காசை மிச்சப்படுத்தும் கட்டிடக் கழிவு மேலாண்மை

24 ஜனவரி 2024   05:30 AM 03 நவம்பர் 2018   10:04 AM


மக்கள் தொகை பெருகப் பெருக தேவையான உணவுப் பொருட்களை விளைவிப்பது எத்தனை முக்கியமோ, அதேபோன்று குடியிருப்புகளும் உள்கட்டமைப்பு வசதிகளும் பெருகுவது முக்கியம். வேளாண்மையும், கட்டிடத்துறையும் ஒன்றுடன் ஒன்று இணைந்த மக்கள் தொகையுடன் தொடர்புடைய சார்பு காரணிகளாகும்.

நகர விரிவாக்கத் திட்டங்கள் போன்ற காரணங்களால் பிரதான நகரப் பகுதிகள் மட்டுமில்லாமல், புறநகர்ப் பகுதிகளிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கட்டுமானங்கள் பரவலாக நடக்கின்றன. இங்குதான் நாம் ஒரு விஷயத்தைக் கண்டுகொள்வதே இல்லை. அதுதான் முறைபடுத்தப்பட்ட கட்டுமானக் கழிவு.
ஒரு புறநகர்ப் பகுதியிலும், கிராமப் பகுதியிலும், கட்டிடங்கள் உருவாகுவதற்கும், நகர்ப்புறங்களில் கட்டிடங்கள் உருவாகுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கட்டிடமே கட்டாத புதிய நிலத்தில், புதிய கட்டுமானம் அமைக்கும்போது அங்கு வீணாண சில கட்டிடப் பொருட்கள் தவிர கட்டுமானக் கழிவு என்பது காணப்படுவதில்லை.

ஆனால், நகர்ப்புறங்களில் ஏற்கனவே இருக்கும் பழைய வீடுகள், கட்டுமானங்களை இடித்தழித்து விட்டு புதிய கட்டுமானங்களை உருவாக்கும் சூழ்நிலையில் நாம் உள்ளோம். முன்பெல்லாம் 80, 100 ஆண்டுகள் வரை ஒரு கட்டிடத்தை பராமரிப்பர். கூடுமானவரையில் மறுசீரமைப்பு முறையில் அதனைப் பாதுகாப்பர். அதற்குப் பிறகு மூன்றாவது, நான்காவது தலைமுறையினர்தான் பழைய கட்டிடத்தை இடித்து தங்களது வசதி மற்றும் தேவைக்கேற்ப புது கட்டிடத்தை நிர்மாணிக்க நினைப்பர். ஆனால், இப்போதெல்லாம் 30,40 ஆண்டுகள் ஆன கட்டிடத்தைக் கூட இடித்து புதிய கட்டிடத்தைக் கட்ட நினைப்பவர்கள் அதிகம். சென்ற தலைமுறைக் கட்டிடங்களை அடுத்த தலைமுறையினர் இடித்து மாற்றி கட்டும் நிலை உருவாகிவிட்டது.

 

இது தவிர, சென்னைப் போன்ற நகரங்களில் இன்னொரு புதிய தலைவலி தோன்ற இருக்கிறது. சென்னையில் 1980க்குப் பிறகுதான் பன்னடுக்கு குடியிருப்பு கட்டுமானங்கள் வரத் தொடங்கின. 2020க்குப் பிறகு சென்னையில் 40 ஆண்டுகள் வயதான பழைய அபார்ட்மெண்டுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விடும்.

 

அவற்றை இடித்து புதிய கட்டுமானங்கள் உருவாக்கையில் ஏராளமான டன்கள் கட்டிடக் குப்பைகளும் உருவாகும். அவறறையயல்லாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை இப்போதிலிருந்தே நாம் திட்டமிட வேண்டும். 
புதிய கட்டிடங்களின் உருவாக்கத்திற்கு செலுத்தும் அதே அக்கறை பழைய கட்டுமானங்களிலிருந்து பெறப்படும் கட்டுமான கழிவுகளை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பது பற்றி கட்டிடவியலாளர்கள் அவசியம் சிந்திக்க வேண்டும். மேல்நாடுகள் போல நம் நகரங்களிலும் கட்டுமானக் கழிவுகள் மேலாண்மையின் தரம் அதிகரிக்க வேண்டும். அதுகுறித்த சிந்தனை அரசிடமும் பொதுமக்களிடமும் இந்நேரம் பரவியிருக்க வேண்டும்.

 

ஆனால், தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலுமே கட்டுமானக் கழிவு மேலாண்மையின் நிலை பரிதாபத்துக்கு உரியதாகவே இருக்கிறது.

சென்னையில் மட்டும் தினமும் ஏறக்குறைய 4,500 மெட்ரிக் டன் கழிவுகள் கையாளப்படுகின்றன. அதில் 700 மெட்ரிக் டன் அளவுக்குக் கட்டுமானக் கழிவுகளின் அளவு இருக்கும் என்கிறார் சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர். இந்தப் புள்ளி விவரங்கள் கட்டுமானக் கழிவு மேலாண்மையில் நமது நாட்டின் போதாமைக்குப் போதுமான சான்றுகளாகும்.

 

கட்டுமானக் கழிவு மேலாண்மையின் தேவை என்ன?

இந்தியாவில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் சராசரியாக 10 முதல் 12 மில்லியன் டன் கட்டுமானக் கழிவுகளை உண்டாக்குகின்றன. ஆனால் அந்தக் கழிவுகளிலிருந்து 50 சதவீதம் கூட மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. கட்டுமான கழிவு மேலாண்மை தொடர்பான விதிகளை மத்திய அரசு வகுக்க இருப்பதாகச் சமீபத்தில் டெல்லியில் நடந்த மாநில அமைச்சர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2020க்குள் அவை முழு வீச்சில் நடைமுறைப் படுத்தப்படுமா? என்பது சந்தேகமே.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067659