டுக்கு கூடுதல் இழுவை சக்தி கிடைப்பதற்காக நாம் அதில் இரும்பு கம்பிகளை கொடுத்து பலப்படுத்துகிறோம். கான்கிரீட்டை இப்படி பலப்படுத்தாவிட்டால் பல கான்கிரீட் கட்டடங்களை நாம் கட்டியிருக்கவே முடியாது. ஒரு கட்டுமானத்தில் மூன்றில் ஒரு பங்கு பணம் இவ்வாறு கான்கிரீட்டை பலப்படுத்துவதற்கே செலவாகிறது. இரும்பை சரியான முறையில் வடிவமைப்பதற்கே அந்த இரும்பின் விலையில் 20 முதல் 30 விழுக்காடு வரை செலவாகிறது. ஆகவே சரியான இரும்பை நாம் நேர்ந்தெடுப்பது மிகமிக முக்கியம். இதன் பொருட்டு எத்தனை விதமான இரும்புகள் உள்ளன என்பது பற்றறியும், நமக்கு தேவைப்படும் இரும்பின் தரம் பற்றியும் நாம் அஷீந்து கொள்வது அவசியம்.


கான்கிரீட்டை வலுவூட்ட நாம் பயன்படுத்தும் கம்பிகள் Fe 250, Fe 415, Fe 500, Fe 550 என்று 4 தரங்களில் கிடைக்கின்றன. சூடான சுருள் கம்பிகளும், குளிர்ச்சியான முறுக்கு கம்பிகளும் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

 

குளிர்ந்த, முறுகேற்றப்பட்ட வளைக்கத்தக்க கம்பிகள்: (CTD bars)

சாதாரண வட்ட கம்பிகளை விட இந்த CTD கம்பிகள் தேவைகேற்ப நன்கு வளைந்து கொடுப்பவை. கம்பிகளின் இந்த தன்மையானது குளிர் முறுக்கேற்றல் என்னும் செயல்பாட்டின் மூலம் கிடைக்கிறது.டி.எம்.டி கம்பிகள்: (Thermo Mechanically Treated Bars)டி.எம்.டி - பார்கள் அதிக வளைவுத்திறன் கொண்டவை. இந்த திறனை அந்த கம்பிகளுக்கு ஊட்டுவதற்கு அந்த கம்பிகள் தெர்மோ மெக்கானிக் என்னும் உற்பத்தி செயல்முறைக்குட்படுத்தப் படுகிறது. இந்த நடைமுறையில் வெப்ப
மான கம்பிகள், வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் நீரை பீய்ச்சியடிக்கும் துவாரங்கள் வழியாக செலுத்தப்பட்டு அதிவிரைவாக குளிர வைக்கப்படுகின்றன. அதன் பின்பு கம்பியின் மையப்பகுதி மெதுவாக குளிர்கிறது. பாய்ச்சப்படும் தண்ணீரின் அழுத்தத்தை சரியான அளவில் வைப்பதன் மூலம் கம்பிகள் நல்ல பலமடைந்து வளைந்து கொடுக்கும் தன்மையையும் பெற்று அதே நேரம் சிறந்த உறுதித் தன்மையையும் பெறுகிறது.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067842