மண் அள்ளும் ராட்­சசன் !

24 ஜனவரி 2024   05:30 AM 24 அக்டோபர் 2018   10:45 AM


மண் அள்ளும் இயந்திரங்களில் அவ்வபோது பிரம்மாண்டவையாக வடிவமைக்கப்படுவது சுரங்கம் தொடர்பான இயந்திரங்கள் தான். இது போன்ற இயந்திரங்களை தயாரிக்கும் P&H நிறுவனம் தற்போது புதிதாக 4100 XPC என்கிற உலகின் மிகப்பெரிய மண் அள்ளும் இயந்திரத்தை தயாரித்திருக்கிறது.

 

இதை சாதாரண மண் அள்ளும் இயந்திரம் என்ற வகையில் சேர்க்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு மினி கப்பல் போன்ற பிரம்மாண்ட தோற்றத்தில் காணப்படும் இந்த இயந்திரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பக்கெட்டின் அளவு கிட்டத்தட்ட உங்கள் வீட்டின் படுக்கையறையின் அளவை ஒத்திருப்பதாகும். அதாவது நம் ஊர் டிப்பர் லாரியை லோட் செய்வதற்கு இந்த இயந்திரத்தை இருமுறை இயக்கினால் போதும். அடிப்பாகம் திறப்புடைய இந்த இயந்திரத்தின் மூலம் 30 விநாடிகளில் 120 டன் அளவுகொண்ட மணல் அல்லது தாதுக்களை அள்ள முடியும். கம்ப்யூட்டர், வயர்லஸ், வாக்கிடாக்கி, கன்ட்ரோல் பேணல், ஆப்பரேட்டர் ரூம் என சகல வசதிகளும் இதில் அமையப்பெற்றிருக்கிறது என்பது 
குறிப்பிடத்தக்கது.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067556