ஆர்.சி.சி. கூரை கான்கிரிட் இடும்போது...

24 ஜனவரி 2024   05:30 AM 03 டிசம்பர் 2018   01:10 PM


சென்ற மாதம் நம் தொடரில் தரை அமைப்பது தொடர்பான சில நுணுக்கங்களைப் பார்த்தோம். இதோ இம்முறை கான்கிரீட் கூரை தொடர்பான விஷயங்கள்:

கூரையும் தட்ப வெட்ப தள வரிசையும் (Roofing and Weathering Course) தட்டையான கூரைகளின் மீது தட்ப வெட்ப தள வரிசை அமைப்பது மரபு முறையாகும். சுண்ணாம்பும் செங்கல் ஜல்லியும் முறையே 1:2 என்ற விகித கணக்கில் கலந்து நல்ல வாட்டம் அமையும் வகையில் ஏற்படுத்தி போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மழை நீர் வழிந்து வெளியேற முடியும். மழை அதிகம் உள்ள இடங்களில் 20 க்கு 1 என்ற வாட்டத்திலும் வரண்ட இடங்களில் 36 க்கு 1 என்ற வாட்டத்திலும் இச்சரிவுகள் கொடுக்க வேண்டும். தார்  (Bitumen) அல்லது அதற்கு ஈடான படிவம் போட்டு, அமைக்கப்பட்ட நீர் புகாத R.C.C. தளக் கூரைகளுக்கு 40 க்கு 1 முதல் 60 க்கு 1 என்ற கணக்கில் முறையே வாட்டம் அமைக்கலாம். அல்லது நான்கு பக்க வழியாகவோ வாட்டம் கொடுக்கப்படலாம்.


சாய்வு R.C.C. தளக்கூரைகளுக்கு, 25 மி.மீ. க்கு ஒரே சீரான கனத்தில் கான்க்ரீட் போட வேண்டும்.
வடிகால்களுக்கு (Drainage) கீழிறக்க குழாய்கள் போதுமான விட்ட அளவு உடையனவாக இருத்தல் வேண்டும். 38 ச.மீ. பரப்புக்கு 75 மி.மீ. குழாயும் 65 ச.மீ பரப்புக்கு 100 மி.மீ. குழாயும் தேவைகளை பூர்த்தி செய்யவல்லது. அதிக மழைப்பாங்கான பகுதிகளில் 100 மி.மீ. குழாய்கள் 40 ச.மீ பரப்புக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.


சுண்ணாம்பு செங்கல் ஜெல்லி (Jelly) போடுதல்: 
1. நீற்ற சுண்ணாம்பு 0.35 க.மீ. அளவும், 2. உடைந்த செங்கற்கள் (75 மி.மீ அளவு சில்லுகள் போன்று உடைக்கப்பட்டவை) 0.9 க.மீ. அளவும் எடுத்து 100 மி.மீ. கனத்திற்கு செங்கல் கான்க்ரீட் ஒரே படிவமாக வார்த்து, 5.5 கிலோ எடையுடைய சிறு திமிசு கொண்டு அடித்து தேவையான அளவு பருமனும் சரிவும் அமைக்க வேண்டும். சுண்ணாம்பு கான்க்ரீட் தயாரித்தவுடன் பயன்படுத்திட வேண்டும். முந்தையநாள் கலந்து மீதமாகியதை பயன்படுத்தக் கூடாது. பூர்வாங்க திமிசு அடிக்கும் முன்னர், சட்டுவக் கரண்டி, மட்டக்கோல், ரச மட்டம் ஆகியன கொண்டு படிவத்தின் சமதளம், வாட்டம் ஆகியனவற்றையும் சரிபார்க்க வேண்டும். இரு வரிசைகளாக அடர்த்தி மரத்துண்டு கொண்டு கான்க்ரீட்டை இறுகிட நன்றாக அடிக்க வேண்டும். முழு பரப்புக்கு நீளவாக்கில் செய்திட வேண்டும். இறுகும் நிலை அடைந்த பின்னர் மரக்கட்டையால் அடிக்கும்போது சிறிதும் அழுத்தாமல் எகிறுவது போன்று இருப்பதை உணரலாம் .


சுமார் நான்கு நாட்களுக்கு அல்லது இவ்வாறு எகுறும் நிலை வரும் வரை நன்றாக அடிக்க வேண்டும். அடிக்கும் போது கடுக்காய் போட்டு கொதிக்க வைத்த நீருடன் சுண்ணாம்பு நீர் கலந்து தெளித்திட வேண்டும். 
இவ்வாறு அடித்து முடித்தப் பின்னர் குறைந்தது. ஒருவாரம் கழித்த பிறகே ஒடுகள் பதிக்கலாம். இயந்திர அழுத்தத்தால் தயாரிக்கப்பட்ட ஒடுகளை பயன்படுத்தினால் ஒரு வரிசையாகவும் நாட்டு சதுர ஒடுகளைப் பயன்படுத்தும்போது இரு வரிசைகளாகவும் 1:3 விகித சிமெண்ட் கலவை கொண்டு பதிக்க வேண்டும். இணைப்புகளில் ஒட்டி சாந்து பூச வேண்டும். இவ்வாறு பயன்படுத்தும் கலவையில் 5% க்ரூட் எண்ணெய் (Crude Oil) சிமெண்ட்டுடன் (எடை விகிதத்தில்) கலக்க வேண்டும்.


