வேதியல் மாற்றங்களால் கட்டிடங்களில் ஏற்படும் விரிசல்கள் சுவற்றின் விரிசல்கள்- எழாம் பகுதி!

24 ஜனவரி 2024   05:30 AM 30 அக்டோபர் 2018   02:20 PM


கட்டுமானப் பொருட்களில் நிகழும் வேதியல் வினைகள்(ஊhநஅiஉயட சநயஉவழைளெ) காரணமாக அவற்றின் கன அளவுகளில் குறிப்பிடத்தக்க அளவில் விரிதல் அல்லது சுருங்குதல் ஏற்பட்டு, அதன் காரணமாகத் தோன்றும் உள்விசைகள் ஏற்படுத்தும் ஒரு வித வெளிநோக்கிய தள்ளுதல் அல்லது உள்நோக்கிய இழுத்தல் காரணமாய் பொருட்களில் விரிசல்கள் தோன்றுகின்றன. வேதியல் வினைகளுக்குள்ளாகும் பொருட்கள் அவற்றின் பளு தாங்கும் வலிமையையும் இழக்கின்றன. பொதுவாகக் கட்டுமானப் பொருட்களில் கீழ்க்கண்ட வகை வேதியல் விளைவுகள் நிகழ்கின்றன.


1. சிமென்டினால் ஆன தயாரிப்புப் பொருட்களில் கந்தக உப்பின் (சல்பேட்- ளுரடிhயவந யுவவயஉம) தாக்கம்.
2. சிமென்ட் அடிப்படைப் பொருட்களில் கார்பன் ஏற்றம் அல்லது கரிமமாதல் (கார்பொனேசன் -ஊயசடிழயெவழைn )
3. காங்கிரீட்டிலுள்ள வலுவூட்டிக் கம்பிகளில் துருப்பிடித்தல் (ஊழசசழளழைn) 
4. காரம்-கூட்டுப்பொருள் வேதியல் வினை.
1.கந்தக உப்பின் தாக்கம்: கட்டுமானங்களுக்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடிய கந்தக உப்பானது (ளுரடிhயவந) நீரில் கரையும் தன்மை கொண்டது. நிலத்திலுள்ள மண்ணிலோ, நிலத்தடி நீரிலோ, களிமண்ணால் செய்யப்பட்டுள்ள செங்கல் மற்றும் ஓடுகளிலோ இந்த உப்பு கலந்திருக்கலாம். இது சிமென்ட் மற்றும் நீர்த்த சுண்ணாம்பில் காணப்படும் கால்சியம் மற்றும் அலுமினிய மூலக்கூறுகளுடன் சேர்ந்து ஈரமடையும் பட்சத்தில், வெகுவாக விரிவடைந்து, பொருட்களின் கன அளவை அதிகரிக்கச் செய்வதால்,
உள்விசைகள் ஏற்பட்டு, சுவர்கள், காங்கிரீட் மற்றும் பூச்சு வேலைகளில் விரிசல்களைத் தோற்றுவிக்கின்றன.


கட்டிடங்களின் அடித்தள காங்கிரீட், செங்கல் சுவர்கள் மற்றும் பூச்சு வேலைகள் ஆகியவை இந்த வேதியல் வினையால் மிகவும் அதிகமான அளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. இப்பாதிப்பின் அளவு, மண் மற்றும் நீரில் கலந்துள்ள கந்தக உப்பின் அளவு மற்றும் சிமென்ட் தயாரிப்பில் பயன் படுத்தப் பட்டுள்ள கால்சியம் மற்றும் அலுமினிய மூலப்பொருட்களின் விகிதாச்சாரம் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.


