உணவு குப்பைகள் எனப்படும் பயோபேஸ்டைக் கொண்டு நெதர்லாந்தில் உள்ள டட்ச் ஸ்டூடியோ என்கிற ஆர்க்கிடெக்ட் நிறுவன உலகில் முதன்முறையாக ஒரு கட்டிடத்தின் வெளிப்புறச் சுவர்களை அமைத்திருக்கிறது. இதற்காக பயோடிகிரேடபிள் பொருளான நபாஸ்கோ (Nabasco) 5010-ஐக் கொண்டு சோயாபீன்ஸ், ஆலிவ் விதை போன்றவற்றிலிருந்து பிசின் பொருட்கள் எடுக்கப்பட்டு, மேலும் அதில் ஃபைபர் இழைகளைக் கலந்து தயாரித்து காம்போசிட் பேனல்கள் தயாரிக்கப்பட்டன. மேலும், இதில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவையும் கலந்து தயாரிக்கப்பட்டு, ஒரு கனமான, திடமான, நீண்டநாள் உழைக்கக்கூடிய பலகையாக உருவாக்கப்பட்டு கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
தன்னிச்சையாக குணப்படுத்திக் கொள்ளும் கான்கிரீட்
கான்கிரீட்டில் விரிசல் உண்டாவது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு செயலாக உள்ளது. இந்த விரிசல் அதிகமாகும் பொழுது அதன் வழியாக
நீரும் குளோரேடும் ஊடுருவி செல்கின்றன. இது கம்பிகளைத் தாக்கி துருபிடிக்க வைக்கின்றன. இதற்கான மாற்று தீர்வைச் சொல்லும் கட்டிடப்பொருள் தான் தன்னிச்சையாக குணப்படுத்திக் கொள்ளும் கான்கிரீட் (Self Healing Concrete). இதன் உட்கருத்து என்னவென்றால் பாக்டீரியாவை தண்ணீரால் செயலாக்கம் செய்யும்போது அது விரிசல் வழியாக ஊடுருவுகிறது. பாக்டீரியா செயல்திறன் பெறும்போது அது சுண்ணாம்பை உற்பத்தி செய்கிறது. இது விரிசல்களையும் சந்துகளையும் முற்றிலுமாக அடைக்கிறது.
ஒளிபுகும் கான்கிரீட்
கான்கிரீட் கடினமான கட்டுமானப் பொருள். அதன் வழியாக ஒளி ஊடுருவாது. ஆனால் ஒளி நுழைய வேண்டுமானால் ஒளி இழைகளைக் கலக்க வேண்டும். இவ்வாறு கலக்கப்படும் ஒளி இழைகள் வழியாக வெளிச்சம் அறைக்குள் வரும். வெப்பம் வராது. சன்னல் இருக்க வேண்டிய இடத்தில் இப்படிப்பட்ட கான்கிரீட் திரையை அமைத்தால் குறைந்த செலவில் வெளிச்சத் தேவைகளை நிறைவேற்ஷீக் கொள்ளலாம். கட்டுமானத்திற்கு உறுதி அளிக்கும் வேலையைக் கான்கிரீட் பார்த்துக் கொள்ளும். வெளிச்சத் தேவைகளை ஒளி இழைகள் கவனிக்கும். கட்டுமானத்தின் எடையைக் குறைப்பதிலும் இது சிறந்த உத்தியாகச் செயல்படும்.
இதுவரை இல்லாத புதியகட்டுமானப் பொருளாக இதைப் பயன்படுத்தலாம். வழக்கமான கான்கிரீட்டை எப்படி உருவாக்குவோமோ அதைப் போலவே ஒளிபுகும் கான்கிரீட்டையும் உருவாக்கலாம். தயாரிப்பு முறை ஏறக்குறைய ஒன்றுதான். கான்கிரீட் ஜல்லிக் கலவையுடன் ஒளி இழைகளையும் கலந்து இட வேண்டும். அவ்வளவுதான் வித்தியாசம். சிறு அடுக்காகக் கலவையைக் கொட்டி அதன்மேல் ஒளி இழைகளைப் பரப்ப வேண்டும். அதற்கு மேல் இன்னொரு சிறு அடுக்கு. அப்புறம் ஒளி இழைகள். இப்படித்தான் இது தயாராகிறது.
கான்கிரீட் கேன்வாஸ்
தமிழில் கான்கிரீட் கித்தான் என அழைக்கப்படும் கான்கிரீட் கேன்வாஸ் என்கிற பொருளானது வழக்கமானகித்தானின் வடிவத்துடன்தான் இருக்கும். நீட்டலாம். சுருக்கலாம் .சுருட்டலாம்.விரிக்கலாம். பரப்பலாம். வெட்டலாம். ஒட்டலாம். இந்த வேலைகளைக் கச்சிதமாக முடித்துக் கொண்ட பின் அந்தக் கித்தான் துண்டுகளின் மேல் தண்ணீரைத் தெளித்தால் போதும். இறுகிக் கெட்டியாகிவிடும்.
