கடந்த சில ஆண்டுகளாக சீனாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதியாகும் பொருள் எது? A) எலக்ட்ரானிக் பொம்மைகள், B) மொபைல் போன்கள், C) டிவிடிக்கள். மூன்றில் எதை டிக் செய்வீர்கள். ஏனெனில் மூன்றுமே தவறு. விடை D) பெங்சுயி மூங்கில்.
சீனர்களின் அதிர்ஷ்டம் தரும் பொருளாக கருதப்படும் பெங்சுயி மூங்கில்தான் இந்தியர்களின் குறிப்பாக வடமாநிலத்தவர்களின் முக்கிய இன்டீரியர் அலங்காரப் பொருள். டீபாயின் மீதும், வரவேற்பு மாடத்திலும் வைக்கப்படும் இவை காண்பவரின் கருத்தை கவர்வதில் மட்டுமல்லாது, அசத்தலான இன்டீரி யர் விஷயமாகவும் கருதப்படுகிறது. ஏகப்பட்ட டிமாண்ட் உள்ள இந்த மூங்கிலை உங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்க்க முடிந்தால் நீங்கள் பெரும் அதிர்ஷ்டசாலிதான்.
சீன வாஸ்துவில் ‘சீ’எனும் கெட்ட சக்திக்கு மாற்று மருந்தாக பெங்சூயி-ல் கருதப்படுவது மூங்கில்தான். உங்க ளிடம் இதுவரை இந்த அதிர்ஷ்ட மூங்கில் இல்லாமல் இருந்து நீங்கள் அதன் மேல் ஆர்வமாய் இருப்பதை உங்கள் நண்பர்களோ அல்லது உறவினர்களோஅறிந்தால், நிச்சயம் இந்த மூங்கிலை உங்களுக்கு பரிசாக அளிப்பார்கள். ஏனெனில், இந்த அதிர்ஷ்ட மூங்கிலை பரிசாக பெற்றால்தான் அதிக அதிர்ஷ்டத்தை அள்ளித் தருமாம். இதற்கு அர்த்தம் நீங்கள் இந்த மூங்கிலை வாங்க கூடாது என்பதில்லை. தமக்கென வாங்கக் கூடாது அவ்வளவுதான்.
பெங்சூயி பொருட்களில் நீங்கள் வியாபாரத்தில் இருப்பவராக இருந்தால் உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, இடது கை பக்கமாக ஒரு மூங்கில் கொத்தை வைத்தால் அது மிகவும் அனுகூலமான விஷயங்களை கொண்டு வரும். இதனையே வீட்டு கொல்லைப்புறத்தில் நட்டு வைத்தால் அது பண வரத்திற்கு மிகுந்த அனுகூலத்தைக் கொண்டு வரும். வீட்டு முகப்பில் மூங்கிலை வளர்த்தால், வீட்டில் நல்ல விrயங்கள் நடந்தேறுமாம். எங்கும் வளரக்கூடிய மூங்கில் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. பிரபலமானதும், பெரிதும் கிடைப்பது மான வீட்டினுள் வளர்க்கக்கூடிய அதிர்ஷ்ட மூங்கில் உண்மையில் அலங்காரப் பொருள் மட்டுமல்ல என்பதை சீனர்கள் மட்டுமல்ல பெங்காலியர்கள், நேபாளியர்கள், சிங்களர்கள், வடஇந்தியர்களும் உணர ஆரம்பித்திருக்கின்றனர்.
நம்முள் மறைந்துள்e சக்திகளை வெளிப்படுத்தும் இத்தகைய மூங்கில்கள் டிரகேனா குடும்பத்தைச் சேர்ந்ததாவரமாகும். ஃபெங் சூய் மூங்கில் தண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடுமாம்.இரண்டு தண்டுகள் அன்பை கொணரும் மூன்று தண்டுகள் சந்தோrம், ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை அளிக்கும் ஐந்து தண்டுகள் வாழ்வின் ஐந்து அம்சங்களையும் நிறைவு செய்யும் ஆறு தண்டுகள் ஆரோக்கியத்தை பேணும் எட்டு தண்டுகள் முன்னேற்றம் மற்றும் வeத்தை கொணரும் ஒன்பது தண்டுகள் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தை அளிக்கும் பத்து தண்டுகள் தற்சார்பு மற்றும் முழுநிறைவை அளிக்கும் அடையாeமாக இருக்கும்
சந்தையில் கிடைக்கும் அதிர்ஷ்ட மூங்கில் செடிகள் ஒற்றை தண்டு கொண்டவையாகவே காணப்படும்.
