பசுமைக் கட்டிட வடிவமைப்பு உத்திகள் பசுமைக் கட்டிடம் படைப்பது எப்படி?

24 ஜனவரி 2024   05:30 AM 09 நவம்பர் 2018   03:10 PM


இதுவரை சொல்லப்பட்டிருந்த அத்தியாயம் மூலம் பசுமை கட்டிடத்தின் நோக்கம் என்ன? அதன் வரையறை என்ன என்பது பற்ஷீ ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்போம். இந்த அத்தியாயம் முதல் பசுமை கட்டிடத்தை வடிவமைப்பது எப்படி? பசுமைக் கட்டுமானப்பொருட்களை பயன்படுத்துவது எப்படி? போன்ற பல விrயங்களை ஒன்றன்பின் ஒன்றாக நோக்குவோம்.
காற்றும், சூரிய வெளிச்சமும் வீட்டுக் கட்டிடத்தின் உள் நுழைந்தால்தான் நம்மால் சுகாதாரமாக வசிக்க முடியும். ஆனால், நகரங்களில் உள்ள வீடுகள் அப்படி இருப்பதில்லை. அரிசியும், கோணியும் போட்டு வைக்கிற நீளமான கிடங்குகள் போலத்தான் நிறைய வீடுகள் காட்சியளிக்கின்றன. அதிலும் குஷீப்பாக, வாடகைக்கு விடப்படும் வீடுகளை வடசென்னை போன்ற பகுதிகளில் இப்படித்தான் அமைக்கிறார்கள். வீட்டை விடுங்கள். பெருமளவு மின்சாரம் தேவைப்படுகிற அலுவலகங்களும் இந்த லட்சணத்தில்தான் இருக்கின்றன. சென்னை அடையாரில் ஒரு மென் பொருள் அலுவலகத்திற்கு நான் சென்றிருந்தேன்.


எட்டாவது தளத்தில் நுழைந்தேன்.
 அந்த தளத்தின் மொத்த உயரமே ஏழு அடியாகத்தான் இருந்தது. அதனால் சீலிங் ஃபேன் போட முடியாத நிலை. ஆனால், முழுக்க முழுக்க ஏசி செய்யப்பட்டிருந்தது. 2000 ச.அடி உள்ள அந்த கடடிடத்தின் ஒரு பகுதிக்கு எத்தனை டன் ஏசி பெட்டிகளை இயக்க வேண்டும்? எத்தனை யூனிட் மின்சாரம் தேவைப்படும் என்பதை நீங்களே கணக்கிடுங்கள்? இவற்றை வடிவமைத்த கட்டுநர்களோ பொஷீயாளர்களோ அவர்களுக்கு இந்த கட்டிடத்தை வாடகைக்கு எடுக்க போகிறவர் குஷீத்து சிஷீதும் அக்கறை இல்லை. ஏனெனில் வாடகைக்கு வருபவர்தானே மின் கட்டணத்தை தரப்போகிறார்?. ஆகவே, ச.அடி என்ன வாடகை கிடைக்கும்? இதை மட்டும்தான் அவர்களால் கணக்கிட முடிகிறது.


அதிகளவு ஜன்னல்களையும், சாளரங்களையும் அமைத்து பக்கத்து கட்டிடத்திலிருந்து சிறிது தள்ளி அமைத்திருந்தால் இயற்கையின் கொடைகள் தாராளமாக உள்ளே வந்திருக்கும் அல்லவா? இயற்கை கொடைகளுக்கேற்ற கட்டுமானங்களை வடிவமைப்பது குஷீத்து சில ஆலோசனைகளை காண்போம்.
தொழிற்நுட்ப ரீதியாக சொல்வதானால் சோலார் கட்டமைப்பு டிசைன்களை  பயன்படுத்தி நமது  வாழ்விடங்களை சூரியனின் வெப்பத்தில் இருந்து காக்கலாம். இத்தகைய வடிவமைப்புகள் சிலவற்றை பட்டியலிட்டிருக்கிறேன். 


