உங்கள் இல்லத்தில் இரத்தினக் கம்பள வரவேற்பு

24 ஜனவரி 2024   05:30 AM 31 அக்டோபர் 2018   11:12 AM


உங்கள் வீடு விஸ்தாரமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பெரிய ஹால், நீலமான வராந்தா, அகலமான படிக்கட்டுகள் என்று அமைந்திருந்தால் நிச்சயம்  அந்த இடங்களில் இரத்தினக் கம்பல விரிப்பால் அழகுபடுத்த வேண்டும் என்று உங்களுக்கு இதுவரை தோன்றாதிருந்தால் அதிசயம்தான். இதற்காக பெரிதாக செலவு ஒன்றும் ஆகிவிடாது. பிறகென்ன? வாருங்கள் உங்கள் வீட்டை இரத்தினக் கம்பல விரிப்பால் காண்போர் கண்களை விரிக்க வைக்கலாம்.
இதற்கு முன் உங்கள் வீட்டின் தரையில் என்ன வகையான கம்பளத்தை விரித்திருக்கிறீர்கள்? ஏதோ கடைக்குப் போனோம்.. அங்கே இருந்ததில் நல்லதாகத் தோன்ஷீயதை எடுத்துக் கொண்டு வந்துவிட்டோம் என்கிறீர்களா?


இங்குதான் தவறு செய்கிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல. இன்னும் எத்தனையோ பேர். நல்ல கம்பளம் ஒன்றை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதைத் தெரிந்து கொண்டால் உங்களுக்குப் போகும் இடங்கள் எல்லாவற்ஷீலும் இரத்தினக் கம்பள வரவேற்பே கிடைக்கும்.


எங்கே போட வேண்டும்?
நீங்கள் கம்பளத்தை எங்கே, எப்படி, எத்தனை எண்ணிக்கையில் போடப் போகிறீர்கள்? அதை முதலில் முடிவு செய்ய வேண்டும். தவிரவும் எல்லா அறைகளிலும் ஒரே மாதிரியான விரிப்புகளை விரிக்கப் போகிறீர்களா? ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு விதமாகவா? தீர்மானியுங்கள்.
உங்கள் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு விதமாகப் பயன்படுத்துவீர்கள். சில இடங்களில் அடிக்கடி நடக்க வேண்டி இருக்கும். வேறு சில இடங்களில் எப்போதாவதுதான் உங்கள் காலே பட நேரும்.


இதைத் தவிர படிக்கும் அறை. பூஜை அறை. நூலகம். படுக்கை அறை. தேவைகள் மாறுபடும்.அளவுகளும் அப்படியே. விருந்தினர் அறை? எப்போதாவதுதான் வருகிறார்களா? மலிவான விரிப்பு போதுமானது.
வருவதே எப்போதாவதுதான்.. அங்கே போய் மலிவான விரிப்பைப் போட்டால்.. அவர்கள் நம்மை மட்டமாக எடைபோட்டுவிடுவார்கள் என்று எண்ணுகிறீர்களா? நல்ல விலை உயர்ந்த விரிப்பைத் தேர்ந்தெடுங்கள். ஞாபகமாக விருந்தாளிகள் புறப்பட்டுப் போனபின் சுத்தம் செய்து சுருட்டி வைத்துவிடுங்கள்.
படிக்கட்டுகள், கூடம் , நுழை வாயில் போன்ற இடங்களில் அடிக்கடி யாராவது நடந்து கொண்டே இருப்பார்கள். இம்மாதிரி இடங்களுக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் விரிப்புகள் நீண்ட காலம் உழைக்கக் கூடியவையாக இருக்க வேண்டும்.


இதில் செலவுச் சிக்கனம் பார்த்தீர்கள் என்றால் வெகு விரைவில் தேய்ந்து போய் அவலட்சணமான தோற்றத்தைத் தரும். அடிக்கடி செலவு செய்து மாற்ற வைக்கும். 
எங்கே வாங்குவது?


தெருவில், தலைமேல் சுமந்து கொண்டு வருகிறவர்களிடம் வாங்கும்முன் ஒருமுறைக்குப் பல முறை யோசியுங்கள். நீண்ட அனுபவம் பெற்ற விற்பனையாளர் களிடமிருந்து வாங்குவதுதான் நல்லது.
அதிகப்படியாகவும் ஆடம்பரமாகவும் விளம்பரம் செய்யும் நிறுவனங்களிலிருந்தும் வாங்கும் முன் யோசியுங்கள். அவர்கள் விளம்பரங்களுக்காகச் செலவிடும் தொகையை உங்கள் தலையில்தான் கட்டுவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
சில விளம்பரங்களைப் பார்த்துவிட்டு விற்பனைப் பிரதிநிதியை வீட்டுக்கு அழைக்கும் வேலை வேண்டவே வேண்டாம். ஏனெனில் அவர்கள் எப்படியாவது உங்களை வாங்க வைத்துவிட வேண்டும் என்று தங்களது அகடவிகடத் திறமைகளை உங்களிடம் அவிழ்த்துவிடுவார்கள்.உங்களால் மறுப்புச் சொல்ல முடியாமல் போய்விடும். அக்கம் பக்கத்தில் விசாரியுங்கள். எந்தக் கடையில் வாங்கினால் நன்றாக இருக்கும் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.  கம்பளத்தை வாங்குவதற்கு முன், மாதிரிகள் சிலவற்றைச் சேகரிக்க முயலுங்கள். விலைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். சுமை கூலி, போக்குவரத்து, பொருத்தும் செலவு முதலியவற்றையும் கணக்குப் போட்டுப் பாருங்கள்


எது நல்லது?

நைலான், செயற்கை இழைகளால் உருவாக்கப்பட்ட விரிப்புகள் விலை குறைவானவை. உங்களுக்கு இயற்கையான நார்ப் பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டவைதான் வேண்டும் என்றால் விலை அதிகமாக இருக்கும். பரவாயில்லையா?
செயற்கைக் கம்பளங்களும் கூட இயற்கையானவற்றைப் போலவே கறைகளை எதிர்த்து நிற்க வல்லவை. சிலருக்குச் செயற்கைக் கம்பளங்கள் ஒத்துக் கொள்வதில்லை. ஒவ்வாமையை ஏற்படுத்தும். தோற்றத்திலும் இயற்கைத் தயாரிப்புகளே கண்களுக்கு இதமாக இருக்கும். அக்ரிலிக்கால் தயாரிக்கப்பட்ட விரிப்புகள் ஏறக்குறைய இயற்கைத் தயாரிப்புகளைப் போலவே தோற்றம் தரத் தக்கவை. ஆனால் விலையை நீங்கள் விரும்புகிறபடி பேரம் பேச முடியாது.

மத்திம வீடாக இருந்தாலும் கூட அரண்மனையாக மாற்றவல்ல இரத்தினக் கம்பe விரிப்பை இன்றே வீட்டிற்குக் கொண்டு வாருங்கள்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067642