ஆழ்துளை க் கிணறு அவஸ்தையா?

24 ஜனவரி 2024   05:30 AM 31 அக்டோபர் 2018   11:33 AM


இருபது அடி தோண்டினாலே இeநீர் போல இனிக்கும் தண்ணீர் கிடைத்த கிணறுகள் இப்போது அரிது. தட்ப வெப்பம் மாஷீப் போன இன்றைய கால கட்டத்தில் எந்தப்பகுதியானாலும், ஆழ்துளை கிணறு மூலமாகவே நீரை சுரண்டி எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். 
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளும் பலரும், தாங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் தண்ணீர் வசதி எப்படி உள்ளது என்பதில் தனிகவனம் செலுத்துவர். நாம் வாங்குவது காலி நிலமாக இரும்கும் பட்சத்தில், அருகில் உள்ள வீடுகளில் யாராவது கிணறு தோண்டியுள்ளனரா, அதில் எவ்வளவு ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது ஆகிய விஷ யங்களை ஆய்வு செய்வோம்.


ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளின் அருகில் உள்ள இடங்களில் நிலத்தடி நீர்வளம் அதிகமாக இருக்கும் என்பதால், தண்ணீர் பிரச்சனை வராது என்று நினைத்து, பலரும், வீடு, நிலம் வாங்குகின்றனர். இவ்வாறு பார்த்து வீடு வாங்கி, குறைந்த ஆழத்துக்கு கிணறு தோண்டியவர்கள் பலரும், இன்று தண்ணீர் பிரச்னையை சந்தித்து வருகின்றனர். வேறு வழியின்த் தங்கள் நிலத்திலும் போர்வெல் ஆழ்துளை கிணறு போடும் பணியை மேற்கொள்கின்றனர். 


அவர்களில் பெரும்பாலோர் ஆழ்துளக் கிணறுகள் அமைக்கும் வேலையை ஒரு தனியார் நபரிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு சில மாதங்களில் நீர் வரவில்லை, உவர் நீராகிவிட்டது என்றெல்லாம் புலம்பத் துவங்கி விடுவார்கள்.ஒரு கிணற்றில், போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறு அமைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. இவற்றுள், நாம் ஒன்றில் ஏமாந்து போனாலும், முடி வாக நமக்குக் கிடைப்பது பண நட்ட மும், நேர விரயமும்தானே தவிர, நம்முடைய தேவை மட்டும் தீராது.  
எனவே, ஆழ்துளைக் கிணறை அமைக்கும் போது அவசியம் கவனிக்க வேண்டிய அம்சங்கள் சில. 


கிணறு அமைந்துள்ள இடம் நெருக்கடி இன்ஷீ இருக்கும் பட்சத்தில், கிணற்றுக்குள்ளேயே போர்வெல் போடலாம். ஏற்கனவே இருக்கும் கிணற்றுக்குள் 30 அடி ஆழத்தில் இருந்து தான் போர்வெல் போடப்படும். இதனால், 100 அடி ஆழத்துக்கு போர்வெல் போடுவதற்கு ஆகும் செலவில் 30 அடிக்கான செலவு மிச்சம்.
ஆனால், இவ்வாறு செய்யும்போது, வழக்கமாக கிணற்ஷீன் அடிப்பகுதியில் படியும் மண் துகள்கள், போர்வெல்லுக்காக போடப்பட்ட (ஹோஸ் குழாய்கள் உள்ளடக்கிய) குழாயில் படிந்து, காலப்போக்கில் அடைப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க. போர்வெல் போடப்பட்ட இடத்தில் இருந்து, கிணற்ஷீன் மேல் மட்டம் வரை குழாய் அமைத்து. அதை தூசி அமையாத வகையில், மூடி வைப்பது நல்லது.


தற்போது இருக்கும் கிணற்ஷீல் போர்வெல் போடுவதால் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதை தெரிந்துக் கொண்ட பின், அதற்கான பணிகளை தொடங்குவது பண விரயத்தை தவிர்க்கும். பொதுவாக, போர்வெல் போடுவதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நிறுவனங்களை பயன் படுத்திக் கொள்வது நல்லது, அவர்களுக்கு அந்த பகுதியின் நில அமைப்பு, நீர்வளம் உள்ளிட்ட விவரங்கள் தெரிந்திருக்கும்.


சில இடங்களில், 200 அடி ஆழத்திலும் தண்ணீர் கிடைக்காது. அத்தகைய இடங்களில், நிலத்தடி நீர்வளம் குறித்து அறியாமல், போர்வெல் போடுவதை தவிர்க்க வேண்டும். 
மேலும் சில இடங்களில், குறிப்பாக கடலோரப் பகுதிகள். 


மாசடைந்த நீர் நிலைகள் உள்ள இடங்கள், தோல் தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளிட்டவை அமைந் துள்ள இடங்களில், புதிதாக போர்வெல் போடுவது, நல்ல தண்ணீர் கிடைக்க வழி செய்யாது. இத்தகைய இடங்களில் நீங்கள் நிலம் வாங்கியிருந்தால், போர்வெல் போடுவது உள்ளிட்ட முயற்சிகளை கைவிட்டு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அல்லது குடிநீர் வினியோக அமைப்பின் மூலம் வழங்கப்படும் நீரை பெறலாம்.
போர்வெல் போடும் பணியை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் இதற்கான செலவும் அதிகரித்துள்ளது.

 
ஒன்று முதல் 100 அடி ஆழம் வரை போர்வெல் போட, ஒரு அடிக்கு 52 ரூபாயும், 101 அடியில் இருந்து 200 அடி ஆழம் வரை போர்வெல் போட, ஒரு அடிக்கு 62 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதில் போடப்படும் பி.வி.சி., பைப்புக்கு, ஒரு அடிக்கு ரூ.140  செலவாகும். மேலும், பணியாளர்களுக்கான பேட்டா, ரூ.300 என, மொத்தம் ரூ.11,000  வரை செலவாகும். இதற்குள் செலுத்தப்படும், ஹோஸ் பைப், மோட்டார் உள்ளிட்ட பிளம்பிங் பணிகளுக்கு, 5,000 முதல் 7,000 ரூபாய் வரை செலவாகும். இவை இரண்டையும் சேர்த்தால், 100 அடி ஆழத்துக்கு போர்வெல் போட, 17,000 முதல் 20,000 வரை செலவாகும். 


தகிக்கும் கோடையில் நீங்கள் போடும் ஆழ்துளைக் கிணற்ஷீல் தண்ணீர் வர வாழ்த்துக்கள்.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067637