ஜேக் ஆர்ச் (மூழிஉவ புrஉஜு) கூரைகள் :
கான்கிரீட் ஸ்லாபுகளால், தeங்கள் அமைப்பது சுலபமாகியுள்eது. ஆனால் துரதிருஷ்டவசமாக, கான்கிரீட் தeங்கள் வெப்பத்தை கிரகித்து அதனை வீட்டினுள் நமது வசிப்பிடங்களில் பரப்பும் தன்மையுடைவவை ஆகும்.  இதனால் இரவில் கூட உஷ்ணம் தகிப்பதை நாம் உணர்கிறோம். இதற்கு தீர்வாக ஆர்ச் போன்று வçeவான அமைப்பாக செங்கற்கçeக் கொண்டு அமைக்கப்படும் தeங்களுக்கு ஜேக்ஆர்ச் கூரைகள் என்று பெயர். இத்தகைய அமைப்புகளால் வெப்பத்தைக் கடத்தும் அeவு வெகுவாகக் குறையும். ஏனெனில் செங்கற்கள் வெப்பத்தை அதிகம் உட்கிரகிக்காது. 
மேலும் இத்தகைய பரப்புகளில் கான்கிரீட் பூச்சு இருக்காது.

 
இப்படி பொருத்தப்படும் செங்கற்களின் இடையே உள்e இடைவெளியை கான்கிரீட் கலவை கொண்டோ அல்லது நீர்ப்புகா மிக்ஸர்கçe வைத்தோ அடைக்கலாம். கூடுதல் சப்போர்ட்டுக்கு இரும்புக் கம்பிகçe உபயோகிக்கலாம். இத்தகைய ஜேக் ரூஃப் சிஸ்டத் தின் கனம் 10 முதல் 12 அங்குலம் வரை இருக்கும். ஜேக் ரூஃப்கçe அமைப்பது அதிக வேலை மற்றும் நேரத்தை எடுத்துக் கொண்டாலும், செலவைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு கான்கிரீட் தளத்திற்கு என்ன செலவாகுமோ அந்த செலவே இதற்கும் ஆகும்.  கீழே உள்e பீம்களின் நீeத்தைப் பொறுத்தே ஜேக்ரூஃப்களின் அeவு அமையும். ஏனெனில் இவை அந்த பீம்களின் மேல்தான் நிலைநிறுத்தப்படுகின்றன.


கண்டிப்பாக விட வேண்டிய காலி இடங்கள் :
அடுத்தடுத்து அமைக்கப்படும் கட்டுமானங்கள் வெப்பத்தை கட்டுப்படுத்தாது. எனவே அவற்ஷீற்கு இடையே காலி இடங்கçe ஏற்படுத்தினால் காற்றும் வெளிச்சமும் கட்டிடத்திற்கு கிடைக்கும். முழுப்பிரத்யேக அறைகளான படுக்கையறை, குளியறை மற்றும் படிக்கும் அறை போன்றவற்றைத் தவிர்த்து மற்ற அறைகளை  ஒன்றோடு ஒன்று இணைத்து அமைக்கலாம். 
இதனால் வெப்பமான காற்றானது அந்த அறையிலேயே தங்காமல் எளிதில் வெளியேஷீ அறைகள் குளிர்ச்சியாக இருக்கும். வீட்டைச் சுற்ஷீ இடைவெளி விட்டு காம்பவுண்டு சுவர் எழுப்பலாம். இந்த இடங்களில் கான்கிரீட் கொண்டு மூடி விடாமல் மண்தரையாக, புல்வெளியாக பராமரிக்கலாம். இதனால் மழைநீரானது நிலத்தில் ஊறி  நிலத்தடி நீர்
மட்டம் பாதுகாக்கப்படும்.  


சூரிய வெளிச்சம் :
 நமது வீட்டின் வாழுமிடங்களின் வடிவமைப்பு சூரியனின் தோற்றம்  மற்றும் மறைவுப் பாதைகçe அடிப்படையாக வைத்து செய்யப்பட வேண்டும். சூரியக்கதிர் நேரடியாகப் படும் இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். 
இந்த இடங்களில் படுக்கை மற்றும் வரவேற்பறைகçe அமைக்காமல், டாய்லெட், வராண்டா, ஸ்டோர் ரூம் போன்றவற்றை அமைக்கலாம். பொதுவாக சென்னை போன்ற இடங்களில் தெற்குப்பகுதியில்தான் வெயில் அதிகம் படும். ஆனால் காற்றும் தென் திசையில் இருந்துதான் அதிகமாக வீசும். எனவே, வரும் காற்றை தடுக்காத வகையிலும், வெயிலை மறைக்கும் விதத்திலும் வடிவமைப்புகள் இருக்க வேண்டும். 


