ஊடக டிஜிட்டல் கட்டிடக்கலை

24 ஜனவரி 2024   05:30 AM 28 டிசம்பர் 2018   10:59 AM


கட்டிடத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு கூடிய கட்டிடக்கலை இன்று உலகம் முழுவதும் பிரபலமாகிவருகிறது. அதாவது கட்டிடத்தின் முகப்பு மற்றும் கட்டிட வெளிப்புறச் சுவர்களை டிஜிட்டல் விளக்குகள், கண்ணாடிகள், மாறும் உருவங்கள் கொண்டு அலங்கரிக்கும் வித்தை ஊடகக் கட்டிடக் கலை என்ற பெயரால் பரவலாக வரவேற்பு பெற்று வருகிறது. மேற்கத்திய நாடுகளின் நாகரீக வாசலான மும்பையில் துவங்கி, பெங்களூரு வரையில் இந்த கணினியால் இயக்கப்படும் ஊடகக் கட்டிடக் கலை பிரபலமாகி வருகிறது. கண்கவரும் வண்ணங்களில் விதவிதமான உருவங்களை கட்டிட வெளிப்புறங்களில் மூன்று பரிமாணங்களில் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதால் பொதுமக்கள் இதனைப் பெரிதும் விரும்புகின்றனர். ­­­ஷாப்பிங் மால்கள், டிஜிட்டல் விளம்பரப் பலகைகள், பெரு வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இந்த ஊடகக் கட்டிடக் கலையைப் பிரமாதமாகப் பிரயோகித்து வருகின்றன.

 

தனது கட்டிடத்தை லேண்ட் மார்க் கட்டிடமாக மாற்ற விரும்பும் கட்டுநர்களுக்கு ஊடகக் கட்டிடக் கலை நல்ல சாய்ஸ். இதனால் கட்டிடங்கள் வெகு சீக்கிரம் புகழ்வெளிச்சத்திற்கு வந்து விடுகின்றன.


இத்தகைய ஊடகக் கட்டிடக் கலைக்கான கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா சமீபத்தில் டென்மார்க் நாட்டின் ஆர்­ஹஸ் நகரில் நடத்தப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக 2014-ம் ஆண்டின் தலை உலகெங்கிலும் உள்ள சிறந்த ஊடகக் கட்டிடக் கலையில் 5 பிரிவுகளில் கட்டுமானங்கள் தேர்வுசெய்யப்பட்டுப் பரிசளிக்கப்பட்டன. தொழில்நுட்பத்தையும் கட்டிடக்கலையையும் அழகியலோடு ஒன்றிணைத் தமையால் இப்பரிசு கிடைத்தன.

 

ஸ்மார்ட் போன் கட்டிடக் கலை - கோபன்ஹேகன்
கோபன்ஹேகன் நகரில் இருக்கும் டானிஷ் தொழிற்சாலைக் கூட்டமைப்பு கட்டிடமான ‘தியா லைட்ஸ்‘ 4000 சதுர மீட்டர் பரப்புடையது. அத்தகைய பிரம்மாண்டக் கட்டிடம் முழுவதும் பல கோடி வண்ணங்களில் தீ ஜூவாலை வளைந்து நெளிந்து திரிந்தால் எப்படி இருக்கும்? கட்டிடக் கலை நிபுணர் மார்டின் கைவண்ணத்தில் 80,000 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு ஜெகஜோதியாக காட்சியளிக்கிறது ‘தியா லைட்ஸ்‘. பரிசு பெறும் வகையில் இதில் மற்றொரு சிறப்பம்சமும் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு மொபைல்ஆப் மூலம் இந்தக் கட்டிடத்தின் முன்னால் நின்றபடி ஒருவர் தன் ஸ்மார்ட் ஃபோனில் எதைக் கிறுக்கினாலும், அது அப்படியே அந்தக் கட்டிடத்தில் குஷீப்பிட்ட வினாடிகளுக்கு தோன்றும். நம்மை மிரட்டும்.

