உங்கள் பணி சிறக்க உதவும் ஆலோசனைகள் இந்த அத்தியாயத்தில் ஒரு சிவில் பொறியாளர் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பணி ஆலோசனைகளைப் பார்ப்போம்.

24 ஜனவரி 2024   05:30 AM 24 அக்டோபர் 2018   11:17 AM


கட்டிடத்தில் விரிசலை தடுக்கும் டிப்ஸ்


1. சென்ட்ரிங் பிரித்த இரண்டு வாரங்கள் ஆன பின்னரே, சிலாப்பின் மேல் பொருட்களை ஏற்றுவதும், கட்டுமான வேலை தொடங்குவதும் செய்ய வேண்டும். பிரிக்கும் முன்னரும், பின்னர் உடனேயேயும் மேற்கண்ட இரு வேலையையும் செய்யக் கூடாது.

 

2. கான்கிரீட் பரப்புடன் செங்கல் கட்டுமானத்தை இணைக்கும்போது தகுந்த ஒட்டும் தன்மையை உருவாக்கும் சிமெண்ட் பால் போன்ற பொருளை உபயோகித்த பின்னரே இணைக்க வேண்டும். அதுபோல், பூச்சுவேலை செய்யும் போதும், கான்கிரீட், செங்கல் இணைப்பு உள்ள இடத்தில் கோணிவலை (wire mess)-யை இணைப்பின் வலதும், இடதும் குறைந்தது 

9” உள்ளவாறு ஆணி கொண்டு இழுத்துக் கட்டிய பின்னரே பூச்சுவேலை செய்ய வேண்டும்.

 

3. கதவு, ஜன்னல் போன்றவற்றைப் பொருத்தும்போது, அதன் பிடிமானப் பகுதியை நன்றாக கான்கிரீட் போட்டு கெட்டித்து வைக்க வேண்டும்.

 

4. 4½ அங்குல செங்கல் சுவர் கட்டும்போது, குறைந்தது மூன்று வரிக்கு ஒரு முறை கிடைவாக்கில் ஒரு 6mm கம்பியையோ, வெல்டு மெஸ்ஸையோ வைத்து கட்ட வேண்டும்.


5. பூச்சுவேலை செய்யும் போது இரண்டு வேறுபட்ட இணைப்புள்ள இடங்களில் தகுந்த காடி எடுத்து விடுவது நல்லது. அது விரிசலை பரவவிடாது தவிர்க்கும்.


6. குறிப்பிட்ட நீeம் அல்லது உயரத்திற்கு மேல் கட்டுமானம் தொடரும்போது தேவையான Expansion Joint Compound- ஐ பயன்படுத்த வேண்டும்.


7. சிமெண்ட் அட்டை ஓடுகளை பயன்படுத்தும் முன் அதன் இருபக்கமும் பெயிண்ட் அடித்து பயன்படுத்துவது நல்லது.

 

8. தரமான கான்கிரீட்டின் அடையாளம் அதன் எடை 320 - 350Kg/m3 இருக்க வேண்டும். அதுபோல் அதன் தண்ணீர் அeவு விகிதாச்சாரம் 0.55க்கு மேல் போகாமல் இருக்க வேண்டும்.

 

9. கருங்கல் கட்டிடம் கட்டும்போது மூன்று அடிக்கு ஒரு பாண்டு கல் கொண்டு கட்டப்பட வேண்டும்.

 

10. வெயில் காலத்தில் கட்டுமானப் பொருளின் மீது சூரிய வெப்பம் நேரடியாக படுவதால், அவற்றை ஈரப்படுத்திப் பயன்படுத்த வேண்டும்.

 

11. சிமெண்ட் கொண்டு பணி செய்யப்பட்ட எல்லா கட்டுமானத்தையும் குறைந்தது ஏழுநாள் தொடர்ந்து நீராற்றல் வேண்டும். மேலும், பொறியாளர் சொல்லும் கால அளவு வரை நீர் ஊற்றுவது நன்மை பயக்கும்.

 

12. ஏற்கனவே உள்e கட்டுமானத்துடன், புதிய கட்டுமானத்தை இணைக்கும் முன், தேவையான பிடிமானத்தை ஏற்படுத்த, பழைய கட்டுமான இணைப்பை உடைத்து, அதில் ஒட்டும் தன்மையை அதிகரிக்கும் வேதியியல் பொருளை பயன்படுத்தி இணைக்க வேண்டும்.

 

13. அஸ்திவாரம் மற்றும் தளப்பரப்பிற்கு மண் நிரப்பி, நன்றாக நீர் விட்டு, கடப்பாரை கொண்டு ஆட்டி, எர்த் ரேமர் மூலம் இறுக்கிய பின்னரே அதில் தரை கான்கிரீட் போட வேண்டும்.

 

14. கட்டிடத்தின் அருகாமையில் உள்e மரங்களின் வேர்கள் கட்டுமானத்தில் சேதத்தை ஏற்படுத்தி விடாதவண்ணம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

15. ஜன்னலின் அடிமட்டத்தில் அதன் திறப்பு பகுதியின் இடதும், வலதும் குறைந்தது 1 அடி அeவு இருக்கும்படி கம்பிப்படல் கட்டி கான்கிரீட் போட வேண்டும்.

 

நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடிய கட்டிடங்களுக்கான டிப்ஸ்

 

1. சதுரம் அல்லது செவ்வக வடிவில் கட்டிடத்தை கட்டுவது.

 

2. ரூப் சிலாப்பில் தேவைப்படும் அeவு கம்பிகளை அதன் மூலையில் இடுவது.

 

3. கட்டுமானம், பிளின்த், பீம், லிண்டல், ரூப்பீம் என மூன்று நிலையில் தூண்கள் மூலம் கட்டுவது.

 

4. அஸ்திவாரம் பாறைப்பகுதி வரை தோண்டுவது.


5. முடிந்த மட்டும் தொங்கு உத்திரத்தை (Cantilevers Beam) தவிர்த்து கட்டுவது.


6. சீலிங் பூச்சை மெல்லிய அeவோ அல்லது முடிந்தமட்டும் தவிர்ப்பதோ நல்லது.

 

7. சிமெண்ட் கலவையில் கட்டப்படும் கட்டிடத்தின் உயரம் 15 மீட்டருக்கு மேல் செல்லாது பார்த்துக் கொள்ளுதல்.


மேற்சொன்ன 22 தொழிற்நுட்ப டிப்ஸ்களும் அறிமுகப் பொறியாளர்களுக்கு மிகவும் அவசியமானவை. என்றாலும், உங்களுக்கான வழிகாட்டுதல்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. நில நடுக்கத்தைத் தாங்க வேண்டுமெனில் அதற்கான தொழிற்நுட்ப வழிமுறைகளை புத்தகங்கள், கட்டுரைகள் வாயிலாக அறிந்து கொள்ள வேண்டும். பன்னடுக்கு மாடி கட்டிடங்கள் மேற்கொள்ளப்படும் பணியிடங்களுக்கு அடிக்கடி விசிட் செய்தல் வேண்டும். நமக்கான கட்டுமான அறிவை ஊட்டக்கூடியவை தான் பணியிடங்கள். எனவே, சிஷீய கட்டுமானம், பெரிய கட்டுமானம் பாகுபாடின்றி அனைத்து பணிகளையுமே கண்காணிக்க வேண்டும். புராஜெக்டின் ஒவ்வொரு செய்முறைக்கும் காரணம் என்ன? ஏன்? என்பதை வினா எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

(தொடருவான்)

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு...8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067535