சிகப்பு நாடா கொண்டு தேவையான எண்ணிக்கையில் கட்டப்படும் மூங்கில்களை உங்களின் கற்பனைக்கேற்ப வடிவமைக்கலாம். இந்த மூங்கில் செடியை வீட்டில் ஒரு புறத்தில் இருந்து மட்டும் வெளிச்சம் வரும் அறையில் வைக்க வேண்டும். சில நாட்களில் சூரிய ஒளி வரும் திசையை நோக்கி வளைந்து மூங்கில் செடி வளர ஆரம்பிக்கும். பின்னர் சில காலம் கழித்து செடியை சற்று சூரிய ஒளி படும் இடத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும். இதனால் செடி அதிகமாக சாய்ந்து வளர ஆரம்பிக்கும். இதே முறையை பின்பற்றி உங்களுக்கு தேவையான வளைவில் செடி வரும் வரை செய்யலாம்.
மற்ற செடிகளைப் போலத்தான் இந்த அதிர்ஷ்ட மூங்கில் செடிக்கும் ஒளி, நீர் மற்றும் உரசத்துக்கள் தேவை. சிறிய கவனிப்பு இருந்தாலே செடி நன்றாக வeரும். இந்த செடிகள் ரசிப்பதற்கு தானே அன்றி, வேறு பயன்பாட்டிற்கு அல்ல. செடிகளை பராமரிக்க இங்கே சில யோசனைகள் சூரிய ஒளி : அதிர்ஷ்ட மூங்கில் செடியானது மிதமான நிழலிலே வளரக்கூடியதாகும். இயற்கை ஒளி கிடைக்காத அறைகளில் கூட இந்த அதிர்ஷ்ட மூங்கில் செடியை வளர்க்கலாம். பல வாரங்களுக்கு ஒரு முறை சில நாட்கள் அதனை வெளிச்சம் வரும் இடத்தில் வைத்தால் போதும். நிழலில் வeரும் தாவரமாக இருந்தாலும் புதிய கிளைகளோ அல்லது அதிக வளர்ச்சியோ இருக்காது.
நீர் : நீரில் நன்றாக வளரும் தன்மையுள்ளது இந்த மூங்கில். ஆனால் நன்நீரில் மட்டுமே செழிப்பாக இருக்கும். குளோரினோ அல்லது மற்ற ரசாயனம் கலந்த நீரில் வளராது. வடிகட்டிய நீர் அல்லது மழைநீர் தான் இதற்கு மிகவும் உகந்ததாகும்.
உரம் : இது கடினத்தன்மை வாய்ந்தது. வெறும் நீரை மட்டுமே கொண்டு பல வருடங்கள் வரை வeரும். ஆனால் செழிப்பாக வளர உரமிட வேண்டியது அவசியம். நீரை மாற்றும் போது உரமிட்டால் மிகவும் நல்லது. தாவர உணவுகளை திரவ வடிவில் அளிக்கலாம்.
மாதத்திற்கு ஒரு முறை இந்த செடியை பானையில் இருந்து அகற்றி அதன் வேர்ப்பகுதியை நன்கு சுத்தப்படுத்தி பின்னர் சுத்தமான நீர் நிரப்பப்பட்ட பானையில் வைக்க வேண்டும். இது உயரமாக வளரும் தன்மையினானது. இரண்டு மூன்று கிளைகள் கூட விடும். தேவையான உயரத்திற்கு வளர்ந்த பிறகு இதன் தண்டுப் பகுதியை வெட்டி அதனை வேக்ஸ் கொண்டு நிரப்பி விட்டால் பின் உயர வளராது.
ஃபெங் சூய் மூங்கிலை வளர்ப்பதற்கென பிரத்யேகமான கண்ணாடி தொட்டிகளும், கூழாங்கற்களும், பிற வகை கற்களும் விற்கப்படுகின்றன.
கிரஹப்பிரவேசம், பிறந்த நாள் விசேrங்களுக்கு பரிசாகத் தர மிகவும் ஏற்றப் பொருள் இந்த ஃபெங் சூய் லக்கி மூங்கில். இன்டீரியர் அலங்காரச் செடி வகைகளில் விரைவில் முதலிடத்தை பிடிக்கப் போகும் ஃபெங் சூய் மூங்கில் தற்போது பெங்களுரு, ஹைதராபாத் வரை விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு வாக்கில் தமிழகத் தின் முக்கியமான நகரங்களில் இது விற்பனைக்கு வரக்கூடும். ஆனால், அதற்குள் இதன் போலிகள் சந்தையை ஆக்கிரமித்து விடும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067783
|