    சுவற்றின் மீது மழைநீர் வழிந்து ஓடாமல் இருக்க கூரைத் தளத்தினை 300 மி.மீ. க்கு சுவற்றுக்கு வெளியே நீண்டு இருக்குமாறு அமைக்க வேண்டும். இவ்வாறு செய்ய இயலாத போது, வடிகால் குழாய்களை படிய வைக்க, குழாய் அமைய விருக்கும் இடங்களில் தலம் சுவற்றுக்கு வெளியே 450 மி.மீ மு 450 மி.மீ அளவு நீண்டு கொண்டிருக்கும்படி அமைத்து அவைகளில் குழாய் களை பொருத்தலாம்.


இவ்வாறு நீண்டிருக்கும் தளப்பரப்புக்கு பக்கங்களில் செங்கல் கட்டு வேலை செய்து மறைக்க வேண்டும். மழைநீர் இதன் மீது வடிந்து நேராக குழாய்களுக்கு செல்ல வேண்டும்.
கூரைத்தளமும் கைப்பிடிச் சுவரும் இணையும் இடங்களில் வடிகால் பள்ளம் அமைக்க வேண்டும். இதனை செங்கல் ஜல்லி கான்க்ரீட் அல்லது 10 மி.மீ., அதற்கும் குறைவான கருங்கல் ஜல்லியும் பயன் செய்து 1:2:4: விகித ஸ்க்ரீட் கான்க்ரீட் (Screed Concrete) டால், அமைக்கலாம். ஆனால் இதற்குப் பதிலாக வளைந்த ஒடுகளை பயன்படுத்தக் கூடாது. 
தட்ப வெட்ப தள வரிசை (Weathering Course) போட்டு இறுகி முடித்தப் பின்னர்தான் மேல் தளத்தின் உள்கூரை காரைப் பூச்சு பூச வேண்டும். தட்ப வெட்ப தள வரிசை போட்ட பின்னர்தான் தளத்து கைப்பிடிச்சுவரின் உள்பக்கம் பூச வேண்டும்.


சிமெண்ட் கல்நார் தகட்டுக் கூரைகள் (A.C.Sheet Roofing)
கன்ன முக்கோணச் சுவர்களுக்கு (Gable wall)) அப்பால் கல்நார் தகட்டுக் கூரை நீண்டிருக்கக்கூடாது. மேலும் இப்பகுதியின் மேல் தகட்டின் மேற்புறம் பிணைப்பு சுவர் (binding wall) 23 செ.மீ. அகலத்திற்கும் 30 செ.மீ. உயரத்திற்கும் கட்ட வேண்டும். இவ்வாறு அமைப்பது கன்ன முக்கோணச் சுவற்றின் முழு அகலத்திற்கும் இருக்க வேண்டும்.


கல்நார் தகடுகளில் கூரைகளுக்கான குறிப்புகள்:
(அ) பொது குறிப்பு (6 மி.மீ. பருமன் உடைய தகடுகள்)
1. தகட்டுகளுக்கான அதிகபட்ச உத்தர நெடு 1.40 மீ. விட்டம் 
(Purlin) அமையும் இடைவெளி
2.கூரையின் தாழ்வு முனையில் சுவற்றுக்கு 0.30 மீ வெளியே நீண்டிருத்தலின் அதிக பட்ச அளவு
3. பக்க அடைப்புகளுக்கான நிலைகள் சட்டங்களின் 1.60 மீ அதிக பட்ச இடைவெளி.
4. உத்தர நெடு விட்டத்தின் மீது தகடுகள் ஒன்றின் 1.50 மீ மீது மற்றது படிவதற்கான அதிக பட்ச அளவு
5. கூரையின் சாய்மான அளவு (கோணத்தில்)180 இருக்க வேண்டும்.
இரு சரிவுகள் கூடும் மேல்வரை (Ridge)யில் தகடுகளின் பிடிமாஐனம் 10 செ.மீ ஆகவும் சாய்வின் கீழ்நிலை விளிம்பில் (Verge) தகடுகள் நீண்டிருத்தல் 30 செ.மீ ஆகவும் உத்தர நெடு விட்டத்தின் இடைவெளி 1 மீ ஆகவும் இருக்க வேண்டும்.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067734