தரைகளுக்கு செலவு குறைந்த அதே சமயத்தில் பயன்பாட்டுக்கு உகந்ததாக உள்ள ஒரு பொருளுக்கான தேடலுக்கு விடையாக மரத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய தரை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. சுவீடன் நாட்டை சேர்ந்த, ‘பெர்ஸ்ட்ராப்’ நிறுவனம் மரத்தை அடிப்படையாகக் கொண்டு லேமினேசன் தரை அமைப்புகளை, 1977ம் ஆண்டு உருவாக்கி சந்தைப்படுத்தியது
சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாமல், காய்ந்த மற்றும் ஆயுள் முடிந்த மரங்களே இதை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. உறுதியான மற்றும் கடினத்தன்மை கொண்டவையாக இந்த தரை அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. எனவே, இது எளிதில் பாதிப்புக்குள்ளாகாது. நீண்ட நாள் உழைக்கக் கூடியது. மெலமைன் ரெசின்கள் கொண்ட சிந்தட்டிக் பொருளாக இவை தயாரிக்கப்படுகின்றன. லேமினேட் செய்யப்பட்டது என்பதால், ரசாயனங்கள், சாயங்கள், பூச்சுகள் இவற்றால் உடனடியாக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு இல்லை என்பதால், பசுமை கட்டுமான வல்லுனர்கள் இவ்வகை தரை அமைப்புகளை பரிந்துரைக்கின்றனர்.
வெவ்வேறு வண்ணங்களில், டிசைன்களில் இவை கிடைக்கின்றன. மேலும், அறையின் வண்ணங்களுக்கு ஏற்ற வண்ணத்தில் இதில் தரை அமைக்கலாம். விரும்பும் வகையில் மாற்றம் செய்து கொள்வதும் எளிது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067732
|