பால்கனி அகலத்துக்கும் ‘ஸ்லாப்’ தடிமனுக்கும் உள்ள தொடர்பு?

24 ஜனவரி 2024   05:30 AM 12 நவம்பர் 2018   10:05 AM


அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் கட்டப்படும் கட்டடங்களில், பால்கனி இடிந்து விழுந்த விபத்துகள் குறித்த செய்திகளை பார்த்து இருப்போம். இதற்கு காரணம், கட்டுமான பணி குறைபாடு என்று ஒதுக்கிவிட முடியாது.

 

பால்கனி போன்று, வெளியில் நீண்டு கொண்டு இருக்கும் கட்டுமானங்களை உருவாக்கும்போது, அதற்கான தரைபரப்பு, ‘ஸ்லாப்’ தடிமன் மிக முக்கிய
மாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. 
பொதுவாக பால்கனியின் தடிமன் எனப்படுவது, அந்த தளத்தின் தடிமனோடு ஒத்துப் போகும் படி சில பேர் கட்டுமானங்களைஎழுப்புவர். இன்னும் சிலரோ பாலகனிக்கு எதற்கு அத்தனை தடிமனான கட்டுமானம் என்று மெல்லியதாக “சன் ஷேட் போன்று அமைப்பர்.

 

பால்கனி அமைக்கும்போது, அதற்கான ‘ஸ்லாப்’கள் இறுதியில் இருந்து, சுவரில் இணையும் பகுதி வரை, ஒரே சீராக இருக்க வேண்டியதில்லை.
சுவரில் இணையும் இடத்தில், தடிமன் அதிகமாகவும், பால்கனியின் இறுதி முனை மெல்லியதாகவும் இருக்கலாம். இதனால், அந்த பரப்பின் பளு பரவல் சீராக இருக்கும்.

 

இந்த, ‘ஸ்லாப்’பின் தடிமனை முடிவு செய்யும் போது, அதன் பரப்பளவையும் கருத்தில் கொள்ள வேண்டும், பரப்பளவுக்கு ஏற்ப, ‘ஸ்லாப்’ தடிமன்
இருந்தால் தான், அதன் பளு பரவல் வழி முறைகளை சரியாக பின்பற்ற முடியும், அதில் தடிமன்
அடிப்படையில் அதில் பயன்படுத்தும் கம்பிகளை தேர்வு செய்ய வேண்டும்.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067707