தமிழ்நாட்டில் தீராத பல்வேறு பிரச்சனைகளுள் மணல் பிரச்சனையும் ஒன்று. திடீரென ஒரு மாதம் ஒரு லோடு மணல் 50,000 ரூபாய்க்குச் செல்லும். அடுத்த மாதமே 15,000 ரூபாயிற்கு வந்து நிற்கும். இன்னொரு மாதம் மணல் எங்குமே கிடைக்காது. இது போல பல்வேறு குழப்பங்கள் , இடைத்தரகர்கள், திருட்டு மணல்;, 'மணல் லாரியில் அடிப்பட்டு பொதுமக்கள் உயிரிழப்பு, மணல் லாரியை மறித்த கிராமத்து மக்கள், மணல் அள்ளுதலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் கொலை" என்பது போன்ற பல செய்திகள் தான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக ஊடகங்களில் நிரம்பி வழிகிறது.
இவை எல்லாவற்றிற்கும் ஒரு கீரிடம் வைத்தாற்ப் போல புதுக்கோட்டையை சார்ந்த ஒரு தனியார் நிறுவனம் வெளிநாட்டிலிருந்து செயற்கை மணலை கப்பல் மூலம் கொண்டு வந்து தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தியது. அதன் பின்பு மணல் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. வெளிநாட்டிலிருந்து மலிவான மணலைக் கொண்டு வந்தால் உள்;ரில் விற்கிற ஆற்று மணல் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும். அதனால், நமக்கு கிடைக்க வேண்டிய கமிஷன் கிடைக்காமல் போய்விடும் என்று அஞ்சிய அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் வெளிநாட்டு மணல் விற்பனைக்குத் தடை விதித்தார்கள். அந்த தனியார் நிறுவனம் கோர்ட்டுக்குச் சென்றது. ஒரு ஆண்டுக்கும் மேலாக வழக்கு நிலுவையிலிருந்த நிலையில் கடைசியாக சுப்ரீம் கோர்ட்டு 'தனியார் நிறுவனத்திலிருந்து வெளிநாட்டு மணலை அரசே வாங்கிக் கொள்ள வேண்டும். அரசின் பொதுப்பணித்துறையின் மூலம் இறக்குமதி மணலை விற்கவேண்டுமென" உத்தரவு போட்டப் பிறகு தமிழக அரசால் எதுவுமே செய்ய முடியவில்லை.
தமிழக அரசு ஓராண்டிற்கு முன்பாக ஷதமிழ்நாடு மணல் இணைய சேவை| என்கிற இணையத்தளத்தையும், ஒரு செயலியையும் அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் இதை எல்லா தரப்பினரும் வரவேற்றார்கள். இதன் மூலம் ஆன்-லைனில் யார் வேண்டுமானாலும் மணலை முன்பதிவு செய்து முறையான வழிமுறையில் டி.டி. மூலமாக கட்டணம் செலுத்தி மணலை பெறமுடியும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் ஏராளமான பிரச்சனைகளிருந்தன. அதிகாரப்பூர்வமாக தொகையை செலுத்திவிட்டு மணலை கொண்டு வரும்போது அடியாட்களிடம் பணம் கொடுக்க வேண்டியிருந்த சூழ்நிலை அப்பொழுது இருந்தது. ஆனால், அந்த செயலி கொண்டு வரப்பட்ட சில மாதங்களிலேயே உயர் நீதிமன்றம் புதுக்கோட்டை தனியார் நிறுவனம் மணல் பிரச்சனை வழக்கின் போது, 'ஆற்று மணலை எவருமே அள்ளக் கூடாது. எம்.சாண்ட்டை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதைக் கூட இன்னும் சில மாதங்களில் மூடிவிட வேண்டும். அதன் பிறகு வெளிநாட்டு மணலைத்தான் உபயோகிக்க வேண்டுமென" தீர்ப்பு கூறியது.
வெலவெலத்துப் போன தமிழக அரசு உடனடியாக இயற்கை கனிமள சட்டங்கள் பிரிவில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதன்படி, இறக்குமதி மணலை தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை மூலமாகத்தான் விற்கப்பட வேண்டுமென்ற ஒரு சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. எது எப்படியோ, இறக்குமதி மணலை யாராவது ஒருவர் விற்றால் சரியென பொதுமக்கள் பெருமூச்சு விட்டார்கள். இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனையை சென்ற மாதம் 21ம் தேதி முதல் விற்பனைக்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளார்.
