கட்டிடத்துறையின் 5 மாற்றங்கள்

24 ஜனவரி 2024   05:30 AM 24 அக்டோபர் 2018   10:57 AM


சர்வதேச அளவில் உண்டாகி வரும் கவனிக்கத்தக்க மாற்றங்கள் - ஓர் ஆய்வு மனிதர்கள் குடும்பமாக வசிக்கத் துவங்கிய காலகட்டத்திலேயே வீடு, கட்டிடங்கள் உருப்பெறத் துவங்கிவிட்டன. வேளாண்மைப் போன்றே கட்டிடத் தொழிலும் பழமையானது என வரலாற்று ஆய்வாளர்கள் நன்கு அறிவார்கள். அன்ஷீலிருந்து இன்று வரை, பல்வேறு வகையானதொழிற்நுட்பங்கள், கட்டுமான முறைகள், கட்டிடப் பொருட்கள் கட்டுமான இயந்திரங்கள், சாதனங்கள் போன்ற பல அம்சங்கள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படுகின்றன. 

 

அவற்றில் 2010 க்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு, 2010க்குப் பிறகு வெகுவாக கடைபிடிக்கக் கூடிய விஷயங்கள்தான் தற்போதைய சர்வதேச கட்டிடத்துறையில் கோலோச்சி வருகின்றன. கட்டிடத்துறையை மேம்படுத்தும் இந்த 5 மாற்றங்கள் வெகுவாக கவனிக்கப்படவேண்டியவை ஆகும்.

 

1. 3டி பிரிண்டிங் முறைஅனைத்துத் துறைகளிலுமே 3டி பிரிண்டிங் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இது ஏன் கட்டிடத்துறைக்கு ஸ்பெrல் என்றால் காரணம் இருக்கிறது. போட்டோக்கள், அழைப்பிதழ்களுக்கு மட்டும்தான் 3டி பிரிண்ட் ஏற்றது என்பது இல்லை. ஒரு கட்டிட வரைபடத்திற்கு 3டி பிரிண்ட்தான் வாடிக்கையாளர்களை நன்கு புரிந்துகொள்ள செய்கிறது. இதற்கு முன்பு 2டி பிரிண்டில் தான் தங்கள் கட்டிட எலிவேrன், வரைபடத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இதே பெரிய புராஜெக்ட் அல்லது வசதி படைத்தவர்களுக்கான வீடு என்னும்போது மினியேச்சர் கொண்டு ஆர்க்கிடெக்டுகள் விளக்குவார்கள். ஆனால், மினியேச்சர்கள் உருவாவதற்கு காலமும், பணமும் அதிகம் செலவாகும்.

கணிப்பொறியில் காணும் முப்பரிமான கட்டிட வரைபடத்தை அப்படியே தாளில் முப்பரிமான தோற்றத்தில் அச்சு அசலாக ஒரு கட்டிடத்தையே மினியேச்சர் போன்று உருவாக்கி விடுகிறது இந்த 3டி பிரிண்டிங் முறை. இதற்கென செலவு அதிகம் இல்லை. 3டி பிரிண்டிங் மென்பொருள் மற்றும் அச்சு இயந்திரங்கள் இருந்தாலே போதும். ஆர்கிடெக்டுகளுக்கு பிரிண்ட் எடுத்து கொடுக்கும் சேவை நிறுவனங்கள் கிட்டத்தட்ட அனைவருமே 3டி பிரிண்ட் இயந்திரங்களைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள். வெகுவேகமான, அனைவராலும் வரவேற்கப்பட்டு கடைபிடிக்கப்படும், கட்டிடத்துறைச் சார்ந்த மாற்றங்களுள் 3டி பிரிண்டிங் முதன்மையானது என்பது உண்மை.