நீர் ஊடுறுவும் தன்மை அதிகம் கொண்ட காங்கிரீட், அதிக நாட்களுக்கு தொடர்ந்து ஈரமாயிருக்கும் பட்சத்தில் இப்பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. சில இடங்களில் இயற்கையாய் அமைந்துள்ள மண்ணில், சோடியம் சல்பேட், பொட்டாசியம் சல்பேட், மங்கனீசியம் சல்பேட், கால்சியம் சல்பேட் போன்ற கந்தக உப்புகள் கலந்துள்ளன.இவை நிலத்தடி நீரில் கலந்து, காங்கிரீட் உறுப்புக்கள் மற்றும் செங்கல் சுவர்களுக்குள் புகுந்து, அவற்றிலுள்ள கால்சியம் மற்றும் அலுமினிய மூலக்கூறுகளுடன் வேதியல் வினைகளை ஏற்படுத்தி பொருட்களை விரிவடையச் செய்கின்றன. இவ் விளைவு மிகவும் மெதுவாக நடைபெற்று இரண்டு அல்லது மூன்று ஆன்டுகளுக்குப் பின்பே விரிசல்களை ஏற்படுத்துகின்றது. சுற்றிலும் அடைக்கப்பட்ட சில காங்கிரீட் தரைகள் இவ்வாறு விரிவடைவதால் வளைதலுக்குள்ளாகி மேல் நோக்கி தூக்கப் படுகின்றன. (அடுத்த பக்கத்தில் படம் பார்க்க).


சில இடங்களில் சிமென்ட் கலவையில் பதிக்கப்படும் களிமண் தள ஓடுகள் இவ்வினையால் விரிவடைந்து மேல்நோக்கி எழுவதைப் பார்க்கலாம். நிலத்தடி நீரோடு நேரடி தொடர்பில் இருக்கும் உறுப்புகள் மற்றும் தொடர்ந்து ஈரமாயிருக்கும் உறுப்புக்கள் அதிக அளவில் இவ்வகை பாதிப்புக்குள்ளாகின்றன.பொதுவாக, குறைந்த அளவில் சிமென்ட் பயன்படுத்தும் உறுப்புக்களில் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை.


மண் அல்லது நிலத்தடி நீரில் கந்தக உப்பு காணப்படும் இடங்களில், கந்தக எதிர்ப்பு சிமென்ட் (ளுரடிhயவந சுநளளைவiபெ ஊநஅநவெ) இ அல்லது கால்சியம் மற்றும் அலுமினியம் மூலக்கூறுகளை குறைந்த விகிதத்தில் (3.5மூ) கொண்டுள்ள சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்டைப் பயன்படுத்தலாம். கந்தக உப்பு, அடிமண்ணில் 0.2மூ க்கு அதிகமாகவோ,நிலத்தடி நீரில் 300 ppஅ –க்கு அதிகமாகவோ இருக்கும் பட்சத்தில், அடித்தள வேலைகளுக்கு 1:1.5:3 விகித்த்திற்கு அதிகமாகாத காங்கிரீட், கட்டு வேலைக்கு 1:3 க்கு அதிகமாகாத விகிதத்தில் சிமென்ட் கலவை பயன்படுத்தப்பட வேண்டும். அது போல 1மூ க்கு அதிகமான அளவில் கந்தக உப்பு உள்ள செங்கற்களை ஈரமடையக் கூடிய சுவர்களில் பயன் படுத்தக் கூடாது. இத்தகைய சந்தர்ப்பங்களில் நீளமான சுவர்களில் அதிக எண்ணிக்கையில் விரிவாக்க இணைப்புக்கள் 
(நுஒpயளெழைn துழiவெ) அமைக்கப்பட வேண்டும்.