இந்த மணலுக்காக றறற.வளெயனெ.in என்கிற அரசு இணையத்தளத்திலும், கைப்பேசி செயலி மூலமாக
வும், ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாமென உத்தரவு விட்டிருக்கிறார். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஒரு யூனிட் மணல் விலை சுமார் 4.50 டன் கொண்ட இறக்குமதி மணல் ரூ.9,900 ரூபாயிற்கு விற்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசின் இறக்கு மதி மணல் விற்பனை பற்றியும், தற்போது நிலவுகிற ஆற்றுமணல் பிரச்சனை குறித்தும் தமிழ்நாட்டின் மிகப் பெரிய கட்டுமானத் துறைச் சங்கமான 'பேசியாட்" நிறுவனத்தின் நிர்வாகியான திரு. ஆர்.வி.எல்.ரவிச்சந்திரன் அவர்களைக் கேட்டோம்.
அவர் பேசும் போது, ''தமிழக அரசின் இறக்குமதி மணல் விற்பனை கொள்கை வரவேற்கத்தக்கது தான் என்றாலும் அவர்கள் சொல்லும் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆற்றுமணல் குவாரிகள் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது என்றாலும், அங்கீகாரமில்லாத சிலர் மணலை எடுத்து விற்று கொண்டுத்தான் இருக்கிறார்கள். அந்த வகையில் அந்த ஆற்று மணலின் விலை ஒரு யூனிட்டிற்கு 3,000 ரூபாயாக இருக்கிறது. அதே ஆற்று மணல் சென்னைக்கு வரும்போது போக்குவரத்து கட்டணத்துடன் சேர்த்து 10,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆற்று மணலை தவிர்த்து நீங்கள் எம்.சேண்ட்டிற்கு செல்லும் போது, ஒரு யூனிட் எம்.சேண்ட் 5,000 ரூபாய்க்கு தமிழகத்தில் எல்லா மூலைகளிலும் கிடைக்கிறது.
ஆனால், தமிழக அரசு சொல்லும் இறக்குமதி மணல் விலை ரூ.9,000 ரூபாய் ஆகிறது. இது மணல் விலை மட்டும் தான். ஜிஎஸ்டி, போக்குவரத்து கட்டணம் சேர்ந்தால் அப்படியே 2 மடங்காக விலை உயரக் கூடிய ஆபத்திருக்கிறது. இவ்வளவு விலை கொடுத்து மணலை வாங்கி எப்படி ஒரு பில்டரோ அல்லது ஒரு தனிநபரோ வீடு கட்டமுடியும்?. தமிழ்நாட்டில் கடுமையான மணல் பற்றாக்குறை இருந்தபோது கூட இவ்வளவு விலை கொடுத்து யாரும் ஆற்று மணலை வாங்கவில்லை. டிப்பர் எனப்படும் ஒரு லாரியில் 6 யூனிட் கொண்ட 1 லோடின் ஆற்று மணல் விலையே ரூபாய் 50,000 ஆகத்தான் இருந்தது. அப்படியெனில், ஒரு யூனிட் மணல் விலை ரூபாய் 8,000 ஆக விற்றது. ஆற்றுமணல் மிகப் பற்றாக்குறையாக இருந்தபோதே ஒரு யூனிட் மணலை 8,000 ரூபாய் கொடுத்து வாங்கினோம். ஆனால், அதுவே விலை அதிகம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக தற்போது ஆற்றுமணலின் விலை ஓரளவிற்கு கட்டுக்குள் வந்திருக்கிறது.
ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் எங்குமே இப்போது முறையான மணல் குவாரிகள் செயல்படுவதில்லை. அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இதுப்போல, இறக்குமதி மணலை கப்பலில் கொண்டுவந்து அதற்கு இத்தனை விதிகள், கொள்கைகள் இயற்றப்பட்டு அரசு விற்பதைவிட ஒவ்வொரு 100 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியிலும், ஒவ்வொரு எம்.சேண்ட் குவாரிகளை இந்த அரசு ஏற்படுத்தினாலே, மணல் பிரச்சனையே இருக்காது. ஆற்றுமணலை தொடக்கூடாது என்றால், எம்.சேண்ட் மட்டும் தான் சிறந்த வழியாக இருக்கும்.இறக்குமதி மணல் அல்ல|| என்றார்.
ஆற்று மணலும் வேண்டாம். இறக்குமதி மணலும் வேண்டாம். செயற்கை மணல் மட்டும் போதும் என நீங்கள் சொல்லும் போது, மலைகளும் காப்பாற்றப்பட வேண்டியது தானே என்கிற கருத்து எழுகிறதே.