 

3டி செல்ஃபி கட்டிடக் கலை - ரஷ்யா

உங்கள் செல்ஃபி படங்களை ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் உள்ள ‘ மெகா ஃபேஸ் ‘ கட்டிடத்தின் உள்ளே சென்று தானியங்கி காமிரா மூலம் புகைப்படம் எடுத்துவிட்டு கட்டிடத்தின் முன்னால் நின்று அண்ணாந்து பாருங்கள். 8 மீட்டர் உயரக் கட்டிடம் முழுவதும் முப்பரிமாணத்தில் உங்கள் முகம் பிரமாண்டமாகத் தோன்றுவதைப் பார்த்து அசந்து போவீர்கள்.3டி தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் 11000 எலிஇடி விளக்குகள் இந்தக் கட்டிடத்தில் பதிக்கப்பட்டுள்ளன. இந்த பல்புகள் வெறும் ஒளி பாய்ச்சுவதோடு நின்றுவிடுவதில்லை. உங்கள் முகத்தில் இருக்கும் கண்கள், மூக்கு, வாய் என வளைவு, நெளிவு, மேடு, பள்ளங்களுக்கு ஏற்றாற்போல கட்டிடத்தில் ஆஸீப் அலிக்கு 2014-ம் ஆண்டின் முன்மாதிரி கட்டிடக் கலைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

 

ஒளிரும் மின் ஆலை - டென்மார்க், அர்ஹஸ்
டென்மார்க்கின் ஆர்ஹஸ் நகரில் இயங்கிவரும் எனர்ஜி டவர் மின் ஆலைக்குச் சிறந்த அனிமேட் செய்யப்பட்ட கட்டிடக் கலை விருது வழங்கப்பட்டது. இந்த மின் ஆலையின் புகைக் கூண்டுக் குழாய் மிக நீளமானதால் வெளியேறும் புகை அர்ஹஸ் நகர வாசிகளுக்கு எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். நகரின் அழகைக் கெடுப்பதாக எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்து வந்த இந்த மின் ஆலை தற்போது எரிக் எகிரெட் என்ற கட்டிடக் கலை நிபுணரின் புத்திசாதுர்யத்தால் பெருமை சேர்க்கும் கட்டிடமாக மாற்ற்ப்பட்டிருக்கிறது.

 

கட்டிடத்தின் உட்புறத்தில் இரட்டை அடுக்குகள் இருப்பதால், இடைப்பட்ட பகுதியில் வண்ணமயமாக ஒளிரும் விளக்குகள் பொருத்தினார் எரிக். எண்ணங்களின் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் எனர்ஜி டவர் கட்டிடம் உயிர் பெற்ற கட்டிடமாக மாஷீயுள்ளது எனப் பாராட்டப்பட்டுப் பரிசளிக்கப்பட்டது.

 

மிதக்கும் டிஜிட்டல் ஓவியம் - ரஷ்யா
லேசர் தொழில்நுட்பம் வெட்டவெளியில் பல உருவங்களை உருவாகி நடனமாடச் செய்யும் வல்லமை படைத்தது. அதன் அடுத்த கட்டம் தான் சுவர்களில் லேசர் மூலம் ஓவியங்களை வரையச் செய்வது.இதனை ‘லைட் பாரியர் டிஜிட்டல் கலை’ எனலாம்.

 

மடாடஸ் கட்டிடக் கலை - நைரோபி

தனியார் மற்றும் அரசு பேருந்து களின் வழித்தடங்கள் கட்டிடச் சுவர்களில் தெரிவதுதான் மடாடஸ் கட்டிடக் கலை. மடாடஸ் என்னும் மொபைல் ஃபோன் ஆப்ஸ் மூலமாக மக்களுக்கு உதவும் வகையில் பேருந்து களின் வழித்தடங்கள் கட்டிடச் சுவர்களில் பிரதிபலிக்கப்படுகிறது. நைரோபி பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடி ஆகியவை இணைந்து சிறந்த முறையில் டிஜிட்டல் வரைபடம் உருவாக்கியதைப் பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது.
- பொறி.சண்முகம்

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067782