இந்தியாவில் இப்போதெல்லாம் மிக உயர்ந்த கட்டடங்கள் சர்வசாதாரணமாகக் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு டவர் கிரேன்கள் முக்கியமாகின்றன.
டவர் கிரேன்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். ஆனால் இதற்கான சாதனங்களை விரும்பினால் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அண்மைக் காலம் வரையிலுமான நிலைமையாக இருந்து வந்தது.
இப்போது அது கட்டாயம் இருந்தாக வேண்டும் என்கிற அளவுக்குப் பிரபரலமாகி இருக்கிறது. ரிமோட் கண்ட் ரோலில் டவர் கிரேனைக் கையாள்வது எளிது.மேலும், கிரேன் இயக்குபவர்களை வேறு வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் ஒரு நாளின் பெரும்பகுதி நேரத்தில் டவர் கிரேன்கள் சும்மாவாகவே
நிறுத்தி வைக்கப்பட வேண்டி இருக்கும். அதனை இயக்குபவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளமும் தேவையற்ற செலவாகத்தானே இருக்கும்? ரிமோட் முறையில் இயக்கினால் இத்தகைய அநாவசியச் செலவுகளை அடியோடு குறைக்கலாம். வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் மாற்று வேலைகளுக்கு அனுப்பி வைப்பதும் இயலும்.
போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத விதத்தில் சட்டென்று வேலைகளை முடிக்க வேண்டுமானால் ரிமோட் கண்ட்ரோல்தான் ஏற்ற வழியாக இருக்கும். ஆட்கூலி விகிதங்கள் தொடர்ந்து மிகுந்து வரும் சூழ்நிலையில் கூலிச் செலவுகளைக் குறைக்கவும் ரிமோட் கண்ட்ரோல் இயக்கம் வழி வகுக்கிறது.
இதனால்தான் இப்போது வரும் கிரேன்களில் எல்லாம் இந்த ரிமோட் கண்ட்ரோலும் அசல் பாகமே இணைக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே இயக்கப்பட்டுவரும் கிரேன்களில் இந்த வசதி இல்லாவிட்டாலும் இப்போது புதிதாக இணைத்துக் கொள்ளலாம். பெரும்பாலான கட்டுமானப் பகுதிகளுக்குள் இயந்திரங்களை இயக்குபவர்கள் நேரடியாகப் போய்வர முடியாமல் இருப்பது இயற்கை. அந்த மாதிரியான சூழ்நிலைகளில் ரிமோட் இயக்கம் பெரிதும் கை கொடுக்கும்.
பாதுகாப்பான இயக்கத்திற்கும் இதில் பல வழிகள் உள்ளன. பேட்டரியின் நிலை, காற்ஷீன் தாக்கம் போன்ற பல அளவீடுகளைக் கிரேன் இயக்குபவர் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும்.தேவைப்படும் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு விபத்துக்களைத் தடுக்கலாம். இது பாதுகாப்புக் கோணத்தில் மிகப்பெரிய ஆதாயமாகும். குஷீப்பிட்ட எல்லைக்கு மேல் இயக்கப்படக் கூடாது என்று எச்சரிக்கை செய்யும் விளக்கு வசதிகளும் இருப்பதால் அதிகப்படி பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
50 மாடிகளுக்கு மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட கட்டடங்களைக் கட்டும்போக்கு இப்போதெல்லாம் அதிகரித்து வருகிறது. இன்றைக்கும் பழைய முறைகளையே பின்பற்ஷீக் கொண்டிருந்தால் சிறிய தவறு நேர்ந்தாலும் விபத்துக்களால் விபரீதம் நிகழ்ந்துவிடும். ரிமோட் கண்ட்ரோல் இயக்கம் இத்தகைய விபத்துக்களைக் குறைக்கிறது. இயக்கத்தையும் எளிதாக்குகிறது. குஷீப்பிட்ட ஆரம், வீச்சு ஆகியவற்றைத் துல்லியமாக நிர்ணயித்துக் கொண்டு இயக்க முடிவதால் வேலைகளைப் பிழையில்லாமல் செய்து முடிக்க முடிகிறது.
சுமார் 40 மீ முதல் 150 மீ வரையிலான அணுகுதிறனுடைய ரிமோட் சாதனங்கள் இத்தகைய கிரேன்களுடன் இணைக்கப்படுவதால் நமது பிராஜெக்ட் சைட்டின் எந்த மூலையிலிருந்தும் கிரேனை இயக்க முடியும். இதனுடைய ரிமோட் சென்சிங் ரியாக்rன் அதிவேகத்திறனுடையது என்பதால் நாம் இடம், வலம், மேல், கீழ் என எல்லா திசைகளிலும் நாம் விரும்பியபடி இயக்கம் நடைபெறும். முன்பே சொன்னபடி பழைய கிரேன்களில் கூட இத்தகைய புதுவித ரிமோட் வசதியை குறைந்த செலவில் பொருத்திக்கொள்ளலாம். இதனால் கிரேனின் அருகாமையிலேயே ஆபரேட்டர் இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயமில்லை.
தேவையை அடிப்படையாக கொண்ட இத்தகைய கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கவையே.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067666
|