'ஆம். உண்மையிலேயே அதுப்போல ஒரு சூழ்நிலை வந்தால், அதாவது, மலைகளை எந்தவொரு பயன்பாட்டிற்கும் தொடக்கூடாதென்றால், வெகு நிச்சயமாக நாம்; இறக்குமதி மணலைத் தான் தேடி செல்ல வேண்டும். ஆனால், தற்போது எம்.சேண்ட குவாரிகள் இயங்கிக் கொண்டிருப்பதால் தான் இந்த கோரிக்கையை நாம் முன் வைக்கிறோம். மலைகளை யாரும் தொடக்கூடாது என்னும் போது எம்.சேண்டும்
தவிர்க்கப்படவேண்டியது தான். அதுபோன்ற ஒரு சூழ்நிலை வரும் போது நாம் இறக்குமதி மணலை விட, மாற்றுப் பொருட்களை நோக்கி நாம் செல்ல வேண்டும். அதாவது, எம்.சேண்;டிற்கு பதிலாக ஃப்ளை ஆஷ் , மறுசுழற்சி செய்யப்பட்ட அக்ரிகேட், இறக்குமதி மணல் என நாம் பாதையை மாற்றவேண்டும்.
ஆனால், இவற்றின் மூலமாக மணலின் பயன் பாட்டை நாம் முற்றிலுமாக தவிர்த்திட முடியாது, ஆனால் குறைக்க முடியும். உதாரணத்திற்கு, மணலை கான்கீரிட், பில்லர்கள், தளங்கள், தூண்கள் போடுவதற்கு பயன்படுத்துகிறோம். இதை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், பூச்சு வேலைக்காகவும், பேஸ் மட்டம் நிரப்புவதற்காகவும் ஆற்று மணலை பயன்படுத்துவதை நாம் குறைக்க முடியும். பூச்சு வேலையை பொறுத்தவரை எம்.சேண்ட ஐ விட மிக சிறந்த ஒரு கனிமப் பொருள் தான் ஃப்ளை ஆஷ். நிலக்கரி சாம்பலிலிருந்து வெளிப்படும் இந்த ஃப்ளை ஆ~; கொண்டு கற்களை நாம் தயாரிக்கும் போது, மேற்பூச்சு செலவிற்காக ஆற்று மணலை தேட வேண்டிய அவசியமிருக்காது. மேலும் பூச்சு வேலைக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
ஆனால், ஃப்ளை ஆஷ் கற்கள் உற்பத்தியாளர்களுக்கு தேவையான ஃப்ளை ஆஷ் கிடைப்பதில்லை. மேட்டூர், நெய்வேலி போன்ற அனல்மின் நிலையங்களிலிருந்து உருவாகிற ஃப்ளை ஆஷ் ஏறத்தாழ 90 விழுக்காடு சிமெண்ட் நிறுவனங்களுக்குத் தான் போய் சேருகிறது. அதாவது, ஒவ்வொரு வாரமும் ஃப்ளை ஆஷ்; கற்கள் உற்பத்தியாளர்களுக்கு 135 டன்னாவது செல்ல வேண்டும் என்பது விதி.
ஆனால், உண்மையில் அவர்களுக்கு 25 டன்கள் தான் செல்கிறது. அதாவது, 10 சிமெண்ட் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு 90 விழுக்காடும், 500க்கும் மேற்பட்ட சிறு சிறு ஃப்ளை ஆஷ்; கற்கள் உற்பத்தியாளர்களுக்கு 10 சதவிகிதமும் தான் அரசு சார்பில் ஃப்ளை ஆஷ்; சப்ளை செய்யப்படுகிறது. இது ஒருபுறமிருக்க ஃப்ளை ஆஷ் கொண்டு தயாரிக்கப்படும் பிபிசி சிமெண்ட்டை அரசின் எந்த ப்ராஜெக்ட்டிற்கும் பயன்படுத்தக் கூடாதென அரசு அறிவுறுத்துகிறது. அதாவது, சிமெண்ட் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் 100 ரூபாய்க்கு ஒரு டன் ஃப்ளை ஆ~; ஐ சப்ளை செய்து விட்டு அவர்கள் தயாரிக்கும் சிமெண்ட்டை பயன்படுத்த மாட்டேன் என்று முரணாக செயல்படுகிறது இந்த அரசு.