2.கார்பொனேசன்: காங்கிரீட்கடினமாகும் நிலையில் சிமென்டிலுள்ள சுண்ணாம்பு நீர்த்தல் நிகழ்வின் போது வெளியாகும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு 
கம்பிகளில் துருப்பிடிப்பதைத் தடுக்கும் காரப் படிகமாக காங்கிரீட்டில் நிலைத்திருக்கும். இது காலப்போக்கில் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு என்ற வாய்வுடன் சேர்ந்து கால்சியம் கார்பொனேட்டை உருவாக்குகிறது. இது காங்கிரீட் சுருங்கவும் அதன் காரணமாய் விரிசல்கள் ஏற்படவும் காரணமாகிறது. அத்துடன் கார்பொனேசன் அல்லது கரிமமாதல் என்ற இந்நிகழ்வால் காங்கிரீட்டின் கம்பிகளைப் பாதுகாக்கும் திறன் குறைகிறது. கார்பொனேசன் என்ற இந்த வேதியல் வினை, நன்கு நெருக்கப்பட்ட, அடர்த்தியான காங்கிரீட்டில் அதன் வெளிப்பரப்பில் மட்டுமே நிகழ்கிறது. அதன் உள்ளே 20 மி மீ ஆழத்திற்கு இந்நிகழ்வு பரவ சுமார் 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் சரியாக நெருக்கப் படாத, அதிக வெற்றிடங்களுடன் கூடிய காங்கிரீட்டில் அதே 50 ஆண்டுகளில் சுமார் 100 மி மீ ஆழத்திற்கு கார்பொனேசன் பரவி விடக்கூடும். இந்நிகழ்வால் காங்கிரீட்டின் வெளிப்பரப்பிற்கு அருகில் உள்ள கம்பிகள் முதலில் துருப்பிடிக்க ஆரம்பிக்கின்றன. காற்றில் கார்பன்டை ஆக்ஸைடு அதிகம் உள்ள தொழிற்சாலைப்  பகுதிகளில் இந்நிகழ்வினால் அதிக அளவில் விரிசல்கள் தோன்றலாம். அது போல வெற்றிடமுள்ள மற்றும் குறைந்த எடை காங்கிரீட் கற்களால் கட்டப்படும் சுவர்களிலும் இவ்வினையால் விரிசல்கள் தோன்ற வாய்ப்புக்கள் அதிகம். நல்ல நெருக்கப்பட்ட  அடர்த்தியான காங்கிரீட்டைப் பயன் படுத்துவதன் மூலம் மட்டுமே கார்பொனேசன் 
வினையால் விரிசல்கள் ஏற்படுவதைத் தவிற்க முடியும். கல்நார் (யுளடிநளவழள ளூநநவள) கூரைத் தகடுகளில் இவ்வினையால் விரிசல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.  இதைத்தவிற்க தகட்டின் இரு புறங்களிலும் பாதுகாப்புப் பூச்சுகள் பூசப்பட வேண்டும். 


3.வலுவூட்டிக்கம்பிகள் துருப்பிடித்தல்: பொதுவாக நன்கு வார்க்கப்பட்ட காங்கிரீட் அதனுள் அமைந்திருக்கும் இரும்புக் கம்பிகளுக்கு நல்ல பாதுகாப்பு அரணாகச்
செயல்படுகிறது. துருப்பிடித்தல் என்பது ஒரு மின்வேதியல் (நுடநஉவசழ- ஊhநஅiஉயட) வினையாகும்.
மின் வேதியல் வினையால், காற்று மற்றும் நீருடன் தொடர்பு கொள்ளும் இரும்புக் கம்பிகள் சிதைவுக்குள்ளாகி இரும்பு ஆக்ஸைடு (ஐசழn ழுஒனைந) என்ற துரு உருவாகிறது.
இத்துருவின் காரணமாய் கம்பிகள் உப்புதல் அடைந்து அவற்றின் கன அளவு அதிகரிக்கிறது. அதன் காரணமாய் அவற்றைச் சுற்றியுள்ள காங்கிரீட் வெளி நோக்கித் தள்ளப்படுகிறது. ஆரம்ப நிலையில் உத்திரம் மற்றும் பாளங்களின் அடிப்பகுதியில் கம்பிகளுக்கு இணையாக சிறு விரிசல்கள் தோன்றும். இவ்விரிசல்களை ஒட்டிய பகுதிகள் ஈரமாகும்போது பழுப்பு நிறமாக மாறினால் கம்பிகள் துருப்பிடிக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். இவ்விரிசல்கள் வழியாக காற்றும், நீரும் மாறி மாறி இரும்புக் கம்பிகளின் மீது படும் போது இத்துருவின் அளவு அதிகரித்து, காங்கிரீட் கவசம் உறிந்து கீழே விழ ஆரம்பிக்கும்.


வலுவூட்டிக்கம்பிகள் துருப்பிடிக்க சில காரணங்கள் இதோ:
(i) உத்திரம், பாளம் போன்ற உறுப்புக்களில் அதிக அளவில் ஏற்படும் வளைவு அல்லது நீட்டிப்பு காரணமாய் 0.3 மி மீ க்கு (பாதுகாக்கப்படாத திறந்த வெளி உறுப்புக்களில் 0.2 மி மீ ) அதிகமான அகலத்தில் விரிசல்கள் தோன்றுதல் – இதைத்தவிற்க உறுப்புக்களுக்கு போதிய அளவு ஆழம் ஃ தடிமன் கொடுக்கப்பட்டு வளையும் அளவு (னுநகடநஉவழைn) குறைக்கப்பட வேண்டும்.


