யாருடைய வசதிக்கு உங்கள் வீட்டுக் கட்டுமானம்?

24 ஜனவரி 2024   05:30 AM 08 ஜனவரி 2019   03:58 PM


உங்கள் வீடு யார் வசதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்?


புதிதாக வீடு கட்டும்போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் அமர்ந்து, அவரவரின் செயல்பாடு, பழக்கங்கள், பயன்பாட்டு தேவைகள் குறித்து ஆலோசித்து, அதன் அடிப்படையிலேயே வீட்டை வடிவமைக்க வேண்டும்.


இல்லாவிட்டால், பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டிய வீடு பயன்பாட்டுக்கு உதவாததாக மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கைக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் மாறிவிடும்.

அடிப்படை


‘ஒரு பொருளை யார் அதிகம் பயன்படுத்துகிறார்களோ, அவர்களுக்கு தகுந்தபடிதான் அது வடிவமைக்கப்பட வேண்டும்’. இதுதான் உற்பத்தி வடிவமைப்பு மேலாண்மையின் அடிப்படை நோக்கமாக வரையறுக்கப்படுகிறது.


இதன்படி பார்த்தால், வீடு கட்டும்போது, அதை யார் அதிகம் பயன்படுத்துகிறார்களோ, அவர்களின் வசதிக்கு ஏற்பதான் வீடு இருக்க வேண்டும். அப்படி பார்த்தால், தற்போதைய சூழலில் வீட்டை அதிகம் பயன்படுத்துவது பெண்களும், குழந்தைகளும்தான்.


எனவே, இவர்களின் தேவைக்கு தக்கபடி வடிவமைத்தால் மட்டுமே நீங்கள் கட்டும் வீடு, உரியவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

சமூக சூழல்


இந்திய சமூக சூழலைப் பொறுத்தவரை, குடும்பங்களில் பொருளாதார ரீதியில் முடிவெடுக்கும் அதிகாரம், ஆண்களிடமே உள்ளது. இன்னமும் பல குடும்பங்களில், ஆண்களின் பெயரிலேயே வீடு வாங்கப்படுகிறது.


இதில், அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் சில மாற்றங்களின் காரணமாக, பெண்களின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. விலைவாசி உயர்ந்துள்ள சூழலில், ஆண்களின் வருமானத்தை மட்டும் வைத்துக்கொண்டு வீடு வாங்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டு உள்ளது.


இதனால் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று வருவாய் ஈட்டும் நிலையில், பெண்களின் பெயரில் வீடு வாங்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. இன்னும் சில இடங்களில், பரம்பரை வழியாக பெண்களின் பெயரில் வந்த சொத்தாக இருந்தால், அதில் கட்டப்படும் வீடுகள் அவர்களது பெயரில் இருக்கிறது.

நிம்மதியாக வாழ...


இந்த மாற்றங்களிலும், வீடு யார் பெயரில் இருக்கலாம் என்பதில்தான் ஒரeவுக்கு பெண்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளதே தவிர, அதன் வடிவமைப்பில், அளவீடுகளில் ஆண்களின் கருத்தே முடிவுகளாக உள்ளன.


இதனால், வீடு என்று வரும்போது பெண்கள், குழந்தைகளின் வசதிக்கு தகுந்தபடிதான் அமைய வேண்டும். பெண்கள்,  குழந்தைகளின் வசதிக்கு வீடு அமைந்தால், அதில் ஆண்களும் நிம்மதியாக வசிக்க இயலும் என்கின்றனர் கட்டிட அமைப்பியல் வல்லுனர்கள்.


வீடு கட்டுவதில், சுவர்களுக்கு மேற்பூச்சு தேவையா இல்லையா என்பது தொடர்பான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும், சுவர்களுக்கு கான்கிரீட்டால் மேற்பூச்சு செய்வது தவிர்க்க முடியாத அளவுக்கு நம்மிடம் முக்கியத்துவம் பெற்றுள்eது. இவ்வாறு, பூச்சுவேலை செய்யும்போது பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டும்.

