கட்டிடத்தின் நோய் நீக்கும் மருந்து

24 ஜனவரி 2024   05:30 AM 25 அக்டோபர் 2018   10:33 AM


கட்டிடத்தின் பழுதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் செயல் திறன் இழந்து அது சரிந்து விழும் ஆபத்தும் இருக்கிறது. அதனால் நமது உடலைக் கவனிப்பதுபோல் கட்டிடத்தையும் நன்றாகக் கவனித்துவர வேண்டும். பலவிதமான குறைபாடுகளால் கட்டிடம் பாதிக்கப்படும். மழை, வெயில், காற்று போன்ற இயற்கைக் காரணங்களாலும் பாதிக்கப்படும். நாம் மருந்து மாத்திரை எடுத்து நமது நோயைக் குணப்படுத்துவதுபோல் கட்டிடத்துக்கும் சில மருந்துகள் கொடுத்து அதை நோயிலிருந்து மீட்கலாம்.

 

வீட்டின் உள்ளே தண்ணீர் குழாய் கழிவுகளாலும் கட்டிடம் பாதிக்கப்படும். இம்மாதிரி பாதிப்பு ஏற்படும் அதைச் சரிசெய்ய பலவிதமான பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன.அவற்றுள் ஒன்றுதான் எஃப்ஆர்பி. இது கம்பிகள், துணிகள், தகடுகள் எனப் பல வடிவங்களில் கிடைக்கிறது. எஃப்ஆர்பி என்பது Fiber Reinforced Polymers. இவற்றைக் கொண்டு செங்கல் கட்டிடங்களை வலுவூட்டலாம். இதில் பழுந்தடைந்த கட்டிடத்தில் எஃப்ஆர்பி கம்பிகளைச் செலுத்தி எபாக்ஸி (Epoxy) கொண்டு சமமாகப் பூச வேண்டும். மேலும் எஃப்ஆர்பி துணிகளைச் செங்கல் கட்டிடத்தின் மீது ஒட்டுவதாலும் வலு கிடைக்கும். தகடுகளைக் கொண்டு நாற்புறமும் ஒட்டி வலுவூட்டலாம்.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067613