சிமெண்டுடன் செங்கல் எப்படி ஒட்டுகிறது?

24 ஜனவரி 2024   05:30 AM 26 நவம்பர் 2018   02:35 PM


தண்ணீருடன் கலந்து கிடைக்கும் சிமெண்ட் கலவை காயும்போது ஏற்படும் நீரேற்ற வினையால் (ஹைட்ரேஷன் - Hydration) கெட்டிப்படுகிறது. அப்பொழுது அது கால்ஷியம் சிலிகேட் ஹைட்ரேட் (Calcium silicate hydrate) ஆக மாறிவிடுகிறது.

சிமெண்ட் குழம்பு, செங்கல்லில் உள்ள நுண்ணிய துளைகளில் புகுந்து காயும்போது இறுகுவதால் பிடித்துக் கொள்கிறது. இதன் மூலம் இணைக்கும் தன்மை கிடைக்கிறது.

 

சிமெண்ட் எல்லாச் சூழல்களிலும் நீடித்து உழைக்கக் கூடிய கட்டடப் பொருள், நீருக்கு அடியிலும் இது வலு இழக்காமல், கரையாமல் உறுதியாக இருக்கும்.
பழங்காலத்தில் எரிமலைச்சாம்பல், சுடப்பட்ட சுண்ணாம்பு, செங்கல் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து சிமெண்ட் போலப் பயன்படுத்தினர். தற்போது கால்ஷியம் சிலிகேட், கால்ஷியம் கார்பனேட், கால்ஷியம் அலுமினேட் ஆகியவற்றைப் பொடி செய்து கலந்து சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

 

பொதுவாக, சிமெண்ட்டை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை, நீரியல் சிமெண்ட் (ஹைட்ராலிக் சிமெண்ட் - Hydraulic Cemen), நீரியல் அல்லாத சிமெண்ட் (நான் ஹைட்ராலிக் சிமெண்ட் - Non Hydraulic Cement).செங்கல் ஒட்டுவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட சிமெண்ட் பசைதான் சென்ற நூற்றாண்டின் மிக்ச சிறந்த கட்டிடப் பொருள் என பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...


ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067730