மரத்தால் தரை அமைக்க ஆசையா...?

21 ஜனவரி 2025   05:30 AM 28 டிசம்பர் 2018   12:16 PM


வீடு கட்டும்போது, அதில் மேற்கூரை எவ்வeவு முக்கியமோ அதே அளவுக்கு தரையும் முக்கியத்துவம் பெறுகிறது. இதில், காலம் தோறும் பல்வேறு வழிமுறைகள் பிரபலமாகின்றன.


சிமென்ட் தரை அமைக்கப்பட்ட காலத்தில் மொசைக் கற்கள் கொண்டு தரை அமைப்பது பிரபலமானது. இதையடுத்து, விதம் விதமான பதிகற்கள் விற்பனைக்கு வந்து விட்டன. வசதி படைத்தவர்கள், மார்பிள் போன்ற கற்களை பயன்படுத்தியும் வீட்டில் தரை அமைக்கின்றனர்.


இந்நிலையில், மரங்கள், பைபர், செயற்கை இழைகள் போன்றவற்றை பயன்படுத்தியும் தரைகள் அமைக்கப்படுகின்றன.


மரத்தால்...
இதில் மரத்தால் தரை அமைக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து உள் அலங்கார வல்லுனர்கள் கூறும் ஆலோசனைகள்:


மரங்களை பயன்படுத்தி, தரைகள் அமைப்பது தற்போது பிரபலமாகி வருகிறது. தேக்கு, பைன், சிவப்பு தேக்கு போன்ற மரங்கள் தரை அமைப்பதற்கு ஏற்றவையாக பரிந்துரைக்கப்படுகின்றன. மற்ற பொருட்கள் போல் இல்லாமல், மரத்தால் தரை அமைப்பதில் மிகுந்த கவனமாக செயல்பட வேண்டும். சிறிய கவனக்குறைவு கூட ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும்.


இதற்கு அடுத்தபடியாக, இத்தரைகளை பராமரிப்பதிலும், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மரத்தாலான தரையை வீட்டில் அமைக்கும்போது, அதை தினமும் துடைக்கக்கூடாது. இல்லையயனில், அந்த தரையானது பொலிவிழந்துவிடும். எனவே, புதிதாக பொருத்தியவற்றைப் பற்றி கார்பென்டரிடம் கேட்டு, பின் அதற்கேற்றாற்போல் நடந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை டீ அல்லது காபி தரையில்பட்டால், அப்போது ஈரமான துணி கொண்டு உடனே துடைத்துவிட வேண்டும்.


துடைக்கும் போது...


தரையை துடைக்கும் முன் தூசி, குப்பைகளை அகற்ற வேண்டும். குப்பையோடு வீட்டை துடைத்தால், பின் ஈரம் காய்ந்ததும் மீண்டும் அந்த தூசுகள் படிந்து அழுக்காக காணப்படும்.


வீட்டை துடைத்தப் பின், ஈரம் காயாமல் நடக்க வேண்டாம். இல்லையயனில், பாதத்தின் சுவடுகள் தரையில் அப்படியே பதிந்து விடும். தரையை துடைக்கப் பருத்தித் துணியை பயன்படுத்துவது நல்லது.  மரத்தாலான தரையை பராமரிப்பதில் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், முறையான அனுபவம் உள்ளவரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையைப் பெற்று, தரை அமைக்கும் திட்டங்களை மேற்கொள்வது நல்லது.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2141398