கூடங்குளம் அனுமின் நிலையத்திலிருந்து மின் உற்பத்தி பெறப்படுகிறதா? அதிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் தருவிக்கப்படுகிறதா? என்கிற விஷயங்கள் இன்னமும் மர்மமாகவே இருக்க, மறுபுறம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நெய்வேலியில் என்.எல்.சி பிரச்சனை வளர்ந்து வருகின்றன. அதன் விளைவாக வழக்கமான மின் உற்பத்தி பெருமளவு குறைந்திருக்கிறது.
புரட்டாசி மாசம் முதல்காற்றின் வேகம் குறைய வாய்ப்பிருப்பதால் காற்றாலை மின்சாரமும் கணிசமாக உற்பத்தி குறைந்து விடும். இந்த சூழ்நிலையில் தமிழக சட்டப் பேரவையில் பொதுமக்களே தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சூரிய சக்தி மின்சாரத்தைக் கட்டயமாக்க சட்டத்தை திருத்த தமிழக அரசு அஷீவித்திருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் மின் சக்தியை
ஊக்குவிக்கும் பொருட்டு அனைத்துத் தொகுப்பு வளர்ச்சிகள் மற்றும் பல மாடிக் கட்டிடங்களில் சூரிய மின் சக்தியைப் பெறும் அமைப்பை ஏற்படுத்த வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் உரிய திருத்தங்களை ஏற்படுத்த அரசு நடவடிக்கையை மேற்கொள்ளும் என முதல்வர் அறிவித்திருக்கிறார்.
இயற்கையான வழிகளில் மின்சாரத்தைப் பெறுவது என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.ஆனால், இத்தனை ஆண்டு காலம் இல்லாமல் திடீரென பன்னடுக்கு மாடி கட்டிடங்களுக்கு சோலார் மின்சார கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்கிற தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு ஏற்படுத்தும் விளைவுகளை சற்று நுட்பமாக ஆராய வேண்டும். 4 மாடிகளுக்கும் அதிகமான அடுக்குமாடி திட்டங்களுக்கு மட்டுமே இது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதுதான் அந்த அறிவிப்பின் முக்கிய அம்சம்.
4 மாடிகளுக்கு மேலாக கட்டப்படும் கட்டிடங்களுக் குத்தான் சூரிய மின்சாரம் பொருந்தும் என எதைவைத்து முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை கட்டிடம் உயரமாக இருந்தால் தான் சூரிய ஒளி கிடைக்குமென நினைத்துக் கொண்டார்களோ?
நகரங்களைப் பொறுத்தவரை புறநகர்களில் தான் அதிக அளவிலான பன்னடுக்கு மாடிகள் கட்டப்படுகின்றன. நகரத்திற்குள் 3 அல்லது 4 மாடிகள் கொண்ட புராஜெக்டுகள் லக்சரி வீடுகளாகத்தான் கருதப்படுகின்றன. தையூர், பனையூர், வண்டலூர், ஈசிஆர், சேலையூர் போன்ற புறநகர்களில் கட்டப்படும் ஃப்ளாட்டுகள் நடுத்தர மக்களுக்கானவையாகும். இதற்கு உதாரணம், சென்னை மஹேந்திரா சிட்டியில் உருவாகி வரும் டி.ஆர்.ஏ குழுமத்தின் ப்ரிஸ்டின் பெவிலியன் புராஜெக்ட் ஆகும். 12 அடுக்குகளை உடைய இந்த புராஜெக்டில் 20 லட்சத்தில் இங்கு ஒரு நடுத்தர குடும்பத்திற்கான வீடு கிடைக்கிறது.
ஒரு கிலோ வாட் பேட்டரி வசதிகளுடன் கூடிய சூரிய மின் நிலையம் அமைக்க ரூ.1.5 லட்சம் செலவாகும். அப்படியயனில், அரசின் முடிவு சட்டமாக்கப்பட்டால் ரூ.20 லட்ச ரூபாய் வீடு ரூ.21.5 லட்ச ரூபாய் என உயரும். இனி உருவாக்கப்பட உள்ள அடுக்குமாடித் திட்டங்களுக்கு சூரிய ஒளி மின்சார கட்டமைப்புகள் பொருத்தப்பட்டால்தான். திட்ட ஒப்புதல் மற்றும் பணி நிறைவுச் சான்ஷீதழ் வழங்கப்படும் என்றால், கட்டுநர்களைப் பொறுத்தவரை அது ஒரு கூடுதல் பணிதான். அவர்களிடம் வீட்டை வாங்கும் நடுத்தர மக்களுக்கு தான் ரூ.1.5 லட்சம் என்பது அதிக சுமைதான் எனக் கருத வேண்டி இருக்கிறது.
இதற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும் என்றால் கூட, இறுதி பயனாளருக்கு அது சென்றடைவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நாம் அறியாததல்ல.
சுருக்கமாகச் சொன்னால், எத்தனை கோடி செலவு செய்து தனி வீடு அல்லது அடுக்குமாடி கட்டினாலும், அந்த வீட்டில் வசிக்கக் கூடிய பெரும் பணக்காரர்கள் சோலார் கட்டமைப்பை பொருத்த வேண்டியதில்லை. அதுவே, தனது இரண்டு பெட்ரூம் ஃப்ளாட் கனவை தூர எறிந்துவிட்டு, ஒரே ஒரு பெட்ரூம் ஃப்ளாட்டுடன் தனது கனவை ஒடுங்கிக்கொள்ளும் 20 லட்ச ரூபாய் வீட்டை வாங்கும் சாமானிய நபர் இன்னுமொரு 1 லட்ச ரூபாயை சூரிய ஒளி மின்சாரத்
திற்காக சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். அபத்தமாக இல்லை?
அப்படியயனில், அரசு என்ன செய்திருக்க வேண்டும்?
ரூ.50 லட்சம் மதிப்பிற்கு மேல் உள்ள அனைத்து தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக கட்டிடங்கள், ஐ.டி பூங்காக்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு மட்டுமே முதற்கட்டமாக கட்டாய சூரிய ஒளி மின்சார கட்டமைப்பை பொருத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தால் இது பெரும்பாலான மக்களால் வரவேற்கப்பட்டிருக்கும். நியாயமும் கூட.பன்னடுக்கு மாடிகள், தொகுப்பு வீடுகள் போன்றவையயல்லாம் பணக்காரர்களுக்காக அல்ல. பட்ஜெட் பத்மநாபன்களுக்காகதான் உருவாக்கப் படுகிறது என்கிற அடிப்படைக் கூடத் தெரியாததன் விளைவுதான் 4 அடுக்குகளுக்கு மேலான கட்டிடங்களுக்கு கட்டாய சூரிய ஒளி கட்டமைப்பு வேண்டும் என்கிற அறிவிப்பு.
தமிழக அரசு சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்தை பெறுதலை கட்டாயமாக்குவது என்கிற அறிவிப்பின் அழுத்தம் ஒரு நடுத்தர நபரின் வீடு வாங்கும் கனவைக் இன்னமும் கடினமாக்குவதாக இருந்து விடக் கூடாது.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு...8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067635
|