 

2. கட்டிட மென்பொருட்களின் உதவி 2000 வரை ஆட்டோகேட் என்கிற கட்டிடவரைபட உதவி மென்பொருளைத்தான் எல்லா பொறியாளர்களும் கேள்விப்பட்டிருந்தார்கள். ஆட்டேகேட் தெரிந்திருந்தால்தான் கட்டிடப் பொறியாளராக பணியாற்றுவதற்கு கதவு திறக்கும்.இன்னும் சொல்லப்போனால், கணிணியின் அடிப்படைத் தெரியாதவர்கள் கூட ஆட்டோகேட்-யை தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால், தற்போது கட்டிட மென்பொருட்களின் எண்ணிக்கையும், ஆதிக்கமும் அதிகமாகிவிட்டது. Stadpro, Revit, Primavera, Chief Architect, Carlson Civil Suite, CSI Bridge, PTC Mathcad போன்ற பல கட்டிட உருவாக்க மென்பொருட்கள் களத்தில் உள்ளன. இதுதவிர Candy, Tekla போன்ற கட்டுமான புராஜெக்ட் மென்பொருட்களும், Cloud, Value என ஏராளமான கட்டிடத்துறை கணக்கியல் மென்பொருட்களும் நாளுக்கு நாள் வந்த வண்ணம் உள்ளன. மிகச் சிறிய புராஜெக்ட் என்றால் கூட, இந்த மென்பொருட்கள் உதவி தேவையாக இருக்கிறது.

 

3. மாடுலர் கட்டுமானம்
பிரிகேஸ்டின் அடுத்த வடிவம்தான் மாடுலர் கட்டுமானம். இன்னும் சுருக்கமாகச் சொல்லப் போனால் பிரிகேஸ்ட் என்பது ஒரு கட்டுமானத்தின் பகுதி பகுதியாக தயார் செய்வது. பல்வேறு வகையான கட்டுமான உறுப்புகளால் ஆனது. ஆனால், மாடுலர் கட்டுமானம் ஒரு முழு வீட்டையே தயார் செய்து பொருத்தி விடக் கூடியது. செங்கல், கலவைப் பூச்சு, க்யூரிங் போன்ற எந்த தொந்தரவும் இல்லாத இந்த மாடுலர் கட்டுமானத்தை ஏராளமான ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். மாடுலர் கட்டுமானத்தை பயன்படுத்தி தனி வீடுகள் தான் கட்ட முடியும் என்ற நிலை மாறி பன்னடுக்கு குடியிருப்புகள் கூட மிக சுலபமாக உருவாக ஆரம்பித்து விட்டன. பிரான்ஸ், பிரேசில், நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் இம்முறை மிக பிரபலம்.

 

இம்முறையில் கட்டுமானங்கள் 50 ஆண்டுகள் வரை மிக சுலபமாக தாங்கும். இதில்பொதுவாகபயன்படுத்தப்படும் உலோக இணைப்புகள், கான்கிரிட், மரம்,முதலான அதே பொருட்கள்தான் இந்த முறையிலும் உபயோகப்படுத் தப்படுகிறது. நேரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் மாடுலர் கட்டுமானம் நன்கு பொருத்தமுள்ள தீர்வாக அமையும் .இது எப்படி இருக்கிறது என்றால் ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்ட்டரண்ட் டிலிருந்து உணவு மிக விரைவாக இராணுவ முகாமிற்கு அனுப்பப்பட்டு உடனடியாக போர் வீரர்களுக்கு சுடச்சுட பரிமாறுவது போல். கட்டிடம் எழுகிற போக்கிலேயே இது சுலபமான நேரத்தை நமக்கு வழங்குகிறது. 10000 ச.அடி கட்டிடத்தை எழுப்பும் நேரத்தில் 20000 ச,அடி எழுப்ப முடிகிறது. இதனை பல அடுக்குமாடி கட்டிடமாக பார்ப்பதுடன் இது LEED தேவைக்கு 100 சதவீதம் தகுதி பெற்ற கட்டிடமாகும் என்பதுதான் இதன் சிறப்பு.

