சாதாரண கான்கிரீட், சாதாரண கட்டுமானங்களுக்குச் சரி. ஆனால், ஸ்பெஷல் கட்டுமானங்களுக்கும், அதிக எடை தாங்க வேண்டிய கட்டாயம் உடைய கட்டுமானங்களுக்கும் கூடுதல் பலம் வாய்ந்த கான்கிரீட் தேவைப்படுகிறது. வழக்கமான கான்கிரிட் பலம் கொண்ட மட்டும் தட்டப்படும்போது உடைந்து சுக்குநூறாகிறது. ஆகவே, இது பளு சுமக்க அருகதை அற்ற பொருளாக விளங்குகிறது. இதற்கு காரணம் என்னவெனில், இது இழுப்பு விசையை தாங்க முடியாத பொருளாக உள்ளது. ஆனால் கான்கிரீட் அமுக்கு விசையில் மிக பலமுள்ளதாக விளங்குகிறது.
கட்டுமானங்களில் இவ்விரு விசைகளின் தாக்கமும் அதன் மீது ஏற்படுகின்றன. எவ்வித சேதமும் இல்லாமல் கான்கிரீட்டை எவ்வாறு பாதுகாப்பது என்பதுதான் வினா. இதற்கான விடை தான் இரும்பு கம்பிகளால் வலுவூட்டுவது. அதுவும் கம்பிகளை இழுப்பு விசையுள்ள பக்கத்தில் அமைப்பதுதான். பொதுவாக வளையும் தன்மையுள்ள பாகங்களில் மேல்புறம் அமுக்கு விசையும் கீழ்புறம் இழுப்பு விசையும் உண்டாகின்றன. இதன் காரணத்திற்காக தான் பீம்களிலும் ஸ்லாப்களிலும் கம்பிகளை கீழ்புறம் கட்டுவதை பார்த்திருப்பீர்கள். இத்தகைய அமைப்பை வலுவூட்டிய கான்கிரீட் (Reinforced concrete) - FRC என கூறுவர். ஆரம்பத்திலிருந்து கிட்டத்தட்ட 1960-ம் ஆண்டுவரை இந்த நடைமுறை பழக்கமாகவே இருந்து வந்தது.
இழைகளால் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் (Fibre Reinforced Concrete) - FRC பொதுவாக கான்கிரீட்டை மேம்படுத்தலின் தொடர்ச்சியாக அது வலுவூட்டப்பட்டிருந்தாலும் கான்கிரீட்டின் உட்புறம் மிக நுண்ணிய விரிசல்கள் இருப்பது பல ஆராய்ச்சிகள் மூலம் நிரூபணம் ஆனது. இதனால் கான்கிரிட்டின் செயலாக்கம் பாதிக்கப்பட்டது. ஆகவே இதனைக் கட்டுப்படுத்தும் நிமித்தம் இழைகளை உபயோகப்படுத்தலாம் என யோசனை தோன்றியது.
கான்கிரீட் தயாரிக்கும்போது வழக்கமான ஜல்லி கற்கள், சிமெண்ட், மணல், தண்ணீருடன் குறிப்பிட்ட அளவுடைய மெல்லிய ஸ்டீல் இழைகளை கலவையுடன் சேர்ப்பதுதான் ஸ்டீல் ஃபைபர் ரீ- இன்ஃபோர்ஸ்டு கான்கிரீட். இதை இன்னமும் எளிமையாக சொல்ல வேண்டுமெனில் நமது கிராமங்களில் சாணத்தை எருவாக தட்டும்போது அதனுடன் வைக்கோலை சேர்ப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. இங்கு வைக்கோல் களிபோன்ற சாணத்தை வலுவூட்டுகிறது. காய்ந்தபின் பிறகும் எருவரட்டி அவ்வளவு சீக்கிரம் உடைவதில்லை.
நல்ல பலம் பொறிந்ததாக உள்ளது. இதே அடிப்படையில்தான் கான்கிரிட்டோடு இழைகளை சேர்ப்பதுஎன்கிற கருத்து உருவாயிற்று? இங்கு இரும்பு இழை என்பது வைக்கோல் போல நாம் கருத வேண்டும்.
இழைகள் பலவிதம் ஆனால், எடுத்த எடுப்பிலேயே ஸ்டீல் இழைகளுக்கு நாம் போகவில்லை. ஆரம்ப காலத்தில் மனிதமுடியை சிறுசிறு துண்டுகளாக நீளவசத்தில் வெட்டி இழைகளாக பயன்படுத்தினார். ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. பிறகு தாவரங்களிலிருந்து கிடைத்த இழைகளை பயன்படுத்த தொடங்கினர். உதாரணமாக, கற்றாழை நார், தென்னங்கயறு முதலியன.
இருந்தாலும் கான்கிரிட்டின் பளு தூக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டன. இதன் பலனாக இரும்பு கம்பிகளை இழையாக பயன்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இழைகளை கலப்பதால் உண்டாகும் நன்மைகள்..
1. ஒழுகலற்ற கான்கிரீட் கிடைக்கிறது.
2. சாதாரண கான்கிரீட்டை காட்டிலும் 3 மடங்கு அதிகமான வளையும் தன்மையுள்ள கான்கிரீட் உருவாகிறது.
3.தேய்மானம் மற்றும் உதிர்ந்து விழுதல், ஆகிய வற்றுக்குசிறந்த எதிர்ப்பு தன்மை உருவாகிறது.
இழையின் நீளத்திற்கும் விட்டத்திற்கும் உள்ள விகிதாச்சாரத்தை ஆஸ்பெக்ட்ரேஸ்யோ என கூறுவர். இழைகளை ஒன்று முதல் நான்கு விகிதாசாரம் வரையில் உபயோகப் படுத்தலாம். ஆஸ்பெக்ட்ரேஸ்யோ சுமார் 30 லிருந்து 100 வரையில் இருக்கலாம்.
இதனால் இழைகள் பாழாகி எந்தவித பயனுமில்லாமல் போய்விடுகிறது. கான்கிரிட்டும் இழைகளும் நன்கு கலந்து ஒரே சீரான கலவையாக தோற்றமளிக்க வேண்டும். இதை சாதா கான்கிரீட் போன்று சென்டெரிங்கில் நிரப்பி கட்டிடங்களை கட்டலாம்.
இத்தகைய கான்கிரீட்டின் உபயோகங்கள் :
வீடுகளின் ஸ்லாப்கள், பீம்கள், காலம்கள், ஆகியவற்றுக்குவிமான தளங்களுக்கு, ரோடுகளுக்கு, தொழில்கூட தரைகளுக்கு, மேல்படுகையாக அணைகள் நீர்வடியும் பகுதியின் மேல்பரப்பு, நீர் கீழே கொட்டும் அடித்தளங்கள், கடலின் பாதுகாப்பு சுவர்கள், முதலான ஹைட்ராலிக் மற்றும் கடல்சார் கட்டுமானங்களுக்கு, விமானங்கள் நிறுத்தும் ஹாங்கர்கள், ஏவுகணைகள்.
பணத்தை பாதுகாப்பாக வைக்க உதவும் பெட்டகங்கள், ஸ்ட்ராங் ரூம்கள் முதலியவைகள்.
சென்னையில் மெட்ரோ ரயில் ப்ராஜெக்டுக்காக கோயம்பேடு அருகேயுள்ள கட்டுமானங்களில் இழைகள் கொண்ட தானாக அடர்த்தியாக்கி கொள்ளும் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067557
|