தொழிற்நுட்பங்களுக்கும், நவீன கண்டுபிடிப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத துறைதான் கட்டிடத்துறை. தற்போது உலகின் மிகவும் லேசான எடையுடைய புதிய கட்டிடப்பொருள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
கடல் சார்ந்த கட்டுமானங் களுக்கும் லேசான எடையுடைய மிதக்கும் தன்மையுடைய கட்டிடப் பொருட்கள் மிகவும் அவசியமானது. சக்கை போன்ற பொருட்கள் இருந்தால்தான் மிதக்கும் தீவு, மிதக்கும் கட்டிடங்கள், ஓட்டல்கள் போன்றவற்றை தீர்மானிக்க இயலும். அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் கண்டுபிடித்திருக்கும் ஒரு புதிய பொருள் தான் சின்டாக்டிக்ஃபோம் (Syn Toc Tic foam) ஆகும்.
நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைகழகம் மெக்னீசியம் மற்றும் சிலிகான் கார்பைடு ஆகியவற்றினால் ஆன துளைகள் உடைய காந்தமின் கட்டிட பொருளை உருவாக்கியிருக்கிறது. 0.92G/CM3 அடர்த்தி உடைய இந்த மின் பொருள் தண்ணீரை (pg) விட லேசானது என்பதால் கடல் கட்டுமானங்களுக்கு இது உபயோகமாக இருக்கும் என கருதப்படுகிறது. விரைவில் இதனை கட்டுமானத்துறைச் சந்தையில் எதிர்பார்க்கலாம்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067658
|