அஸ்திவாரம் தான் கட்டடத்தின் பிரதான பகுதி. அதனால், அதில் கவனம் அதிகமாய் இருக்க வேண்டும் என்பதில், நாம் தெளிவாக இருக்க வேண்டும். கட்டடங்களின் அளவை பொறுத்து, அஸ்திவாரத்தின் ஆழமும் வேறுபடும்.
கட்டடங்களின் உயரம் அதிகரிக்கும் போது, அதன் நிலைப்பு தன்மையை உறுதி செய்ய, அஸ்திவாரத்தை ஆழமாக அமைக்க யவேண்டியது அவசியம். பல் அடுக்கு கட்டடம் என்கிற போது, அதன் வலிமையை தாங்குவது அஸ்திவாரம் தான். ஆனால், இது, அனைத்து இடங்களுக்கும் அப்படியே பொருந்திவிடாது.
சில பகுதிகள் மணற்பாங்காக இருக்கும். சில பகுதிகளில் பாறைகள் மிக ஆழத்தில் இருக்கும். அப்போது ஒட்டுமொத்த கட்டடத்தை தாங்கும் வலிமையை அதிகரிக்க, அந்த ஆழம் வரை அஸ்திவாரத்துக்கான பள்ளம் தோண்ட வேண்டியது அவசியமாகிறது.
ஆனால், மலைகளை சார்ந்த சில பகுதிகளில், தரையில் இருந்து சில அடி ஆழத்திலேயே, கடின பாறைகள் இருக்கும். இத்தகைய பகுதிகளில், உயரமான கட்டடம் கட்ட வேண்டிய தேவை இருக்கும் போது, அஸ்திவாரம் அமைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் தான், தரை மட்டத்திற்குக் கீழ் உள்ள மண் அடுக்குகளின் அமைப்பு எத்தகையதாக இருக்கிறது? பளுவை தாங்குமா? உறுதி எப்படி? பாறைகள் நிறைந்திருக்குமா? என்பதையயல்லாம், நன்கு ஆராய வேண்டும்.
குறிப்பாக, பைல் பவுண்டேrன் முறையில், தரையில் துளைப்பு பணிகளை மேற்கொள்வதாக இருந்தால், மிக கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற துளைப்பு பணிகளை துவங்கும் முன், சம்பந்தப்பட்ட நிலத்தில், பாறைகள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும்.
அத்துடன் அந்த பாறைகள் உண்மையிலேயே கடின பாறைகளா, அதற்கு கீழ் உள்ள பகுதி, எளிதில் நிலை மாறும் மண் அடுக்கு உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். மேலும், அந்த பாறையின் நிலைப்பு தன்மை குறித்து, முழுமையாக ஆய்வு செய்த பின், அங்கு துளைப்பு பணிகளை மேற்கொள்வதா என்பதை முடிவு செய்வது நல்லது.
சில இடங்களில், மேலோட்ட பகுதியிலேயே கடினப் பாறைகள் இருக்கும். அத்தகைய பகுதிகளில் நிலத்தின் தன்மை உறுதி செய்யப்பட்டுவிட்டால், துளைப்பு பணிகளை தவிர்க்கலாம். பாறையின் மேற்பரப்பை சமன் செய்துவிட்டு, அதிலேயே அஸ்திவாரத்தின் அடிமட்டத்தை நிறுத்தலாம்.
ஆனால், மேற்பரப்பில் உள்ள பாறைக்கு அடியில் நிலை மாறும் மண் அடுக்குகள் இருந்தால், அந்த பாறையை அகற்ற வேண்டியது அவசியம். இதற்கு தேவை அடிப்படியில், வெடி மருந்துகள பயன்படுத்துவதும் அனுமதிக்கப்படுகிறது.
எனவே, புதிதாக வீடு கட்டுவோர், நிலத்தில் பாறைகள் இருந்தால், என்ன செய்வது என்பதை தெளிவாக முடிவெடுத்து, செயல்படுத்த வேண்டும் என்பது இதன் மூலம் புரிந்திருக்கும்.
கவனத்திற்கு...
1. பாரத்தை தாங்குவது, அதைப் பூமிக்கு செலுத்துவதும் கடைக்காலின் பணி
2. தனி வீடுகளுக்கு, ஹாலோ வகை, பல அடுக்கு கட்டடத்திற்கு, டீப் வகை அஸ்திவாரம்
3. இயற்கையான நிலப்பரப்பு மட்டத்திற்குக் கீழே, நீளம், அகலம், ஆழம் அல்லது உயரம் என, மூன்று அளவுகளைக் கொண்டு, அஸ்திவார குழி தோண்டப்படுகிறது.
4. மண்ணின் தன்மை, மனையின் நீர்மட்டம் கட்டடத்தின் வகை, ஒட்டுமொத்த சுமை ஆகியவற்றைப் பொறுத்து, இந்த அளவுகள் மாறுபடும்.
வடிவமைப்பு உத்திகள்
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067687
|