(ii) கான்கிரீட்டின் நீர் ஊடுருவும் தன்மை- நீர் ஊடுருவாத கான்கிரீட் தயாரிக்க, ஒரு க.மீ கான்கிரீட்டிற்கு 350 கி.கிராமிற்குக் குறையாமல் சிமென்டும், 0.55 க்கு மிகாமல் நீர்- சிமென்ட் விகிதமும் பயன் படுத்தப் பட வேண்டும். இத்துடன் கான்கிரீட் இடுகையில் அதிர்வான் (ஏiடிசயவழச)பயன்படுத்தப்பட்டு நன்கு நெருக்கப்படவும், குறைந்தது 14 நாட்களுக்கு நனைக்கப் படவும் வேண்டும்.


(iii) கான்கிரீட் உறுப்புக்களில் நேரடி மின்சாரத்தொடர்பு ஃ கசிவு ஏற்படுதல் துருப்பிடித்தலை துரிதப்படுத்துகிறது.
(iஎ) கான்கிரீட் அமைவைத் (ளநவவiபெ) துரிதப்படுத்துவதற்காகச் சேர்க்கப்படும் கால்சியம் குளோரைடு என்னும் முடுக்கி (யஉஉநடநசயவழச) துருப் பிடித்தலை ஊக்குவிக்கிறது. 


(எ) தண்ணீரிலுள்ள கார உப்பு (யடமயடi) மற்றும் கந்தக உப்பு (ளரடிhயவந)இ கூட்டுப்பொருள்களுடன் ஏற்படுத்தும் வேதியல் வினை கான்கிரீட்டில் விரிசல்களைத்தோற்றுவித்து, கம்பிகள் துருப்பிடிக்க மறைமுக காரணிகளாகின்றன.


4 (எi) கான்கிரீட் உறுப்புக்கள் மீது தொடர்ந்து உப்பு ஃ கடல் தண்ணீர் படுவது. (எii) காற்றிலுள்ள அதிகப் படியான ஈரப்பதம். (எiii) கான்கிரீட்டில் அமையும் கம்பிகளுக்குப் போதிய 
அளவில் கவசம் (ஊழஎநச) அளிக்கப்படாமை –ஒவ்வொரு உறுப்புக்களுக்கும், சுற்றுச்சூழலுக் கேற்ப கொடுக்கப்பட வேண்டிய கவசம் ஐ ளு 456- பரிந்துரையின் படி பின்பற்றப்பட வேண்டும்.


4. காரம் – கூட்டுப் பொருள் வேதியல் வினை: சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்டில் சோடியம் ஆக்ஸைடு மற்றும் பொட்டாசியம் ஆக்ஸைடு
என்ற கார உப்புக்கள் ஓரளவு கலந்துள்ளன. இவை சில வகை தாதுமணல் கூட்டுப் பொருளோடு சேரும்போது வேதியல் மாற்றம் அடைந்து விரிவடைவதால் கான்கிரீட்டில் விரிசல்கள் தோன்றவும், கான்கிரீட் சிதிலமடையவும் காரணமாகிறது. இவ்விரிசல்கள் மூலம் காற்றும் நீரும் உட்புகுந்து கம்பிகளைத் துருப்பிடிக்கச் செய்கின்றன. ஆனால் இவ் வேதியல் வினை மிக மெதுவாக நடை பெறுவதால், இவ்வகை விரிசல்கள் ஏற்பட அதிக காலம் பிடிக்கிறது. கார உப்புக்களுடன் வேதியல் வினை ஏற்படுத்தக் கூடிய தாது மணலை கூட்டுப் பொருளாகப் பயன் படுத்துவதைத் தவிற்பதன் மூலம் இவ்வகை விளைவுகளைத் தவிர்க்கலாம்.
அடுத்த பகுதியில், கட்டிட அடித்தளம் அமிழ்வதால் கட்டிடத்தில் ஏற்படக்கூடிய விரிசல்கள் குறித்துக் காணலாம்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067641