‘இரயில்வே டிராக்’ அருகே வீடு கட்டலாமா ? மோகன்ராஜ், சிவில் கான்ட்ராக்ட்ர்

24 ஜனவரி 2024   05:30 AM 24 அக்டோபர் 2018   11:02 AM


நான் பெருங்களத்தூரில் ரயில்வே டிராக் அருகே (100 மீ தூரத்தில்) நிலம் வாங்கியுள்ளேன். ரயில் டிராக் அருகே வீடு கட்டலாமா? அல்லது அப்படி கட்டும்போது ஏதேனும் விசேஷமாக கட்டுமான முறைகள் மேற்கொள்ள வேண்டுமா?

பொறிஞர்.அ.வீரப்பன்

 

இரயில்வே பாதைகளின் - 100 மீட்டர் தொலைவிற்குள் கட்டடங்கள் கட்டுவதைப் பெரும்பாலும் தவிர்த்திட வேண்டும். குறிப்பாக ஆழம் குறைந்த (5 அடி முதல் 10 அடி வரை) அடித் தளங்களை (Shallow Foundation System - Isolated Footings - Open Trench Foundation - Strip Footings etc) போடக் கூடாது. இவை இரயில் வண்டி வேகமாகப் போகும் போது ஏற்படும் பலமான அதிர்வுகளால் கட்டடங்கள் சேதமடையும் (குறிப்பாக சுவர்களில் பெரும் விரிசல் விழும்) எனவே ஆழமான அடித்தளங்கள்(Deep Foundations - More than 6.00m depth) அமைக்க வேண்டும். குறிப்பாக பாரந்தாங்கும் சுவர் அமைப்பு முறை (Load bearing structures) யாக இல்லாமல் கான்கிரீட் சட்டக் கோப்பு முறை (RC Framed Structures) கட்டுமானம் அமைத்திட வேண்டும்.

 

Thayumanavan Ranganathan 
ரயில்வே டிராக்கில் இருந்து 100 அடிக்குள் உங்கள் மனை இருந்தால், உள்ளாட்சி நிர்வாகத்திடமிருந்து கட்டட அனுமதி பெறுவதற்கு முன்பு, ரயில்வே துறையினரிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். கட்டிடம் கட்டும்போது, ரயில் ஓட்ட அதிர்வை தாங்கும் வண்ணம் கட்டிட உறுதி வடிவமைப்பு செய்யப்பட வேண்டும். அந்த பகுதி சம்பந்தப்பட்ட ரயில்வே கோட்ட அலுவலகத்துக்கு நாம் கட்டவுள்ள உத்தேச கட்டட வரை
படத்தையும், கட்டவுள்ள கட்டடத்தில் இருந்து 100.மீ தூரத்துக்கான சுற்று சார்பு வரைபடத்தையும் (TOPO PLAN) அனுப்பி
வைத்து அனுமதி பெற வேண்டும்.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067568