சமீப காலமாக, நாம் அன்றாட பத்திரிக்கைச் செய்திகளிடம் மற்ற ஊடகத்திலும், தீடீர் என்று கட்டிடம் இடிந்து விழுந்து இத்தனை பேர் கவலை கிடமாக உள்ளனர் என்றும் மற்றும் திடீர் என ஒரு மாடி மண்ணுக்குள் புதைந்துவிட்டது என்றும் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டு இருக்கின்றோம். ஏன் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கோவையில் புகழ்மிக்க கோவை கொடிசியா வளாகத்தை, வடிமைத்தவருமான, Dr.L.S.ஜெய கோபால் அவர்கள், கோயம்புத்தூர் சிவில் இஞ்சினியர்ஸ் அசோசியன் நடத்திய ஒரு தொழிற்நுட்ப கருத்தரங்கில் பதிவு செய்த கருத்தை, இங்கே அப்படியே எழுதியுள்ளேன்.
‘கட்டிடங்கள் ஏன் தீடீர் என்று இடிகின்றன?, அல்லது மண்ணுக்குள் புதைகின்றன?. உதாரணத்திற்கு சில கட்டிடங்களை இங்கே சுட்டிக் காட்டுகின்றேன்.
1) கோவை உக்கடம் 5 மாடி கட்டடம், இடிந்தது.
2) கோவை அம்மன் குளக் கட்டிடம் மண்ணால் புதைந்தது.
3) ஈச்சனாரி மகாலட்சுமி கோவில் இடிந்தது.
4) சென்னை மெளலிவாக்கம், அடுக்குமாடி இடிந்தது.
மேற்கண்ட அத்தனை தோல்விகளுக்கும், உறிய சரியான காரணத்தை, உறுதியாக யாரும் கூறவில்லை, இருந்த போதும் அந்த அனுபவத்தில் இருந்து நாம் கற்றது என்ன என்றால் அது கேள்விக்குறியாகத் தான் நிற்கிறது. ஒவ்வொரு வல்லுநரும் ஒவ்வொரு காரணத்தை முன்னுக்குப் பின் முரணாகத் தான் கூறுகின்றார்களே தவிற உறுதியாக யாரும் கூறவில்லை.
பொதுவாக மற்ற எல்லா துறையிலும் உயிர் பலி மற்றும் பண இழப்பு கோடிக்கணக்கில் நடக்காமல் இல்லை என்று யாரும் மறுத்து சொல்ல முடியாது, என்ன சாபமோ, தெரியாது இந்த கட்டுமானத் துறைக்கு மட்டும், இது சிறிய அளவு இழப்பு கோடிக்கணக்கில் நடக்காமல் இல்லை என்று யாரும் மறுத்து சொல்ல முடியாது. என்ன சாபமோ, தெரியாது இந்த கட்டுமானத் துறைக்கு மட்டும், அது சிறிய அளவு இழப்பு என்றால் கூட பெரிய அளவில் பேசப்படுகிறது.
சரி இனி, அத்தகைய தோல்விக் கான காரணத்தை பற்றி பார்ப்போம்!
காற்று அழுத்தத்தால் இதுவரை எந்த கட்டுமானமும் உருக்குலைந்ததா தெரியவில்லை, ஆனால், காற்று உள் வந்து அதிக ஆற்றலுடன் தூக்குவதால் அனேக கட்டுமானங்கள், இடிந்து உள்ளன.
பெரும்பாலும் இரும்பு டிரஸ் நிறுவி உள்ள தொழிற்ச்சாலை கட்டிடங்களில் தான் இது போன்ற நிகழ்வு நிகழ்கிறது. இதை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும். என்றால் இரும்பு பிரஸ்சை அப்படியே கொண்டு போய் சுவற்றில் மேல் வைக்காமல் அவற்றை சரியான முறையில், பிடிமான முறையால் மேற்கொண்டு நிறுவவேண்டும்.
உடுமலைப் பேட்டை, பெர்ட்டிலைசர் சூடோன் ஒன்று இடிந்து விழுந்ததற்கு காரணம், கெமிக்கல் மூட்டை மற்றும் கெமிக்கல் தன்மைக் கொண்ட பொருள் தரையில் கொட்டியும், சுவற்றை ஒட்டியும் வைத்ததே காரணம். எப்போதுமே கெமிக்களை தேக்கி வைக்க வேண்டிய நிலை வந்தால் தரையில் இருந்து உயரமாகவும் சுவற்றில் இருந்து சற்று தள்ளியும் தேக்கி வைப்பதே நல்லது.
கூரை கான்கிரீட் போடும் போது கன்சீல்ட் பைப் லைன் போடுவதால் கான்கிரீட் கணம் குறைந்த அதனால் வெடிப்பு ஏற்பட்டு கூரை இடிந்து விழும். கன்சீல்ட் பைப் லைன் என்ற பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பைப்புகளை மொத்தமான ஒரே நேராக கொண்டு செல்வதாலும், கிராங் பகுதியில், சேர்ராடு வைக்காததால் கான்கிரீட் கணம் குறைந்து அங்கே வெடிப்பு ஏற்பட்டு கூரை இடிந்து விழ வாய்ப்பு உருவாகின்றது.
செங்கல் மற்றும் கருங்கல், போன்ற எந்தச் சுவராக இருந்தாலும் அதிலே, எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் கன்சீல்ட் காடி எடுக்கும் போது மிக்க கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கிடைமட்டக் காடி எடுக்கவே கூடாது. அதுபோல் சாய்வுக் கட்டியும் எடுக்கக் கூடாது. செங்குத்தாக காடி எடுப்பது நன்றாகும். கிடை மட்ட மற்றும் காய்வு காடிகள் சுவற்றின் வலிமையைக் குறைத்து இடிந்து விழக் காரணமாக அமைகின்றன. என்பதை கவனத்தில் கொள்வோம்.