இந்தக் கான்கிரீட் கித்தானை எந்த வகைக் கால்வாயிலும் பயன்படுத்தலாம் என்பது இதன் தனிச் சிறப்பு. வேண்டியஅளவில் தேர்ந்தெடுக்கக் கான்கிரீட் கித்தான் தயார்நிலையில் கடைகளில் கிடைக்கிறது. சுருள் வடிவில் இதனை வாங்கிக் கொள்ளலாம். தேவைப்படும் அளவுகளுக்கேற்ப வெட்டிக் கொள்ளவும் முடியும்.
ஒரு மீட்டர் குறுக்களவு கொண்ட சுருள் வடிவில் இதனை விற்பனைக்கு விடுக்கிறார்கள். வழக்கமான அகலம் 1.1 மீட்டராக இருக்கும். 4.5 மீட்டர் நீளம் கொண்ட சுருளாகச் சுருட்டி வைத்திருப்பார்கள். இத்தகைய சுருள் ஒன்ஷீன் எடை 60 கிலோ வரை இருக்கும்.பெரிய அளவிலான பயன்பாட்டிற்குத் தேவைப்படுகிறது என்றால் 200 மீட்டர் நீளம் கொண்ட சுருளைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஸ்டீல் ஃபைபர் கான்கிரீட்
கான்கிரீட் தயாரிக்கும்போது வழக்கமான ஜல்லி கற்கள், சிமெண்ட், மணல், தண்ணீருடன் குறிப்பிட்ட அளவுடைய மெல்லிய ஸ்டீல் இழைகளை கலவையுடன் சேர்ப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. இங்கு வைக்கோல் களிபோன்ற சாணத்தை வலுவூட்டுகிறது. காய்ந்தபின் பிறகும் எருவரட்டி அவ்வளவு சீக்கிரம் உடைவதில்லை. நல்ல பலம் பொறிந்ததாக உள்ளது. இதே அடிப்படையில்தான் கான்கிரிட்டோடு இழைகளை சேர்ப்பது என்கிற கருத்து உருவாயிற்று? இங்கு இரும்பு இழை என்பது வைக்கோல் போல நாம் கருத வேண்டும்.
தெர்மாப்ளீஸ்
இது எளிதில் தீப்பற்றாத ஒரு தடுப்புப் பொருள். பெரிய அறைகளை இரண்டாகப் பிரிப்பதற்கும் அறைகளுக்கு உள்ளேயே சில பகுதிகளைத் தடுப்பதற்கும் இதனைப் பயன்ப்படுத்தலாம். இது வெப்பம், ஒளி, ஒலி ஊடுருவலைத் திறன் கொண்டது.கூரை,சுவர்,தரை என எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம். வீடுகளில் இதன் பயன்பாட்டைக் கொண்டு, தனியாக அமைக்கப்படும் அறைகளைப் படிக்கும் அறைகளாகவும், சாப்பிடும் இடமாகவும் பயன்படுத்தலாம். இசைப் பதிவுக் கூடங்களுக்கும் இத்தகைய தெர்மாப்ளீஸ் அதிகம் பயன்படும்.
டெக்கோஃபார்ம்
விதவிதமான கட்டுமானங்களுக்கு கட்டுநர்களுக்கு உதவும் வகையில் டெக்கோஃபார்ம் லைனர்கள் தற்போது கிடைக்கின்றன. பொதுவாகப் பலகைகளின் மீது கான்கிரீட்டைக் கொண்டு வேண்டிய வடிவத்துக்கு உருவாக்கி, காய்ந்தவுடன் பலகைகளை எடுத்துவிட்டு, அதன்பின் சிமென்ட் கலவையை மேல்பூசி சமம் செய்து, பலவிதமான அலங்கார வேலைப்பாடுகளைச் செய்வார்கள்.
ஆனால் இந்த வேலைகளை கான்கிரீட் அமைக்கும்போதே செய்வதற்கு துணைபோவதுதான் டெக்கோஃபார்ம் விதவிதமான கட்டுமானங்களுக்குக் கட்டுநர்களுக்கு உதவும் வகையில் டெக்கோஃபார்ம் லைனர்கள் தற்போது கிடைக்கின்றன. பொதுவாகப் பலகைகளின் மீது கான்கிரீட்டைக் கொண்டு வேண்டிய வடிவத்துக்கு உருவாக்கி, காய்ந்தவுடன் பலகைகளை எடுத்துவிட்டு, அதன்பின் சிமென்ட் கலவையை மேல்பூசி சமம் செய்து, பலவிதமான அலங்கார வேலைப்பாடுகளைச் செய்வார்கள்.
நமக்குத் தேவைப்படும் வடிவத்திலும், பரப்பிலும் தேவையான எண்ணிக்கையிலும் இந்த டெக்கோஃபார்ம் லைனர்கலைப் பெறலாம் என்பது இதன் சிறப்பு. சிறிய கட்டுமானங்களைவிட பெரிய அளவில் கட்டப்படும் மாடி ரயில், மேம்பாலங்கள், வணிக வளாகங்களில் இதன் தேவை பல மடங்கு உள்ளது.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067638
|