பட்ஜெட் பக்காவாக இருந்தால் பண விரயம் குறையும்

24 ஜனவரி 2024   05:30 AM 25 அக்டோபர் 2018   11:04 AM


எகிறி இருக்கும் மனையின் விலையும், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றமும், வீடு வாங்குவோருக்கும், கட்டுபவர்களுக்கும், பெரும் சவாலாக இருக்கிறது. புதிதாக வீடு கட்டும் ஒவ்வொருவரும், கட்டுமான செலவை கண்டு மலைத்து போவது, அண்மை காலங்களில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. பெரும்பாலானோர், வீடு கட்டும் முன், அதற்காகும் செலவு குறித்த கணக்கு போடுவர். ஆனால், அந்த கணக்கு எப்படிப் பட்டதாக இருக்கிறது என்பது, கட்டுமான பணிகள் முடிவதற்குள் தெரிந்துவிடும். அந்த பட்ஜெட் கணக்கையும் தாண்டி, செலவு எங்கோ சென்று விடுவது தான், தற்போதைய நிலை.
குறிப்பாக, கட்டுமான செலவை குறைக்க வேண்டும் என்றால், அந்தந்த பகுதிகளில், கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துவது, திறமையான பணியாளர்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர், இத்துறை வல்லுனர்கள். செலவை குறைக்க எத்தனை வழிகள் உண்டோ, அத்தனையும் கையாள நமக்கு உரிமை உண்டு.
அண்மை காலமாக, குறைந்த செலவில் வீடு கட்டுவதற்கான வழிமுறைகள், பொருட்கள், தொழில்நுட்பங்கள் குறித்தகவல்கள் பரவலாக கிடைக்கின்றன. புதிய் தொழில்நுட்பங்களையும் எப்படி பயன்படுத்துவது என்பதில், பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. பொதுவாக, கட்டுமான செலவை, பொருட்களுக்கு என்றும், பனியாளர் ஊதியம் என்றும் இரு வகையாக பிரிக்கலாம்.
இதில், எந்த பிரிவுக்கு எவ்வளவு ஒதுக்குவது என்பதில் தான், சிக்கல் ஏற்படுகிறது. பெரும்பாலான சமயங்களில், ஏற்படுகிறது. பெரும்பாலான சமயங்களில், வீடு கட்டு வதற்கான மொத்த பட்ஜெட் தொகையில், 60 சதிவீதம் வரை கட்டுமான பணியாளர்களுக்கும், அதே அளவு கட்டுமான பொருட்களுக்கும் தேவைப்படும். எனவே, பொருட்கள் வாங்கும் செலவை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று யோசிக்க வேண்டும். அதேசமயம், செலவை குறைப்பதாக கூறி, தரத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. இதில் மதிப்பு கூட்டப்பட்டது என்ற ரகங்களையும், போக்குவரத்து செலவையும் குறைத்து பட்ஜெட் போட்டால் தெளிவான முடிவுக்கு வரலாம்.
இதே போன்று பணியாளர்கள் விrயத்திலும், எப்போது, எந்த பணிக்கு, எத்தனை பேர் தேவை என்பதை தெளிவாக திட்டமிட்டால், கட்டுபடியாக கூடிய பட்ஜெட் போடலாம்.
எனவே, கட்டுமான பணிக்கு, சிக்கல் இல்லாத பட்ஜெட் போட்டு  விட்டால், பாதி வேலை முடிந் ததாக நினைத்துக் கொள்ளலாம்.
கவனத்திற்கு...
1. அதிக செலவை ஏற்பட்டுமித்தும் செங்கற்களை, குறைந்த அளவில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது: 25 சதவீத செலவை குறைத்து விடும்
2. உள்ளுர் அளவில் கிடைக்கும் மணல், கான்கிரீட் பிளாக்குகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்
3. எரிசக்தி பயன்பாட்டை குறைக்கும் வகையிலான பொருட்களை பயன் படுத்தலாம்.
4. சுற்றுச்சுழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவதில், ஆர்வம் காட்ட வேண்டும். மரங்களை பயன்படுத்த வேண்டிய இடத்தில் கான்கிரீட் பிரேம் களை பயன்படுத்தலாம். கிரில்களுக்கு பதில், சிமென்ட் கிராதிகள் அமைக்கலாம்.
5. கட்டடத்தின் வடிவமைப்பை முடிவு செய்யும் நிலையிலேயே போதும், அது எந்த அளவுக்கு அத்தியாவசிய
மானது என்பததை முடிவு செய்ய வேண்டும்.
கட்டுமான பொருட்களில் சேதாரம்
பெரும்பாலான சமயங்களில், செங்கல், மணல், ஜல்லி, போன்ற கட்டுமான பொருட்கள், தெருவில் கொட்டப்படும் அதன் பிறகே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு வெளியில் கொட்டப்பட்டு, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் நிலையில், சாதாரணமாகவே, 10 சதவீதம் வரை இழப்பு ஏற்படுகிறது.
ஆனால், வீடு கட்டுவதற்கான பட்ஜெட்டில் தங்கம் போல, இந்த சேதாரம் சேர்க்கப்படுவது இல்லை, இதனால், வெளிப்படையாக தெரியாமலேயே கட்டு
மானப் பொருட்கள் வகையில், குஷீப்பிட்ட அளவு தொகை இழப்பு ஏற்படுகிறது.  விலைவாசி வெகுவாக அதிகரித்துள்ள இன்றைய சூழலில், இது போன்ற இழப்புகள் வீடு கட்டும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, பல்வேறு மறைமுக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
கட்டுமானப் பணிகள் எப்படி நடக்கிறது என்பதை பார்க்க நேரில் செல்லும் போது, பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோரிடம் கட்டுமானப் பொருட்கள் சேதாரத்தை குறைக்க வேண்டும் என, அஷீவுறுத்த வேண்டும். 
சில சமயங்களில், சிரமம் பார்க்காமல், ஈடுபட்டால் தான், சேதாரத்டை கட்டுப்படுத்த முடியும். கல், மண் தானே என, நினைக்கவில்லை யயன்றாலும்,  எனினும் கொஞ்சம் மதிப்பு கொடுத்து கவனம் எடுத்தால், 
மறைமுக சோதாரத்தை குறைக்க முடியும்.
கவனத்திற்கு...
1. கட்டுமானப் பொருட்களை, ஒரேடியாக வாங்கி குவித்து வைப்பது சேதாரத்தை அதிகரிக்கும் அடிப்படை காரணம்.
2. மொத்தமாக பொருட்களை வாங்கி போடுவதால், பொருட்கள் வீணாவதுடன், உங்கள் பணம் ஒரே இடத்தில் முடங்கும்.
3. ஒப்பந்ததாரர் நல்லவராக இருந்தாலும், அவருக்கும் பணியாளர்களுக்கு இடையிலான உறவு கூட, கட்டுமான பொருட்கள் சேதாரத்தை நிர்ணயிக்கும் காரணியாக உள்ளது.
4. ஒரு லோடு அளவுக்கு கட்டுமான பொருட்களை வாங்குவதாக இருந்தால், அதன் பயன்பாடு என்ன என்பதையும் கவனத்தில் வைத்து கணக்கு போட வேண்டும்
5. பற்றாக்குறை, விலை உயர்வு அபாயம் போன்ற காரணங்களால், கட்டுமான பொருட்களை முன்கூட்டியே கூடுதலாக வாங்குவதை விட, சேதாரத்தை கணக்கு போட்டு செயல்பட வேண்டும்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067599