ஃப்ளை ஆஷ் கொண்டு தயாரிக்கப்படும் PPC சிமெண்ட்டை பயன்படுத்தக் கூடாது. OPC சிமெண்ட்டைத் தான் பயன்படுத்த வேண்டும் என அரசு சொல்வது வேடிக்கையான ஒன்று என்றாலும், சில கான்டராக்டர்கள் அரசின் விதியை மீறி ஃப்ளை ஆஷ் கலந்த சிமெண்ட்டை தான் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஆக, சந்தையில் எங்களுக்குத் தேவையான ஃப்ளை ஆஷ் சாம்பல் கிடைக்காத பட்சத்தில் நாங்கள் மிக அதிக விலை கொடுத்து, அதாவது காரைக்குடி துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகத்திலிருந்து நாங்கள் ஃப்ளை ஆ~; ஐ இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். சிமெண்ட் நிறுவனங்களுக்கு ரூ.100 ரூபாய்க்கு கிடைக்கக் கூடிய அதே ஃப்ளை ஆஷ் எங்களுக்கு ரூ.500 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால், அது எவ்வளவு கொடுமையான விஷயம் என்று பாருங்கள். அது மட்டுமல்ல, அது எங்களுடைய பணியிடத்திற்கு கொண்டு வருவதற்காக நாங்கள் போக்குவரத்து செலவும் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நிலை இப்படியே தொடரும் போது, ஃப்ளை ஆஷ் விலை கூட ஒரு காலத்தில் ஆற்று மணலின் விலைக்கு சமமாக ஆகிவிடும் என்கிற ஆபத்தும் இருக்கிறது."
இறக்குமதி மணல் விலை அதிகம் என்கிறீர்கள்..அப்படியெனில் மாற்றுமணலாக மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்த முடியாதா?
ஆற்று மணலுக்கு மாற்றுப் பொருளாக ஃப்ளை ஆஷ் பயன்படுத்துவதுப் போல மறுசுழற்சி பொருட்களையும் பயன்படுத்த வேண்டுமென்றால் அரசின் ஆதரவு தான் மிக அதிகமாக தேவை. வெளிநாடுகளில் கட்டிட இடிப்புப் பணிகளை அரசே ஏற்றுச் செய்கிறது. அவ்வாறு, எடுக்கப்பட்ட கட்டிட இடிபாடுகளைக் கொண்டு சென்று ஒரு தொழிற்சாலையில் மறு சுழற்சி செய்யப்பட்ட அக்ரிகேட் மற்றும் மணலாக தரம்பிரித்து வைத்துக் கொள்கிறது.
அதுப் போன்ற மறுசுழற்சி மணலை வேண்டு பவர்கள் அரசிடம் விண்ணப்பித்து தங்களது ப்ராஜட்களில் எடுத்து கொள்ளலாம். இதனால், ஆற்று மணலின் உபயோகம் பெரிதளவு குறைகிறது. ஆனால், அது போன்ற நேர்த்தியான செயல் திட்டங்கள் இங்கு இல்லை. பல்வேறு விதமான மறுசுழற்சி ப்ளான்ட்கள் உருவாக்கப்பட வேண்டும். கட்டிட இடிபாடுகள் மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும் என பல திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
மணல் பற்றிய உங்கள் கோரிக்கைகள் அரசளவில் என்ன நிலையில் இருக்கிறது?
தமிழகக் கட்டுமானத் துறையில் காலகாலமாக இருந்து வரும் சிமெண்ட் விலை உயர்வு, ஆற்று மணல் பிரச்சனை, ஆள் பற்றாக்குறை போன்ற வற்றையெல்லாம் நாங்கள் பேசுவதற்கு ஒரு துறை கூட இல்லை.
கட்டுமானத் துறைக்கென ஒரு அமைச்சகம் இருந்தால் தான் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் களையப்படும்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஒரு காலத்தில் விவசாயம் முதலிடத்தை பெற்றிருந்தது. ஆனால், அந்த விவசாயத்தை கூட பின்னுக்கு தள்ளி முதலி டத்தில் இருப்பது தமிழக கட்டுமானத் துறை. ஒரு கிராமத்தில் 100 குடும்பங்கள் இருந்தால் அதில் 60ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கட்டுமானத்துறையை நம்பித்தான் பிழைக்கிறார்கள். அப்படியெனில், தமிழக அரசு இந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து தனி அமைச்சகம் ஒன்றை ஏன் இதுவரை உருவாக்கவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. எங்கள் குறை
களைச் சொல்லி அவை செயல்படுத்தப்படவில்லை என்பதே மிகப் பெரிய கொடுமையான விஷயம் என்றால், எங்கள் குறைகளை யாரிடம் சொல்வது என்று கூட இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை நீங்களே நன்றாக உணர வேண்டும்.
ஊடகங்கள் அனைத்தும் கட்டுமானத் துறைக்கு ஏற்படும் பிரச்சனைகள், சிக்கல்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை அதிகளவில் வெளியிட வேண்டும் என்பது தான் என் கருத்து"
என்றார் ரவிச்சந்திரன்.
அடுத்த இதழில் பல்வேறு துறை வல்லுநர்களிடம் இதைப் பற்றிய மேலும் பல கருத்துகளை கேட்டு வெளியிடுவோம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067609
|