தமிழகத்தில், மனைப்பிவுகளை உருவாக்கி விற்பனை செய்வதில், ரியல் எஸ்டேட் நிருவனங்களே முன்னிலையில் உள்ளன. இத்துறையில் அதிக முதலீட்டுடன் குடியிருப்பு திட்டங்களை செயல் படுத்த இறங்கிய நிறுவனங்கள், வீடுகள் கட்டி விற்பனை செய்வதிலேயே ஆர்வம் காட்டின.
பெரிய முதலீட்டில், அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கொண்ட டவுன்´ப் களை உருவாக்கு வதையே பிரதான பணியாக கொண்டு இந்நிறுவனங்கள் செயல்பட்டன.
இதில், திட்ட அனுமதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம், கட்டுமான பொருட்டள் தட்டுப்பாடு, அபரிமிதமான விலை உயர்வு,உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் அடாவடி வசூல் போன்ற பிரச்னைகளால், குறித்த காலத்துக்குள் வீடுகளை கட்டி முடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இத்தனை பிரச்னையையும் தாண்டி வீட்டை கட்டினால், விலை அதிகம் என்று கூறி, மக்கள் வாங்குவதை தவிர்க்கின்றனர். இதனால், வங்கியில் கடன் வாங்கி முதலீடு செய்து, வீடு கட்டிய நிறுவனங்கள், பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், வீடு கட்டி விற்பதில் முன்னணியில் இருக்கும் சில நிறுவனங்கள், புதிய திட்டங்களுக்காக வாங்கிய நிலங்களில் வீடு கட்டுதை கைவிட்டு, அவற்றை மனைகளாகவே விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளன.
ஒரு திட்டத்தை அறிவித்த சில நாட்களிலேயே, 70 சதவீத வீடு விற்பனைக்கான முன்பதிவை முடித்துவிடும் அளவுக்கு மக்களிடம் செல்வாகு உள்ள நிறுவனங்கள், இப்போது, மனை விற்பனையில் இறங்கி உள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறைந்த அளவு நிலத்தில், அதிக தள்ங்கள், அதிக எண்ணிக்கையிலான் வீடுகள் கொண்ட குடியிருப்பு திட்டங்களை செயல் படுத்தும் நிறுவனங்கள், காலி மனை விற்பனையில் இறங்கி உள்ளதால், அபார்ட்மென்ட் கலாசாரத்தில் இருந்து, தனி வீடு கலாச்சரடத்துக்கு சென்னை மாற போகிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, சென்னை புறநகரில், சதுரடிக்கு, 1.000 ரூபாய் விலையில் மனைகிடைப்பது நடுத்தர மக்களின் முதலீட்டு திட்டங்களுக்கு ஏற்றதாக உள்ளது. இதில், மனை வாங்குவோர், தங்கள் பெயருக்கு பட்ட வாங்கிக் கொண்டால் பிற்காலத்தில் பிரச்னைகளை தவிர்க்கலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067601
|