. தொழிற்சாலைக் கட்டிடங்கள் அதிக உயரம் உடையவை. அச்சுவர்களை கட்டி முடிந்த பின்பு, அதன் மேல் ஏற்றி வைக்க கூடிய இரும்பு டிரஸ் வர, இருபது, இருபத்தைந்து நாட்கள் ஆகிவிடும். இந்த இடைப்பட்ட காலத்தில் சுமை ஏற்றப்படாமல் நிற்கும் சுவர் காற்றின் அதிக அழுத்தம் மற்றும் தூக்கும் ஆற்றலால் பாதிக்கப்பட்டு இடிந்து விழும்.
இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்றால் இரும்பு டிரஸ் எற்ற தாமதம் ஆகும் போது சுற்றுச் சுவர் முழுவதும் சிறுசிறு ஓட்டை விட்டு கட்டிவிட வேண்டும். பின்னர் இரும்பு டிரஸ் ஏற்றிய பிறகு அவற்றை அடைத்து விடலாம், என்ன ஒரு வேலைக்கு இரு வேலையா என்றால், அது மூணு வேலையாகாமல் இருக்க கட்டாயம் செய்யத்தான் ஆக வேண்டும். எளிய உதாரணம் பெரிய பெரிய விளம்பரத் தட்டிகளை பார்த்தால் அங்கங்கே. ஓட்டை, கிளிசல் செய்திருப்பர் அது போன்று.
. செங்கல்லோ அல்லது கருங்கல்லோ, கலவையுடன் சேரும்போது அதன் வலிமைத் தன்மை குறைந்து வருகின்றது என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும். மண்ணுடன் இணைந்த கல் வலிமை அதிகம். சுண்ணாம்பு கலந்த கல்சுவரின் வலிமை அதைவிட அதிகம். இதன் வலிமை எப்போது முற்றிலும் நின்றுப் போனது என்பது தெரிய வேண்டும் என்றால் அவற்றின் பூச்சு, வெடித்து பாளம் பாளமாகவும் விழுகின்ற போது, அதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் இனி இந்த கட்டிடம் வேலைக்க ஆகாது என்று.
பெரிய அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டுவதற்காக 20 அடிக்கு மேல் போக வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது, அதாவது அதிக ஆழத்தில் அஸ்திவாரம் அமைக்கும் போது பெரும்பாலானோர், மொத்த மண்ணையும் தோண்டி எடுத்து விட்டு, கீழே இருந்து (Footing) கான்கிரீட் போட்டு விட்டு, காலம் பாக்ஸ் போட்டு
மேலே கொண்டு வந்த பின்பு கிராவல் போட்டு கெட்டிப் படுத்தி விடுகின்றார்கள். இது தவறான முறையாகும் இதனால் என்ன நிகழும் என்றால் காலம் அதிக பளுவை எடுக்கும் போது ஓரிரு இஞ்சு நகர வாய்ப்பு ஏற்படுதல் மொத்த கட்டுமானமும் இடிய வாய்ப்பு உள்ளது. எனவே, 20 அடி ஆழம் அஸ்திவாரம் அமைக்க உள்ள இடத்தில் 15 அடி மண் எடுத்துவிட்டு மீதமுள்ள 5 அடிக்கு குழி தோண்டி Footing Concrete போடுவதே நல்லது.
அதே நேரத்தில் காலத்தை இணைக்கும் டைபீம்கள் எக்காரணத்தை முன்னிட்டும் ரீ பார் பயன்படுத்தி, அமைக்கக் கூடாது. இது சரியான முறை அல்ல, இதனாலும் கட்டிடம் இடிய வாய்ப்பு உள்ளது. முறையாக, டைபீம்கள் அமைப்பதே சிறந்தது.
இறுதியாக இரட்டை சென்ட்ரிங் அமைத்து கான்கிரீட் போடுகின்றோம் என்றால் பல பொறியாளர்களுக்கு தூக்கம் வராது. ஊரில் உள்ள எல்லா கடவுளையும் கும்பிடவார்கள். என்றாலும் அது இடிந்து விழுந்துவிடும் அதற்கு என்ன காரணம் என்றால் இரட்டை சென்ட்ரிங் அடிக்கும் போது, போலி கூரையை தாங்கி நிற்கக் கூடிய பூட்டுக்களை, ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டியிருப்போம்.
இதிலே முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வேன்றால், இரு முனைகளிலும் உள்ள காலத்துடன் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து அதாவது இருபக்க காலத்தை அனைத்தும், கிடைமட்டமாக ஒரு பூட்டு கொண்டு இணைத்து அந்த பூட்டுடன் குறுக்காக கட்டும் பூட்டுக்களைக் கொண்டு இணைக்கின்ற போது, எடை ஏற்றத்தால் வரும் கிடைமட்ட ஆற்றலை (Horizontal Fore) காலம் எடுத்துக் கொள்ளுவதால் இரட்டை சென்லிரிங் வலிமையாக இருக்கும், இடிந்து வழாது, அவ்விடத்தில் பொறியாளரின் திறமையை
வெளிப்படுத்தும்.
இது போன்ற நிறைய பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை என்னால் தரமுடியும் நேரத்தின் அருமை கருத்தை இத்துடன் நிறைவு செய்கின்றேன்” எனக் கூறினார் ஜெயகோபாலன்.
மேற்கண்ட பிரச்சனைக்கான தீர்வுகள் பில்டர்ஸ்லைன் வாசகர்கள் அனைவருக்கும் பயன் உள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை இங்கே பதிவு செய்கின்றேன்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067799
|