அரசுக்கு செலவில்லாத நல்லதொரு திட்டத்தை முன் மொழிந்துள்ள இளம் பொறிஞர் கே.கணேஷ் அவர்களை மனமாரப் பாராட்ட வேண்டும். சில திருத்தங்கள் :
1. 40 மாடிகள் கொண்ட பிரிகேஸ்ட் கட்டுமானங்களை (M30 தரக் காங்கிரீட்) சென்னையின் நில நடுக்கத்தைத் தாங்கும் வகையில் இன்றைய வளர்ந்துள்ள தொழிற் நுட்பத்தைக் கொண்டு சிரமமின்றி எளிதாகக் கட்டலாம். அதற்கு வேண்டிய Bored insitu compaction piles foundation எளிதாகப் போடலாம்.
2. காலி செய்யும் குடிசைகளுக்குத் தற்காலிகக் கூடாரங்கள், மின்வசதி, குடிநீர் வசதி, சாலை போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி (எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலமே என்றாலும்) அதற்கு மாற்று இடம் தேடுதல், செலவுகள் இவற்றையும் திட்ட மதிப்பீட்டில் சேர்க்க வேண்டும்.
3. கட்டுமானச் செலவினை சதுர அடிக்கு ரூ.1000/ரூ.1200 குறைக்கலாம். குறைவான விலையில் தருவதற்கு நிறுவனங்களை நெருக்கலாம்; அரசாங்க ஊழல்களை முழுவதுமாகத் தடுக்க வேண்டும் என்பது எல்லாம் நடைமுறைச் சாத்தியமற்றவை. தரமான குடியிருப்புகள் வேண்டுமென்றால் குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் இவற்றிடம் ஒப்படைக்காமல் PPP ((Public Private Partnership) முறையில் Special purpose vehicle மூலம் கட்டிக் கொடுக்கலாம்.
4. எப்படியும் தரமான வலிமையான உறுதியான கட்டுமானத்திற்கு ஒரு சதுர அடிக்கு ரூ.2500/- மின்வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி எல்லாவற்றையும் சேர்த்து) கண்டிப்பாக ஆகும். (இல்லை யயனில் ரூ.1000/ரூ.1200க்கு தரமான வீடுகளைக் கட்டவியலாது). அப்படி ரூ.2500/- ச.அடிக்கு செலவு ஆனாலும் அரசாங்கத்திற்கு நட்டமில்லாமல் திட்டத்தை நிறைவேற்றலாம்; எப்படி?
2000 வீடுகள் x 500சதுர அடி x ரூ.2500 = ரூ.250 கோடிகள் 1000 வீடுகள் இலவசம்; 1000 வீடுகள் வெளிச்சந்தையில் ரூ.5000/- ச.அடிக்கு (நகர எல்லைக்குள்) விற்பனை 1000 வீடுகள் மு 500 மு ரூ.5000 = ரூ. 250 கோடிகள்.
5. ஆனால் ஒரே ஒரு பெரும் சிக்கல் உள்ளது. ஒரே இடத்தில் 40/50 மாடி குடியிருப்புகளைக் கட்டி லட்சக்கனக்கானவர்களைக் குடியமர்த்தினால், இந்த ஆறுகளும் நீர்நிலைகளும் மாசுபடுவதை எப்படி தடுப்பது? இதற்கும் செலவழித்து இத்திட்டத்தை நிறைவேற்றினால் நல்லதுதான்.
எனவே பொறிஞர் கே. கணேஷ் அவர்களை மீண்டும் பாராட்டலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067801
|