மனை வாங்குவதற்கு முன், அந்த மனையை பார்வை இடுதல் மிக அவசியம். வாங்குவதற்கு முன்பு பார்வையிட்டாலும், மனையின் நீல அகலத்தை அளந்து பார்ப்பதில் பொதுவாக கவனம் வைப்பதில்லை. அந்த சிந்தனை நமக் கெல்லாம் வெகு குறைவே.
பதிவு வேலைகள் முடிந்தவுடன், கூடிய விரைவில் உடனடியான, நம் மனையின் எல்லைகளை நிர்ணயிக்கும் விதமாக, ஊர்ஜிதப்படுத்தும் விதமாக எல்லை சுவரை அமைப்பது நன்மையாகும்.
முழுவதுமாக அமைக்கா விட்டாலும் குறைந்த பட்சம், ஐந்து அடிக்கு ஐந்து அடி நீளத்தில், மூன்று அடி உயரத்தில், ஒரு சிஷீய கட்டுமானப்பணி அவசியமாகும். இல்லை யயன்றால், அடுத்து வாழும் மக்கள் ஒட்டியுள்ள இடங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்ய வாய்ப்பு நாமே கொடுத்தாகி விடும்.
இன்றைய சூழலில், அக்கம் பக்கத்தில் மனிதர்கள் இல்லாத பகுதியில் கூட வீடு கட்டி விடலாம். வளர்ந்த நகர்புறப்பகுதியின் மத்தியில் வீடு கட்டுவது போறியாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் பெரிய சவாலாக உள்ளது.
பிற மனைகளில் வீடுகள் வந்திருந்தால், உங்கள் மçன் மட்டும் தனியாக இருக்கும். அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள், தங்கள் மணைக்கு உரிய காம்பவுண்ட் சுவர் அமைத்து இருந்தால், உங்கள் நிலம் தனியாக இருக்கும்பட்சத்தில் பிரச்னை இல்லை.
இதிலும், பக்கத்து வீட்டுக்காரர்கள் காம்புவுண்ட் சுவர் கட்டியதால் லாபம் என்றும் நினைக்க முடியாது. பொதுவாக, காலி, நிலத்தை ஒட்டி காம்பவுண்ட் சுவர் கட்டும் பக்கத்து வீட்டுக்காரர்கள், தங்கள் மனையில் இருந்து சில அடியாவது தள்ளி வந்து இருப்பார்.
காம்பவுண்ட் சுவர் கட்டும் போது, சர்வேயர் வைத்டு அளந்து, மற்ற மனைகளின் உரிமையாளர்கள் முன்னிலையில், இதற்கான எல்லை கோடு வரையப்பட வேண்டும்.
ஆனால், பெரும்பாலான இடங்களில், பக்கத்து மனைக்காரார் யார், எங்கு இருக்கிறார் என்பது தெரியாத சூழலில், எல்லை தாண்டி வந்து காம் பவுண்ட் சுவர் அமைக்கும் நபர்கள் அதிகமாகவே இருக்கின்றனர்.
இது போன்ற பிரச்னைகளில், காலி மனைஇல் வீடு கட்ட செல்வோர், முதலில், சர்வேயர் உதவியுடன் மçன்யில் வீடு கட்ட செல்வோர், முதலில், சர்வேயர் உதவியுடன் மனையின் முழு பரப்பையும் அளக்க வேண்டும். வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில், அந்த மனையில், நான்கு மூலைகளும் அமைந்து உள்ளதா என்பததையும் சரி பார்க்க வேண்டும். அப்போது தான் பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067620
|