தற்போதைய காலகட்டத்தில் கான்கிரிட் ஒரு சகலகலா வல்லமை படைத்த கட்டுமான பொருளாக திகழ்கிறது. இதனுடைய வலிமையும் நீடித்துழைக்கும் தன்மையும் உலகம் பூராவும் வீடுகள், கட்டிடங்கள், ரோடுகள், பாலங்கள், விமான தளங்கள், சுரங்க பாதைகள், கடலடி கட்டுமானங்கள், முதலானவைகளை அமைக்க மிக விரும்பிய பொருளாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக கான்கிரிட் தயாரிப்பில் சாதாரன போர்ட்லாண்ட் சிமெண்ட் என்கிற பொருள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சிமெண்ட் தயாரிப்பில் சுண்ணாம்புக்கல் 1450 டிகிரி ஸெல்ஸியஸ் வெப்பத்தில் உருவாக்கப்படுவதால் இது கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவதுடன்
மானிடனால் உருவாக்கப்படும் அனுமானிக்கப்பட்ட மொத்த வெளியேற்றமான கார்பன்-டை-ஆக்ஸைடின் 8 சதவிகிதத்தில் பெருமளவில் உற்பத்தி செய்கிறது. அதாவது ஒரு டன் சிமெண்ட் உற்பத்தியில் ஒரு டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது. கட்டுமானத்தில் இதனால் ஏற்படும் சுற்றுசூழலில் தாக்கம் பற்றி அதிக கவனம் செலுத்தப்படும் இன்றைய கால கட்டத்தில் உலகம் பூராவும் உள்ள பொறியாளர்கள் மற்றும் அறிவியலாளர்களின் முழு கவனமும் கான்கிரிட்டினால் உண்டாகும் கார்பனின் பாதிப்பை குறைக்கும் வழிமுறைகளை தேடுவதில் திரும்பியுள்ளது.
இதன் திருப்புமுனையாக ஓர் புதிய உபாயத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த வாக்னர்ஸ் காம்போஸிட் பைபர் டெக்னாலஜினின் வாக்னர் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார். இவர் நவீனமான மிக குறைந்த கார்பன் வெளியேற்றம் மற்றும் உள்ளடங்கிய சக்தி கொண்ட முன்கூட்டிய கலவை செய்யப்பட்ட கான்கிரிட்டை உருவாக்கி இருக்கிறார். இதனை புவிக்கு சாதகமான கான்கிரிட் (EFC) என பெயர் சூட்டி உள்ளார். இந்த கான்கிரிட் ஜியோபாலிமர் பைன்டர் டெக்னாலஜியை உபயோகப்படுத்தியுள்ளது.
EFC என்றால் என்ன?
EFC என்பது பரம்பரையாக உபயோகபடுத்தப்படும் சாதா கான்கிரிட் தான். ஆனால், இதில் போர்ட்லாண்ட் சிமெண்ட் பயன்படுத்தப்படுவதில்லை. EFC சிமெண்ட் பதிலாக ஜியோபாலிமர் பைன்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஜியோபாலிமர் இருவித தொழிற்சாலை கழிவுகளை கொண்டு வேதியல் முறையில் தயாரிக்கப்படுகிறது. ஒன்று இரும்பு உலையிலிருந்து கிடைக்கும் கழிவு தான் பிளாஸ்ட் பர்னஸ் சிலாக். மற்றொன்று மின் உற்பத்தியிலிருந்து கரியை எரிப்பதால் கிடைக்கும் ஃபிளை ஆஷ் என்கிற கழிவு. சாதாரான கான்கிரிட்டில் பயன்படும் போர்ட்லாண்ட் சிமெண்டு மூலம் வெளியேறும் கார்பன்-டை-ஆக்ஸைடை விட இக்கழிவுகளை உபயோகிப்பதனால் வெளியேறும் கார்பன் வெளியேற்றம் 60 முதல் 70 சதவீதம் வரை குறைகிறது.
இதனை நடைமுறை கணக்கிற்கு மாற்றப்படும்போது 25 MPa வலிமை கொண்ட EFC ஒவ்வொரு க.மீ.க்கு 154 கிலோ Co2 சேமிக்கப்படுகிறது. இதுவே32 MPa EFC 184 கிலோ Co2 ம், Co2 D, 40 MPa EFC 220 கிலோ Co2 ம் மற்றும் 50 MPa EFC 270 கிலோ Co2 ம் சேமிக்கிறது.அன்றாட வாழ்வில் Co2 வெளியேற்றத்தை குறைக்க வல்ல சாதா கான்கிரிட்டிற்கு பதிலாக EFC கான்கிரிட் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய உதாரணத்தை பார்ப்போம்.
300 சதுரடி கொண்ட வீட்டின் ஸ்லாப் மற்றும் ஃபுட்டிங் ஆகியவைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வோம். சாதா கான்கிரிட்டிற்கு பதிலாக EFC யை பயன்படுத்துவதால் 9.2 டன்கள் Co2 வாயுமண்டலத்திற்கு சென்றடைவது தடுக்கப்படுகிறது. கீழ் கண்ட அட்டவணை கான்கிரிட் உபயோகமும் அதிலிருந்து வெளியேறும் கார்பனின் அளவை EFC யை பயன்படுத்துவதால் ஏற்படும் குறைவையும் எடுத்துக் காட்டுகிறது.
குணாதிசயங்கள்
பலதரபட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட இக்கான்கிரிட்டின் குணாதிசயங்களை வாக்னர் வெளியிட்டார். இக்கான்கிரிட்டின் பொறியியல் வடிவமைப்பு கட்டமைப்பு குணங்கள் மிக நல்ல முறையில் உள்ளது என்றும், சில பயன்பாடுகளில் சாத கான்கிரிட்டை விட சிறப்பாக இருப்பதாக எடுத்துக் காட்டியுள்ளார். EFC யின் நீடித்துழைப்பு, குறைவான சுருங்கும் தன்மை, ஆரம்ப கால வலிமையை பெருதல், அதிகபட்ச வளையும் சக்தி, மற்றும்தீயை எதிர்க்கும் தன்மை குறிப்பிடதக்கவையாகும்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067694
|