 

4. முறையான திட்டமிடல் 

கட்டிடத்துறையில் திட்டமிடல் என்பது அவசியம்தான். ஆனால், அதன் தேவை மற்றும் முக்கியத்துவத்தை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போதுள்ள கட்டிடவியலாளர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்.மேல்நாடுகளிலும், வளைகுடா நாடுகளில் மட்டுமே நாம் கண்டு வந்த திட்டமிடல் மேலாண்மைக் கூறுகள் இந்தியா போன்ற நாடுகளிலும் வெகு சிரத்தையாக கடைப்பிடிக்கப் படுகின்றன. கென்யா, ஜிம்பாவே, இலங்கை, வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நம்மை விடப் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற மிக முக்கிய 1600 புராஜெக்டுகளிலும் தன்னால் ஒரு மிகச் சிறந்த திட்டமிடலைக் காண நேர்ந்ததாக அமெரிக்காவில் உள்ள ‘டல்லஸ்’ நகரித்தில் இருக்கும் இயந்திர பொறியியல் கட்டிட நிறுவனமான சொளத்லாந்து இண்டஸ்ட்ரீஸ்ஸின் மிட்-அட்லாண்டிக் பிரிவின் தலைவரான மைக் மில்லெர் தெரிவித்திருக்கிறார்.

 

ஒட்டுமொத்த மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கட்டிட உருவாக்க பாணி என்பது வெகுவாக மேம்பட்டு வருகிறது என்றும், இதற்கு உலகளாவிய போக்குவரத்தும் இணையம் போன்ற தகவல் தொடர்பும் தான் காரணம் என மில்லர் வரையறுக்கிறார்.

 

5. திட்டமிட்ட ஒருங்கிணைப்பு
இதுவும் ஒருவித கட்டிட உருவாக்க பாணிதான். சிறிய புராஜெக்டுகளை விட பெரிய புராஜெக்டுகளில் திட்டமிட்ட ஒருங்கிணைப்பு நிச்சயம் தேவைப்படும். ஒரு புராஜெக்டின் பொறுப்பு என்பது திட்ட மேலாளரைச் சார்ந்தது. அவரிடம் பல்வேறு விதமான குழுக்களும் ஒப்பந்ததாரர்களும் பணிபுரிவார்கள். 
அடித்தளம் அமைப்பதற்கு, கான்கிரீட் உருவாக்குவதற்கு, ரீ-இன்ஃபோர்ஸ்மென்ட் பணிகளைச் செய்வதற்கு, பில்லர்கள், பீம்கள், தளங்கள், கூரைகள் அமைப்பதற்கு, சுவர் & பார்டிஷன் பணிகளைச் செய்வதற்கு, தரைகளை அமைப்பதற்கு, சுவர்மேற்பூச்சிற்கு, கதவு, ஜன்னல்கள், பாத்ரூம் ஃபிட்டிங்கள் பொருத்துவதற்கு, இன்டீரியர் பணிகளுக்கு என தனித்தனி குழுக்களையும் ஒப்பந்தக்காரர்களையும் ஒருங்கிணைப்பதுதான் புராஜெக்ட் மேலாளரின் பணி.


இது தவிர, பிளம்பிங், பெயிண்டிங், எலெக்ட்ரிஷியன் என பல்வேறு வகையான பணிகள் உள்ளன. இப்பணிகளை திட்டமிடுதல், பணிகளுக்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்தல், பாதுகாத்து வைத்தல், பணிகளைச் செய்வதற்கான காலநேரத்தைக் குறித்தல், பணிகளின் தன்மை மற்றும் தரத்தினை ஆராய்தல் என திட்ட ஒருங்கிணைப்பு வேலைகளின் கூறுகளை விவரித்துக்கொண்டே போகலாம்.

 

10 கட்டுமானத் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திலும் சரி, 100க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்கள் பணிபுரியும் புராஜெக்டிலும் சரி, திட்டமிட்ட ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம். இதனை முறையாக பயன்படுத்தக் கூடிய அளவிற்கு உலக நாடுகள் பெரும்பாலும் நல்ல சிவில் பொறியியல் அறிவைப் பெற்று வருகின்றன.குறிப்பிட்ட 5 மாற்றங்கள் கட்டிடத்துறையின் வளர்ச்சியை நன்கு மேம்படுத்தும் என உறுதியாக நம்பலாம்.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு...8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067559