மனையின் எல்லைக்கல் மாயமாகிறதா?

24 ஜனவரி 2024   05:30 AM 02 நவம்பர் 2018   11:10 AM


பொதுவாக புதிய மனைகளை விற்பனை செய்யும் போது, அதன் நான்கு எல்லையிலும் அடையாளகல் அமைக்கப்படும். மனையை வாங்கிய பின், சில மாதங்கள் வரை நீங்கள் சென்று பார்க்கும் பொது அந்த கற்கள் இருக்கும். குறைந்தபட்சம் ஒராண்டு இடைவெளிக்கு பின் சென்று பார்த்தால், எல்லைக்கல் இருந்து இடத்தையே தேட வேண்டியது வரும்.
நம்மில் பலரும் இதற்கான பின்னணி குறித்த ஆய்வில் இறங்குவதில்லை. இந்த கற்கள் காணாமல் போவதில் நடக்கும் முறைகேடுகள் இன்னும் முழுமையாக வெளிச்சத்துக்கு வராமல் உள்ளன.
காரணம் என்ன?
காலி மனைகளை அடையாளப்படுத்துவதில் எல்லைக்கல் மிக முக்கிய காரணியாக உள்ளது. 
மனைப்பிரிவு உருவாக்கப்படாலும், விற்பானியின் போது, கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் முன்னிலையில் நிலம் அளக்கப்பட்டு எல்லைக்கல் அமைக்கப்படும்.
பொதுவாக இந்த கற்கள் மேலோட்டமாக தரையில் புதைக்கப்படுவதே இவை காணாமல் போக மிக முக்கிய காரணமாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலத்தை அளந்து எல்லைக்கல் போடுவதற்காக சர்வேயரும், கிராம நிர்வாக அலுவலரும், மனையின் உரிமையாளரும் செல்லும் போது அவர்கள் எல்லைக்கல் வாங்கி செல்வதில்லை.
அந்தந்த கிராமத்தில் உள்ள பணியாளர்களே இதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனஎ. இவர்கள் ஒவ்வொரு மனைக்கும் புதிது புதிதாக எல்லை கற்களை வாங்கிவப்பது இல்லை. ஒராண்டுக்கு மேல் யாரும் வந்து பார்க்காத மனைகள் ஆகியவற்றில் இருந்து எல்லைக்கற்களை எடுத்து பதுக்கி வைக்கின்றனர். புதிதாக 
மனையை அளக்கும் பொது எல்லைக்கல் தேவைப்பட்டால் இந்த கற்களை கொடுத்து பணம் பார்த்து விடுகின்றனர்.
இவ்வாறு பணம் வாங்கிக் கொண்டு கொடுத்த கற்களையும் அவர்கள் விட்டுவைப்பது இல்லை. சில மாதங்கள் கழித்து யாருக்கும் தெரியாமல் அந்த கற்களையும் பெயர்த்து எடுத்து பதுக்கி வைத்து விடுகின்றனர்.
இதனால், ஒவ்வொரு முறையும் சில ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எல்லைக்கல், மீண்டும் மீண்டும் உள்ளுர் மக்களுக்கு வருவாய் அளிக்கும் ஆதாரமாக 
மாறி உள்ளது. இவர்களின் இத்தகைய செயல் பாட்டால், மனைகளை வாங்கியவர்கள் எல்லை தெரியாமல் அவதிக்கு ஆளாகின்றன.
இது போன்ற பிரச்னையை தவிர்க்க மாற்று நடவடிக்கை என்ன என்பதே பல்ருக்கும் முக்கிய கேள்வியாக உள்ளது. எனவே, நிலத்தை அளந்து எல்லைக்கல் போடும் போது, சாதாரணமாக மண்ணில் குழி தோண்டி புதைக்கலாம். இவ்வாறு செய்தால், எல்லைக்கற்கள் எளிதாக எடுத்துச் செல்லப்படுவது தடுக்கப்படும்.
அப்படியே தோண்டி எடுத்து சென்றாலும், அதில் கான்கிரீட் கலவைகள் கொட்டப்பட்டதால் இந்த இடத்தின் அடையாளம் அப்படியே இருக்கும். இதனால், எல்லைக்கல் காணாமல் போனதால் மனையின் அடையாளம் தெரியாமல் தவிப்பவர்கள் ஆறுதல் அடையலாம். 
 ஒரு குறிப்பிட்ட நிலத்தை அளந்து எல்லைக்கல் போடுவதற்காக சர்வேயரும், கிராம நிர்வாக அலுவலரும், மனையின் உரிமையாளரும் செல்லும் போது அவர்கள் எல்லைக்கல் வாங்கி செல்வதில்லை. 
அந்தந்த கிராமத்தில் உள்ள பணியாளர்களே இதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு மனைக்கும் புதிதாக எல்லை கற்களை வாங்கி வைப்பது இல்லை. அதே பகுதியில் வேறு ஒரு மனையில் இருந்து பெயர்த்து எடுத்து பதுக்கி வைத்த கற்களை கொடுத்து பணம் பார்த்து விடுகின்றனர்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067664