இது தொடர்பாக, சில ஆலோசனைகள்:

மணல் மீ பூச்சு வேலைக்கு என்றே, தனியாக சலிக்கப்பட்ட ஆற்றுமணல் விற்பனை செய்யப்படுகிறது. இதை பயன்படுத்தினால், சிக்கலின்றி விரைவாக பணிகளை முடிக்க முடியும்.


மீ  இத்தகைய மணலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலவை, வழவழப்பாக இருக்கும். இதனால் சுவரின் மேற்புறத்தில் வழவழப்பு கிடைக்கும் என பலரும் நினைப்பர். இருப்பினும், பூச்சு வேலைக்கான கலவையில் பயன்படுத்தப்படும் மணலில், குறைந்தது 30 சதவீதமாவது சொரசொரப்பான மணலாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் பூச்சுவேலை திருப்திகரமாக அமையும்.


 பூச்சுவேலை முடிந்தபின், பொறியாளரின் அறிவுரைப்படி தொடர்ந்து சில நாட்கள் அது இறுகும்வரை, அதன் மீது வேறு எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது.

மரப்பலகை


மீ பூச்சு வேலையின்போது, பொதுவாக, கொத்தனார்கள் மரத்தால் ஆன மட்டப் பலகையையே பயன்படுத்துவர். ஆனால், சமீப காலமாக சிலர், இரும்பு மற்றும் அலுமினியத்தால் ஆன மட்டப் பலகைகளை பயன்படுத்துகின்றனர். இதனால், சுவரில் கீறல்கள் விழ வாய்ப்புள்ளது. எனவே, மரத்தால் ஆன மட்டப் பலகைகளையே பயன்படுத்துமாறு பொறியாளர் மூலம் கொத்தனாரிடம் வலியுறுத்த வேண்டும்.


மீ  பூச்சு வேலையின்போது சிதறும் கலவை, தரையில் விழாமல் பிளாஸ்டிக் பைகçe கீழே போட்டு, அதில் சேகரிக்கலாம். இவ்வாறு சேகரிக்கப்படும் கலவையை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். ஆனால், இப்படி சேகரிக்கும்போது, அதில் வேறு குப்பை, தேவையற்ற பொருட்கள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


பூச்சு வேலைக்கு முன் சுவரை தயார்படுத்துவது எப்படி?


பூச்சு வேலையை துவங்கும் முன், சுவரை எப்படி தயார்படுத்த வேண்டும் என்பது குறித்து சில ஆலோசனைகள்:


சுவர் கட்டி முடித்தவுடன் அப்படியே பூச்சு வேலையை துவங்கி விட முடியாது. முகத்தை அழகுபடுத்தும் முன், எப்படி நன்கு கழுவி சுத்தம் செய்து, உலர்ந்த துணியால் துடைத்த பின் அலங்காரம் செய்கிறோமோ, அது போலதான் சுவரிலும் பூச்சு வேலையை துவங்க வேண்டும்.


சுவரின் மேற்பரப்பை பூச்சு வேலைக்கு ஏற்றவாறு தயார்படுத்த வேண்டும். சுவரில், வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகளை வெட்டி எடுக்க வேண்டும். ஆணிகளை அகற்ற வேண்டும். ஜன்னல்கள் அமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறு துளைகளை அடைத்து, சீரான மேற்பரப்பை உருவாக்க வேண்டும்.

கான்கிரீட் துண்டுகள்


செங்கல் மீது தேவையின்றி ஒட்டிக் கொண்டிருக்கும் கான்கிரீட்டை அகற்ற வேண்டும். செங்கல் இணைப்பு பகுதியில் தேவையின்றி பிதுங்கிக் கொண்டிருக்கும் கான்கிரீட் துண்டுகளையும் வெட்டி அகற்ற வேண்டும்.


கான்கிரீட் பரப்பாக இருந்தால், அதன் மேற்பரப்பு, வழவழப்பாக இருக்கும். இதன் மீது பூச்சுவேலை செய்தால் சரியாக ஒட்டாது. சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ பெயர்ந்து விழ வாய்ப்புள்ளது. இத்தகைய இடங்களில் பூச்சு வேலைக்கு முன் மேற்பரப்பை கொத்தி விடுவது அவசியம். இதனால் ஏற்படும் ‘சொரசொரப்பு’ கான்கிரீட் கலவைக்கு பிடிமானத்தைக் கொடுக்கும்.


