காலி பாட்டிலில் கார்பெட்

24 ஜனவரி 2024   05:30 AM 02 நவம்பர் 2018   10:10 AM


வீணான பிளாஸ்டிக்கை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவில் வியக்கத்தக்க கட்டிடப் பொருளை உருவாக்கியிருக்கிறார்கள். தெற்கு ஆஸ்திரேலியாவில் ஈஸி குழுமம் என்கிற பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம் பிளாஸடிக் பாட்டில்கள், ஃபைபர் இழைகள் போன்றவற்றைக் கொண்டு கண்கவர் கார்பெட்களை தயாரித்தளிக்கிறது.

 

இந்நிறுவனம் தயாரிக்கும் மறுசுழற்சி கார்பெட்கள் புத்தம் புதியப் பொருளாகவே நமக்கு காட்சியளிக்கிறது. வழக்கமாக பருத்தி, சணல், நார் மற்றும் ஒரு சில தாவரங்களிலிருந்து கார்பெட்கள் தயாரிப்பார்கள். ஆனால், வழக்கத்திலிருந்து மாறபட்டு சாதாரண பெட் பாட்டில்களிலிருந்து இப்படி ஒரு உபயோகப் பொருளை உருவாக்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. கல்லூரி, பள்ளிக்கூடங்கள், ஓட்டல் போன்ற வணிகப் பயன்பாட்டிற்கு இந்த கார்பெட் மிகவும் ஏற்றவை.
இதனைத் தொடர்ந்து கட்டுமானத்திற்குத் தேவையான கூரைகள், பேனல்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றையும் தயாரிக்க ஈஸி குழுமம் திட்டமிட்டு வருகிறது.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067661