உங்கள் வீட்டு சுவரில் ‘சில் ஸ்லாப்’ போடப்பட்டுள்ளதா?

24 ஜனவரி 2024   05:30 AM 08 ஜனவரி 2019   03:27 PM


அது என்ன, ‘சில் ஸ்லாப்’ என்று யோசிக்கிறீர்களா? வீடு கட்டும்போது, ஜன்னல்கள் அமைக்கும் இடங்களில் சுவரில் விரிசல் ஏற்படாமல் இருக்க, இரண்டு அங்குலம் தடிமனுக்கு அமைக்கப்படும் கட்டமைப்புகளை, ‘சில் ஸ்லாப்கள்’ என்று கூறப்படுகிறது.


வீடுகளில், ஜன்னல்கள் அமைக்கப்பட்ட இடங்களில், அவற்றின் ஓரங்களில் சுவரில் விரிசல்கள் ஏற்படும். சுவரின் மீது விழும் சுமை போன்று, ஜன்னல்கள் மீதும் மேற்கூரையின் சுமை இறங்கும். சுவர் அளவுக்கு ஜன்னல்கள் இந்த சுமையைத் தாங்காது. அதன் காரணமாக, அருகில் விரிசல்கள் ஏற்படுகின்றன.


எப்படி அமைப்பது?


‘சுவர்களில் ஜன்னல்கள் அமைக்கும் மட்டத்தில் அதற்கு முன் 8 மி.மீ. தடிமன் கொண்ட கம்பிகளை பயன்படுத்தி, இரண்டு அங்குலம் அளவுக்கு, ‘பீம்’ போன்ற கட்டுமானத்தை அமைக்கலாம். இது அமைக்கப்படும் இடம், கட்டுமான பொறியியலில் ‘சில் லெவல்’ என்று கூறப்படுவதால் அங்கு ‘ஸ்லாப்’ போன்று அமைக்கப்படும் கட்டுமானம், ‘சில் ஸ்லாப்கள்’ என்று வழங்கப்படுகிறது.


தரைதளத்தில் மட்டுமின்றி, ஒவ்வொரு தளத்திலும் இத்தகைய சில் ஸ்லாப்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் இவை சரிவர அமைக்கப்படுகிறதா என்பதை பார்க்க வேண்டியது வீடு வாங்குபவரின் பொறுப்பு.


சில இடங்களில் கம்பிகளை பயன்படுத்தாமல், வெறும் கான்கிரீட் கலவையை மட்டும் ஒரு அங்குலத்துக்கு கொட்டி கட்டப்படுகிறது. இது எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது’. 


நீங்கள் வாங்கும் வீட்டில் இத்தகைய கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை, சரிவர கவனித்தால், பிற்காலத்தில் விரிசலால் ஏற்படும் கவலையை தவிர்க்கலாம். கட்டுமானப்பணி நடக்கும்போதே, நீங்கள் நேரில் சென்று பார்த்தால் மட்டுமே இது செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

 

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067804