சுவர் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக மேற்பூச்சின் கனத்தை அதிகரிப்பது நல்லதல்ல. பொதுவாக, 2 செ.மீ. அல்லது அதற்கு குறைவான தடிமனில் மேற்பூச்சு இருந்தால் போதும். இல்லாவிட்டால், அதுவே விரிசல் ஏற்பட காரணமாகிவிடும்.


வீடு கட்டும்போது காற்ஷீன் வேகத்தையும் கவனிக்கணும்...!


கட்டி முடிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே கான்கிரீட் கட்டுமானங்களில் ஏற்படும் பாதிப்புகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழலில், பழங்கால முறையில் கட்டப்பட்டு, இப்போதும் நிலைத்திருக்கும் கட்டிடங்கள் மீது எல்லோருக்கும் ஒரு நன்மதிப்பு இருக்கிறது.


‘என்ன இருந்தாலும், அந்த காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் போன்று வருமா?’ என்று பேசாதவர்கள் இருக்க முடியாது. ஏனெனில், பழங்கால கட்டிடங்கள் அeவுக்கு நவீன கட்டிடங்களின் உறுதித்தன்மையில் ஏற்படும் குறைபாடுதான் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


ஆயுள்


பொதுவாக, கான்கிரீட்டை பயன்படுத்தி கட்டப்படும் ஒரு கட்டிடத்தின் ஆயுள் காலம் 70 ஆண்டுகள் என்று வரையறுக்கப்படுகிறது. ஆனால், அதிகபட்சமாக 40 ஆண்டுகள் கூட இக்கட்டிடங்கள் கடப்பது சந்தேகம் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள்.


நீங்கள் உருவாக்கும் கான்கிரீட் கட்டுமானம் நீண்டநாள் உழைக்க வேண்டும், அப்படியே நிலைத்திருக்க வேண்டும் என்றால், கட்டுமான வல்லுனர்கள் கூறும் இந்த ஆலோசனைகளை கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.


கம்பிகளில் ஏற்படும் கார்பனைசேன், கான்கிரீட்டில் ஏற்படும் குளோரைடு தாக்குதல், வடிவமைப்பில் பாதுகாப்புத்தன்மை குறைபாடு, மழைநீர், கழிவுநீர் வடிகால் அமைப்பதில் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றால் கட்டுமானங்களில் அதிக அeவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.


தீர்வு


கட்டுமான இடுக்குகளில் இணைப்பு பணிகள் மேற்கொள்ளும்போது ஏற்படும் கவனக்குறைவு, வெடிப்புகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுதல், கம்பிகளில் துரு ஏற்படுவதை கவனிக்காமல் விடுதல் போன்ற காரணங்களால் கட்டுமானங்கள் உரிய ஆயுள் காலத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.


கம்பிகளில் பாதிப்பு ஏற்பட்டால், அதன் மேல் உள்e கான்கிரீட்டை பெயர்த்து எடுத்துவிட்டு, ‘சீலன்ட்’ என்ற வேதிப்பொருளை பயன்படுத்தி சரி செய்யலாம். இதன் மேல் புதிதாக கான்கிரீட் பூச்சு மேற்கொண்டால், கட்டிடத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் கம்பிகளின் மீது ஒரு காப்புப்படலம் ஏற்பட்டு துரு ஏற்படுவது தடுக்கப்படும்.


காற்று


புதிதாக கட்டிடம் கட்டும்போது, அதற்கு நீங்கள் தேர்வு செய்த இடத்தின் மண்ணின் தன்மை, அதன் சுமை தாங்கும் திறன் போன்றவற்றை கவனிப்போம். இத்துடன் அப்பகுதியில் காற்றின் வேகத்தையும், அதில் உள்ள ஈரப்பதத்தின் அளவையும் கவனிக்க வேண்டும்.


இதன் மூலம் கட்டுமான பணியின்போதே கம்பியின் பாதுகாப்புக்கு தேவையான வேதிப் பொருள்களைப் பூசலாம். இவ்வாறு செய்தால் கம்பிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதன் கட்டிடங்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்கலாம்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067814