காலத்திற்கேற்ற கட்டுமானப் பொருட்கள்

24 ஜனவரி 2024   05:30 AM 02 நவம்பர் 2018   10:06 AM


தற்போது பயன்படுத்தப்படும் செங்கல், மணல் போன்ற பாரம்பரியப் பொருட்கள் அனைத்துமே 2020க்குப் பிறகு வழக்கொழிந்து விடுவதற்கான சாத்தியக்கூறு அதிகமென மத்திய கிழக்கு நாடுகள் கட்டிடவியலாளர்கள் அகாடெமியின் அறிக்கை கூறுகிறது. காலத்திற்கு ஏற்றார் போல கீழ்க்கண்ட கட்டிடப் பொருட்களே கோலோச்சும் என அந்த அறிக்கை கூறுகிறது.

உலோக மணல்

ஆற்று மணலை விட சிறந்த செயற்கை மணலை விட பலம் வாய்ந்த ஒரு மாற்று மணல் தற்போது கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. ஆம், அந்த மாற்று மணலின் பெயர் உலோக மணல் எனப்படும் ஃபெர்ரோ சேண்ட் (காப்பர் ஸ்லாக்) ஆகும். தூத்துக்குடியின் பிரம்மாண்டமான காப்பர் தயாரிப்பு தொழிற்சாலையான ஸ்டெர்லைட் தினசரி பல ஆயிரம் டன் காப்பர் பார்களை உற்பத்தி செய்கிறது. அப்போது துணைப்பொருளாக கிடைக்கும் உலோக மணல் எனப்படும் ஃபெர்ரோ சேண்டை கட்டு
மானப்பணிகளில் பயன்படுத்த முடியும். சுவர் கட்டுமானத்திற்கு (25%), கான்கிரீட் தயாரிப்பிற்கு (50%), சாலை போடுவதற்கு(20%), பேவர் கற்கள் தயாரிப்பிற்கு (25%) என ஆற்று மணலுடன் கலந்து ஃபெர்ரோ சேண்டை கணிசமாக பயன்படுத்தலாம். அங்கீகாரம் பெற்ற அரசு நிறுவனங்களால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் இதை நிரூபிக்கின்றன. மேலும், ஒரு கட்டிடத்திற்கு அதிக ஆற்று மணல் செலவாவது பேஸ் மட்டம் எனப்படுகிற தரைமட்டத்தை நிரப்புகிற பணிக்காகத்தான். இனி அதிக விலை கொடுத்து ஆற்று மணலை போட்டு நிரப்ப வேண்டாம். மிகவும் விலை குறைந்த ஃபெர்ரோ சேண்டை பேஸ் மட்டம் நிரப்பும் பணிக்கு 100 சதவீதம் பயன்படுத்தலாம்.

 

ஆர்.ஏ.எல்.சி கற்கள்

பிரிகேஸ்ட் தொழிற்நுட்பத்தை விட பன்மடங்கு சிறந்ததும், தற்போதுள்ள அனைத்து வகை கட்டுமான கற்களை விட வலிமை மிகுந்ததும், செலவு சிக்கனமான ஒரு அதிசய கட்டுமான பொருள்தான் ஆர்.ஏ.எல்.சி (RALC - Reinforced Autoclaved Aerated Lightweight Concrete Panels)மற்றும் எம்.ஜி.ஓ பலகைகள் ஆகும்.இரு பக்கங்களில் எம்.ஜி.ஓ போர்டுகளும் இடையில் ஏ.எல்.சி பேனலும் சேர்த்து நிறுவப்படுகிற இந்த ஆர்.ஏ.எல்.சி சுவர் கட்டுமானம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இது இப்போதுதான் மும்முரமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சிறிது சிறிதாக கட்டுமானத்துறையினரிடையே இது பற்றிய விழிப்புணர்வு உண்டாகி வருகிறது.
ஆர்.ஏ.எல்.சி ஒரு இலகு ரக கான்கிரீட் பலகை போன்றுதான் தயாரிக்கப்படுகிறது. பிரிகேஸ்ட் வகை தயாரிப்பான இது சிலிகா மணல் அல்லது எரிசாம்பல், சிமெண்ட், சுண்ணாம்பு, அலுமினியம் தூள் ஆகிய கலவையுடன் வேண்டிய நீர் சேர்க்கப்பட்டு குறிப்பிட்ட அச்சில் ஊற்றப்படுகிறது. அதற்குப் பிறகு பல்வேறு படிமுறைகளைத் தாண்டி பயன்படுத்த தயாராக ஆர்.ஏ.எல்.சி தயாரிப்புகள் பலகைகளாக உருவாகின்றன. மேலும், செல்லுலார் குறைந்த எடை கற்கள்(CLC BLOCKS), AAC கற்கள், தக்கை கற்கள், ஹாலோ கோர் ஸ்லாப்கள் போன்றவையும் சந்தையில் சம ஆதிக்கம் செலுத்த உள்ளன.

 

ரெடிமேட் நிலத்தடி தொட்டி - Comp-TNK

Tiaano நிறுவனத்தின் Comp-TNK - காம்டங் நிலத்தடி கழிவு நீர்தொட்டி- நீர்த் தேக்கதொட்டியாகும். வேண்டிய அளவிற்கு பள்ளத்தை தோண்டி உடனே ரெடிமேடாக கிடைக்கும் இந்த Comp-TNK- நிலத்தடி தொட்டியை பொருத்திவிட வேண்டியதுதான் உங்கள் வேலை. இது 1000 லிட்டர் முதல் 50000 லிட்டர் கொள்ளளவு வரை கிடைக்கிறது. 


வழக்கமாக நீங்கள் அமைக்கும் நிலவறை(Civil) தொட்டிக்கு பதில் Comp-TNK- தொட்டியை அமைப்பதினால், பெருமளவு செலவையும் நீங்கள் குறைக்க முடியும். RCC தொட்டியைவிட விலை குறைவு 75 ஆண்டுகள் உழைக்கும். நீர்ப்புகாத் தன்மை கொண்டது, உட்புறம் வழவழப்பாக உள்ளதால் பாசி வளர்தல் / கறை படிதல் தவிர்ப்பு - நீர் ஆவியாகாது (Non Conductor Of Heat) போன்ற தன்மைகளை உடையது.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067662