கூரை மேற்பரப்பு : 
மாடிகளில் வெப்பம் ஊடுருவா டைல்கçe பதிப்பதன் மூலம் வீட்டினை குளிர்ச்சியாக வைக்கலாம், இத்தகைய டைல்கள் வெப்பத்தை உள்வாங்குதில்லை.   மேலும் நமது வீட்டு மாடியைத் தோட்டமாக மாற்றலாம்.  இதனாலும் வெப்பம் வீட்டினுள் இறங்குவது தடுக்கப்படும். மாடியில் புல்வெளி கார்பெட்டை வeர்ப்பதன் மூலமும் சூரிய வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம்.
அறை அமைப்பு :
 காற்று எளிதில் உள்வாங்கும் விதத்தில் அறைகள் அமைக்கப்பட்டால் காற்ஷீன் சுழற்சி அறையினுள் நுழைய ஏதுவாகிறது. இதனால் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்கான பிçeண்டுகçe மரம் மற்றும் சிமெண்டினால் அமைக்க வேண்டும். வெளிநாடுகளில் சோலார் ஆர்க்கிடெக்சர் முறை என்று தனியே உள்eது. ஆனால், இங்குதான் நாம் அதைக் கண்டு கொள்வதில்லை.
நமது பில்டர்களும், ஆர்க்கிடெக்டுகளும்  சோலார் ஆர்க்கிடெக்சரை தங்கeது கட்டுமானங்களில் பின்பற்ற வேண்டும் என்பதே நமது விருப்பம். 
இதுமட்டுமன்றி ஒரு பசுமைக்கட்டிம் என்றால், அதன் வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்ஷீயும் அதன் சிறப்பம்சம் குறித்தும் ஒரு தலைசிறந்த நிபுணர் சொல்வதை கேளுங்கள்.

அவர் பொஷீ ஏ.பி.அருள்மாணிக்கம் ஆவார். சென்னை பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய அவர் அடிப்படையில் ஒரு சிறந்த வடிவமைப்பு பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவரது பசுமைக்கட்டிட வடிவமைப்பு குறித்த பார்வை.
பசுமைக் கட்டிட வடிவமைப்பின் நோக்கம்
கீழ்கொண்ட முக்கிய குறிக்கோள்களுடன் பசுமைக் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டு கட்டப்படுகின்றன:
(1) கட்டிடங்களைப் பயன்படுத்தும் பயனாeர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்.
(2) இக்கட்டிடங்களில் பணிபுரியும் பணியாeர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.
(3) நில மற்றும் நீர் ஆதாரங்களைச் சிக்கனமாய்ப் பயன்படுத்துதல்.
(4) சுற்றுச்சூழல் மாசு படுதலைக் குறைத்தல்.
(5) இயற்கைச் சூழலை குறைவான செலவில் அதிகபட்சமாய் பயன்படுத்துதல்.
(6) உட்கட்டமைப்புகளின் தரத்தை உயர்த்துதல், 
      (7) மறு சுழற்சி மூலம் கழிவுகளின் அeவைக் குறைத்தல். 
கவனத்தில் கொள்eப்பட வேண்டியவை
பசுமைக் கட்டிடங்கள் கட்டப்படுகையில் கீழ்க்கண்ட காரியங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:
(1) நீர் மற்றும் காற்றின் தரத்தை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய அரிமானங்கள் அல்லது தேய்மானங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
(2) வாகனப் பயன்பாட்டினால் நிலம், நீர், காற்று மாசுபடுதல் குறைக்கப்பட வேண்டும்.
(3) நில மேற்பரப்புகளை நீர் புகா வண்ணம் மூடுவது குறைக்கப்பட்டு, மழை நீர் மேலாண்மை மூலம் நிலத்தடி நீர் வளம் மேம்படுத்தப்பட வேண்டும்.
(4) எரிபொருள் பயன்பாட்டில் புதிய அணுகுமுறை பின்பற்றப்பட்டு மாற்று சக்திப் பயன்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும்.
(5) காற்றோட்டம், வெளிச்சம், வெப்பம் ஆகியவை தனி மனித தேவைக்கேற்ப அளிக்கப் பட்டு, பயனீட்டாeர்களின் உடல் நலம், வசதிகள் மற்றும் பணித்திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.
(6) கட்டிடத்தின் உட்புற பயன்பாட்டுப் பகுதிகள், கட்டிடத்தின் வெளிப்புறச் சூழலுடன், காற்று மற்றும் வெளிச்ச தேவைக்கேற்ப இணைக்கப்பட வேண்டும்.
(7) கட்டிடங்களில் அமைக்கப்படும் திறப்புகள் சரியான அeவுகளில் அமைக்கப்பட வேண்டும்.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067706